PAK vs ENG: ஆர்ச்சர், அட்கின்சன் எல்லாம் ஓரம்போ.. 8வது விக்கெட்டிற்கு இறங்கி 9 சிக்ஸர் விளாசிய பாகிஸ்தான் இளம் பவுலர்!

PAK vs ENG: ஆர்ச்சர், அட்கின்சன் எல்லாம் ஓரம்போ.. 8வது விக்கெட்டிற்கு இறங்கி 9 சிக்ஸர் விளாசிய பாகிஸ்தான் இளம் பவுலர்!
News Image

PAK vs ENG: பாகிஸ்தான் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் ஆடி வருகிறது. இரு அணிகளும் மோதிய முதல் இரு டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்த நிலையில், 3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது.

ஆட்டத்தை மாற்றிய ரசவுல்லா:

பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 133 ரன்களில் அவுட்டாக, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 453 ரன்கள் எடுத்து அவுட்டானது. தொடர்ந்து 2வது இன்னிங்சை ஆடிய பாகிஸ்தான் அணிக்கு சையூம் ஆயூப், ஷஃபிக் டக் அடுத்தடுத்து டக் அவுட்டாக ஷான் மசூத் பொறுப்புடன் ஆடி 95 ரன்களும், கேப்டன் பாபர் அசாம் பொறுப்புடன் ஆடி 76 ரன்களும் எடுத்தனர்.

அடுத்து வந்த காஸி 16 ரன்களுக்கும், முகமது இம்ரான் 4 ரன்களுக்கும் அவுட்டாக 318 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை பாகிஸ்தான் இழந்தது. எஞ்சிய 2 விக்கெட்டுகளை எளிதில் வீழ்த்திவிடலாம் என்று இங்கிலாந்து கருதிய நிலையில், அதை தவிடுபொடியாக்கினார் வேகப்பந்துவீச்சாளர் ரசவுல்லா.

சிக்ஸர், பவுண்டரி:

9வது விக்கெட்டிற்கு களமிறங்கிய ரசவுல்லா டி20 போல ஆடினார்.   இங்கிலாந்தின் பலமிகுந்த பந்துவீச்சாளர் ராபின்சன், ஆர்ச்சர், அட்கின்சன், டங் என யார் வீசினாலும் பவுண்டரியும், சிக்ஸரும் விளாசினார்.

9 சிக்ஸர்:

All 8 sixes of Razaullah Today pic.twitter.com/3rsxElqoxw
— Jered William Jr. (@Jeredwilliam) September 11, 2026

குறிப்பாக, அட்கின்சன் வீசிய ஒரே ஓவரில் 3 சிக்ஸர்களை பறக்கவிட்டார். டான் லாரன்ஸ் வீசிய ஓவரில் ரசவுல்லா விளாசிய சிக்ஸர் மைதானத்தை விட்டு வெளியேறி அருகில் உள்ள கட்டிடத்திற்குச் சென்றது. 312 ரன்கள் இருந்தபோது உள்ளே வந்த ரசவுல்லா 63 பந்துகளில் 4 பவுண்டரி 9 சிக்ஸருடன் 81 ரன்கள் எடுத்து பாகிஸ்தான் 449 ரன்கள் எடுத்தபோது கடைசி விக்கெட்டாக வெளியேறினார்.

பாகிஸ்தானின் தொடக்க வீரர்கள், மிடில் ஆர்டரை நிலைகுலையச் செய்த இங்கிலாந்து பந்துவீச்சாளர்களை ரசவுல்லா நிலைகுலையச் செய்தார். அவருக்கு வீரர்கள், ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

130 ரன்கள் இலக்கு:

தற்போது இந்த போட்டியில் பாகிஸ்தான் 129 ரன்கள் முன்னிலையுடன் உள்ளது. இதனால், இங்கிலாந்து அணிக்கு 130 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 21 வயதே ஆன ரசவுல்லா பாகிஸ்தான் அணியின் புதிய ஆல்ரவுண்டராக கிடைத்துள்ளார். ரசவுல்லா முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தார்.

இந்த தொடரில் முதல் 2 போட்டியில் தாேல்வி அடைந்த பாகிஸ்தான் இந்த போட்டியில் வெற்றி பெறுவதற்கும் வாய்ப்புகள் குறைவு ஆகும். ஆனாலும், முகமது அப்பாஸ், முகமது அலி, ரசவுல்லா, இம்ரான் ஆகியோர் சிறப்பாக பந்துவீசினால் பாகிஸ்தான் வெற்றி பெறலாம்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks