தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷின் பேச்சை ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர் அந்த துறை அமைச்சரானது துரதிஷ்டம் என சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சாமி தரிசனம் செய்த பிறகு முன்னாள் அமைச்சர் சேகர்பாபு பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “நாங்கள் மக்களோடு பயணிப்பவர்கள். கிட்டதட்ட என் பொது வாழ்க்கையை எடுத்துக் கொண்டால் 48 ஆண்டுகளாக அரசியலில் இருக்கிறேன். அந்த அனுபவம் கூட அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷின் வயது இல்லை. நாங்கள் ஐயப்ப சரணம் சொல்வது மாதிரி கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை என்பது போல பல தடைகளை கடந்தவர்கள். அமைச்சர் ரமேஷ் தற்போது தான் அரசியலில் நுழைந்திருக்கிறார். அவர் அறிவுக்களஞ்சியமாகவே இருக்கட்டும். தேவைப்படுபவர்களுக்கு அறிவை கொடுத்தால் வாங்கி கொள்ளட்டும்.

மதுராந்தகம் இடைத்தேர்தல் – பிரச்சாரம்!

பாசமிகு கழகத் தலைவர் திரு.@mkstalin அவர்களின் நல்வழிகாட்டுதலின்படி, மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் கழக வேட்பாளர் திரு. இ.பரந்தாமன் அவர்களை ஆதரித்து, காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர்கள் திரு. தா.மோ. அன்பரசன், திரு. க.சுந்தர் (1/3) pic.twitter.com/UD9vn0x2rh

— P.K. Sekar Babu (@PKSekarbabu) September 29, 2026

எங்களுக்கு ஏதாவது உபதேசம் தந்தால் கூட ஏற்றுக் கோள்கிறோம். அமைச்சர் ரமேஷின் பேச்சை, உடல் மொழியை, செயல்பாடுகளை நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு திருக்கோயிலுக்கு சென்றால் கூட அந்த மூலவரை அவர் தரிசிப்பது கூட இல்லை. கோயிலுக்குள் கூட ரீல்ஸ் போடும் பழக்கத்தை வைத்திருப்பவர். ராஜகோபுரத்துக்கு கூட ஷூ காலுடன் செல்பவர். முறுக்கு கூட உற்பத்தியாகும் நேரத்தை கேட்கக்கூடிய ஒரு அமைச்சரை பெற்றிருப்பது இந்து சமய அறநிலையத்துறையின் துரதிஷ்டம் என்று தான் சொல்வேன்.

தவெகவைப் பொறுத்தவரை சினிமா டிக்கெட்டிற்கும், குடமுழுக்கு டிக்கெட்டிற்கும் வித்தியாசம் தெரியவில்லை. எப்படி சினிமா டிக்கெட்டை கள்ள மார்க்கெட்டில் விற்பார்களோ, அதேபோல் மீனாட்சியம்மன் குடமுழுக்கு டிக்கெட்டை கள்ளச்சந்தையில் விற்பனை செய்ததை மதுரை மக்களே வெளிக்காட்டியிருக்கிறார்கள். நாம் ஒன்றும் யுத்த களத்தில் நிற்பவர்கள் இல்லை. ஜனநாயக ரீதியாக திமுக அரசியல் செய்யும். சட்டமன்றத்தில் மோதலை உருவாக்கும் வகையில் உணர்ச்சியை தூண்டும் வகையில் ஆதவ் அர்ஜூனா பேசி வருகிறார். திமுக பல காட்டாறு, நெருப்பாறுகளை தாண்டி வந்த இயக்கம். அப்பாவை கூப்பிடு, தாத்தாவை கூப்பிடு என சொல்கிறார். அப்படி சொல்ல எங்களுக்கு வரலாறு இருக்கிறது.

ஆதவ் அர்ஜூனா அவரது மாமனார் மார்ட்டினை தான் கூப்பிட வேண்டும். தமிழக அரசியல் களத்தில் 78 ஆண்டுகள் பயணித்த இயக்கத்தை மிரட்டும் வகையில் பேசுவது ஆதவ் அர்ஜூனாவின் மடமையை காட்டுகிறது” என சேகர்பாபு தெரிவித்துள்ளார். அவர் தற்போது மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் பரந்தாமனை ஆதரித்து தீவிரமாக வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source: Read Full Article