விண்ணப்பித்து ஆண்டுகளாக காத்திருக்கும் பாகிஸ்தான் - கண்டுகொள்ளாதா BRICS அமைப்பு- கார்ட் வருமா?

விண்ணப்பித்து ஆண்டுகளாக காத்திருக்கும் பாகிஸ்தான் - கண்டுகொள்ளாதா BRICS அமைப்பு- கார்ட் வருமா?
News Image

BRICS Membership: ப்ரிக்ஸ் அமைப்பிற்கு இந்தியா தலைமை தாங்கி வரும் நிலையில், அதன் புதிய உறுப்பினராக 29 நாடுகள் விண்ணப்பித்துள்ளனவாம்.

காத்துக்கிடக்கும் பாகிஸ்தான் - மறுக்கும் இந்தியா

ப்ரிக்ஸ் அமைப்பின் உச்சி மாநாட்டை இந்தியா தலைமை தாங்கி டெல்லியில் நடத்தி வருகிறது. பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய வளர்ந்து வரும் பொருளாதார நாடுகள் அடங்கியதே இந்த கூட்டமைப்பாகும். கடந்த ஆண்டு இதில்  எகிப்து, எத்தியோப்பியா, ஈரான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நான்கு புதிய உறுப்பு நாடுகளும் அங்கீகரிக்கப்பட்டு பிரிக்ஸ்+ என அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த கூட்டமைப்பில் சேர்வதற்காக கடந்த 2023ம் ஆண்டிலேயே விண்ணப்பித்தாலும், இதுநாள் வரை அதற்கான ஒப்புதலை பெற முடியாமல் பாகிஸ்தான் தவித்து வருகிறது. கூட்டமைப்பில் இந்தியா கொண்டுள்ள வீட்டோ அதிகாரம் முலம், பாகிஸ்தான் உறுப்பினராவது தொடர்ந்து தடுக்கப்பட்டு வருகிறது.

நிதி சிக்கலில் பாகிஸ்தான்

ப்ரிக்ஸ் கூட்டமைப்பில் உறுப்பினராக விண்ணப்பித்துள்ள 29 நாடுகளில் பாகிஸ்தானும் ஒன்றாகும். இந்தக் கூட்டமைப்பில் சேர்வதற்கான அதன் முயற்சிக்கு முக்கியக் காரணம் அதன் பொருளாதாரச் சவால்களே ஆகும். பொருளாதார ஆய்வின்படி, பாகிஸ்தானின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் 3.70 சதவிகிதமாக உள்ளது. தனது நிதி ஆதாரங்களைப் பன்முகப்படுத்தவும், உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் மீதான சார்பைக் குறைக்கவும், பாகிஸ்தான் ப்ரிக்ஸ் ஆதரவு பெற்ற புதிய மேம்பாட்டு வங்கியில் 580 மில்லியன் டாலர் பங்குகளை வாங்கியுள்ளதாக நிக்கேய் ஆசியா வெளியிட்ட அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.

ஏற்றுமதியில் ஏற்றம் கண்ட இந்தியா..!

உலககின் தெற்கு பகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு முக்கியக் குழுவாக, இந்த கூட்டமைப்பின் அங்கீகாரம் வளர்ந்து வரும் நேரத்தில் இதில் இணைவதில் பாகிஸ்தான் தீவிரம் காட்டுகிறது. விரிவாக்கப்பட்ட இந்தக் கூட்டமைப்பு, தற்போது உலகின் மக்கள்தொகையில் சுமார் 49 சதவிதத்தையும், வாங்கும் சக்தி சமநிலை அடிப்படையில் உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 40 சதவிகிதத்தையும் கொண்டுள்ளது. ப்ரிக்ஸ் நாடுகளுடனான இந்தியாவின் சொந்த வர்த்தகமும் கணிசமாக வளர்ந்துள்ளது. இந்த கூட்டமைப்பிற்கான அதன் ஏற்றுமதி 48.8 சதவிகிதம் அதிகரித்து, 64.3 பில்லியன் அமெரிக்க டாலரிலிருந்து 95.7 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது. பாகிஸ்தானின் விண்ணப்பம் தொடர்பாக நவம்பர் 2023-ல், வெளியுறவு அலுவலக செய்தித் தொடர்பாளர் பேசுகையில், “பாகிஸ்தான் ப்ரிக்ஸ் கூட்டமைப்பில் சேர விரும்புவதாகவும்,அந்நாடு பெரும்பாலான பிரிக்ஸ் உறுப்பு நாடுகளுடன் நல்லுறவைக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

CM Vijay: முன்னாள் தலைமை செயலாளர் உதயநிதி அரெஸ்டில் உதவினாரா? IPS மாற்றம், புதிய பதவி - விஜய் ப்ளான்

தொடர்ந்து மறுக்கும் இந்தியா..!

பாகிஸ்தானை உறுப்பு நாடாக கொண்டு வர சீனா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகள் ஆதரவளித்தாலும், அதில் இறுதி முடிவு எட்டமுடியாத நிலை தொடர்கிறது.  காரணம் கூட்டமைப்பின் ஒருமித்த கருத்தின் அடிப்படையிலான சேர்க்கை விதிகளின்படி, இந்தியாவின் எதிர்ப்பு ஒரு தகர்க்க முடியாத தடையாக தொடர்கிறது. அந்த விதிகளின்படி, புதிய உறுப்பினர் ஒருவரை அங்கீகரிக்க முழு நேர உறுப்பினர் அல்லது கூட்டாளர் நாடுகள், தற்போதுள்ள அனைத்து உறுப்பு நாடுகளின் ஒருமித்த ஒப்புதலைப் பெற வேண்டும்.

ப்ரிக்ஸ் உறுப்பினர்களுக்கு கிடைக்கும் பலன்கள் என்ன?

உலக வங்கி போன்ற பாரம்பரிய மேற்கத்திய தலைமையிலான நிறுவனங்களைத் தவிர்த்து, உறுப்பினர்கள் புதிய மேம்பாட்டு வங்கி வாயிலாக கடன்கள் மற்றும் உள்கட்டமைப்பு நிதியுதவியைப் பெறலாம்

நிதி நெருக்கடிகளின் போது குறுகிய கால பணப்புழக்கம் மற்றும் நாணய மாற்று பாதுகாப்புகளை வழங்குகிறது

உறுப்பினர்கள் உள்ளூர் தேசிய நாணயங்களைப் பயன்படுத்தி வர்த்தகம் செய்வதை ஊக்குவிக்கின்றனர். இது அந்நிய செலாவணி அபாயங்களைக் குறைத்து, அமெரிக்க டாலரைச் சார்ந்திருப்பதையும் தணிக்கிறது.

உறுப்பினர்கள் ஆசியா, ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் லத்தீன் அமெரிக்கா முழுவதும் பரந்துள்ள மிகப்பெரிய நுகர்வோர் தளங்களில் ஆழமான வணிகத் தொடர்புகளைப் பெறுகிறார்கள்

கூட்டு கட்டமைப்புகள் சுங்க விதிகளை நெறிப்படுத்தவும், உள்நாட்டு வரிகளைக் குறைக்கவும், மற்றும் முக்கிய தொழில்துறை மூலப்பொருட்களைத் திட்டமிடவும் உதவுகின்றன

கூட்டு ஒத்துழைப்பு, வளரும் நாடுகளிடையே அதிக எல்லை தாண்டிய நேரடி வெளிநாட்டு முதலீட்டு வரவுகளை ஊக்குவிக்கிறது

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் பிரதிநிதித்துவத்தை விரிவுபடுத்துவது உட்பட, சீர்திருத்தப்பட்ட பலதரப்பு அமைப்புகளுக்காக இந்த கூட்டமைப்பு தீவிரமாகப் பரப்புரை செய்கிறது

வளரும் நாடுகள், ஒரே ஒரு உலகளாவிய அதிகார மையத்தைச் சார்ந்திருக்காமல், சுதந்திரமான வெளியுறவுக் கொள்கைகளையும் பன்முக அணிசேர்வையும் பேணுவதற்கு இந்தத் தளத்தைப் பயன்படுத்துகின்றன

பயங்கரவாத எதிர்ப்பு உத்திகள், காலநிலை கொள்கை மற்றும் எரிசக்தி பாதுகாப்பு ஆகியவற்றில் உறுப்பினர்கள் கட்டமைக்கப்பட்ட வழிமுறைகள் மூலம் ஒருங்கிணைந்து செயல்படுகின்றனர்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks