Perungalathur Road Over Bridge: 2 வருட வெயிட்டிங்..! பெருங்களத்தூர் மேம்பால கடைசி கிளை ரெடி - GST ரோட் காலி, ஃப்ரீயா போகலாம்

Perungalathur Road Over Bridge: 2 வருட வெயிட்டிங்..! பெருங்களத்தூர் மேம்பால கடைசி கிளை ரெடி - GST ரோட் காலி, ஃப்ரீயா போகலாம்
News Image

Perungalathur Road Over Bridge: தாம்பரம் - பெங்களத்தூர் இடையேயான பயணத்திற்கு இனி ஜிஎஸ்டி சாலையை மட்டுமே சார்ந்து இருக்க வேண்டிய அவசியமில்லை.

தாம்பரம் டூ பெருங்களத்தூர் மேம்பாலம்:

ஜிஎஸ்டி சாலையின் தாம்பரம்-பெருங்களத்தூர் பகுதியில் வாகனப் போக்குவரத்து இனி கணிசமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. காரணம் காந்தி சாலையில், தாம்பரம் கிழக்கு புறவழிச்சாலையை நோக்கிய பெருங்களத்தூர் சாலை மேம்பாலத்தின் (ROB) இறுதி 250 மீட்டர் நீளப் பணிகளை மாநில அரசு நிறைவுசெய்துள்ளது. தொடர்ந்து இன்று அது பொதுமக்கள் பயன்பாட்டிற்காகவும் திறந்துவைக்கப்பட உள்ளது. மொத்தம் 15 மீட்டர் அகலத்தில் இருவழிப் பாதையை கொண்டுள்ள இந்த வழித்தடம், மேம்பாலத்தில் திட்டமிடப்பட்ட ஆறு கிளைப்பாதைகளில் கட்டி முடிக்கப்பட்ட கடைசிப் பகுதியாகும்.

பணிகளில் 2 வருட தாமதம்

பெருங்களத்தூர் அருகே தாம்பரம் மற்றும் வண்டலூர் ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள லெவல் கிராசிங் கேட் 32-க்கு மாற்றாகவே, இந்த 6 கிளைப்பாதைகளுடன் கூடிய மேம்பாலம் திட்டமிடப்பட்டது. அதன்படி, பெருங்களத்தூர் சாலை மேம்பாலத்தின் பணிகள் 235 கோடி ரூபாய் செலவில் 2019ம் ஆண்டு தொடங்கப்பட்டது. முதற்கட்ட பணிகள் முடிவடைந்த நிலையில், வண்டலூர் மற்றும் தாம்பரத்தை இணைக்கும் முதல் இரண்டு கிளைப்பாதைகள் 2022ம் ஆண்டு திறக்கப்பட்டன.  2024ம் ஆண்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது. எஸ்.ஆர். சாலையில் புதிய பெருங்களத்தூரை நோக்கிய இணைப்புச் சாலை ஜூன் 2023-ல் திறக்கப்பட்டது. தாம்பரத்தை வண்டலூரை நோக்கி இணைக்கும் இரண்டு இணைப்புச் சாலைகள் ஆகஸ்ட் 2024-ல் திறக்கப்பட்டன. ஆனாலும், கடைசி கிளைப்பணிகளுக்கான நில கையகப்படுத்தலில் சிக்கல் நிலவி வந்தது.

கடைசி கிளைப்பாதை இன்று திறப்பு

குறிப்பாக இந்த பாதையில் 33/11 kV துணை மின் நிலையம் ஒன்று அமைந்திருந்ததால், அதன் கட்டுமானப் பணிகள் ஏறக்குறைய இரண்டு ஆண்டுகள் தாமதமாயின. இந்நிலையில் நான்கு மாதங்களுக்கு முன்பு, துணை மின் நிலையத்தை இடமாற்றம் செய்வதற்காகவும், அதற்கான நிலத்தைக் கையகப்படுத்துவதற்காகவும் மாநில நெடுஞ்சாலைத் துறை, டான்ஜெட்கோ நிறுவனத்திற்கு 32 கோடி ரூபாய் செலுத்தியது. அதன் தொடர்ச்சியாக நிறைவுபெற்றுள்ள கடைசி கிளைப்பாதையானது, இன்று முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட உள்ளது.

போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு தீர்வு:

புதிய நான்கு வழிச் சாலை திறக்கப்படுவதால், தாம்பரம், மப்பேடு, திருவாஞ்சேரி மற்றும் அருகிலுள்ள பகுதிகளைச் சேர்ந்த வாகன ஓட்டிகள், ஜிஎஸ்டி சாலையைத் தவிர்த்து, பெருங்களத்தூர் மேம்பாலம் வழியாக வண்டலூர் மற்றும் செங்கல்பட்டு நோக்கிப் பயணிக்கலாம். இது பிரதான சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கணிசமாக குறைக்க உதவும். மேலும் வாகன ஓட்டிகள் பெருங்களத்தூர் மேம்பாலம் வழியாக கிழக்கு புறவழிச்சாலையை நோக்கி தாம்பரத்தின் கிழக்குப் பகுதிகளைச் சென்றடைய வழிவகுக்கும். பண்டிகைக் காலங்களில், செங்கல்பட்டிலிருந்து சென்னை திரும்பும் வாகன ஓட்டிகள், கிழக்கு தாம்பரத்தில் உள்ள சிட்லபாக்கம், ராஜகீழ்பாக்கம் மற்றும் பிற பகுதிகளை அடைய, இந்து மிஷன் கல்லூரி அருகே யூ-டர்ன் எடுக்க வேண்டியிருந்தது. ஆனால் தற்போது மேம்பாலத்தைப் பயன்படுத்தி எந்த சிரமமும் இன்றி இந்தப் பகுதிகளை அடையலாம்.

இதையும் படியுங்கள்: Fishermen Alert: தமிழக மீனவர்களுக்கான எச்சரிக்கை..! இன்று கடலில் எந்தெந்த பகுதிகளுக்கு செல்லக்கூடாது - வானிலை

6 வழி சாலையாக விரிவுபடுத்த திட்டம்

கிழக்கு புறவழிச்சாலையில், மேம்பாலத்தின் தொடக்கப் புள்ளியிலிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில், ஆறு வழிச்சாலையான காந்தி சாலையானது, ஒரு பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி வழியாகச் செல்கிறது. அந்த பகுதியில் மட்டும் சாலையானது ​​சுமார் 750 மீட்டருக்கு இரண்டு வழிப்பாதையாக குறுகுகிறது. சாலையை அகலப்படுத்தத் தேவைப்படும் வனப்பகுதிக்கு மாற்றாக மாற்று நிலம் வழங்குவதற்கான ஒரு முன்மொழிவுக்கு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஏற்கனவே ஒப்புதல் அளித்துள்ளார். அதன்படி 750 மீட்டர் நீளப் பகுதி ஆறு வழிச்சாலையாக அகலப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இந்தப் பணிகள் முடிந்ததும், வாகன ஓட்டிகள் மேம்பாலம் வழியாக மப்பேடு மற்றும் சேலையூரை நேரடியாகச் சென்றடையலாம், இதனால் பயண நேரம் வெகுவாக குறையும்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks