Nirmalkumar On Stalin: திமுக ஆட்சிக்காலத்தில் ஜெம் க்ராணைட் வீரமணி விவகாரம் ஏன் மூடி மறைக்கப்பட்டது? என அமைச்சர் நிர்மல்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

சோலார் பேனலுக்கு மானியம்:

வீட்டின் கூரை மேல் சோலார் பேனல்களை அமைத்து மின்சாரம் உற்பத்தி செய்யும் நபர்களுக்கு, மாநில அரசு சார்பில் மானியம் வழங்கும் திட்டத்தை அமைச்சர் நிர்மல்குமார் சென்னையில் இன்று தொடங்கி வைத்தார். மத்திய அரசு சார்பில் பிரதமர் சூர்ய கர் திட்டத்தின் மூலம், சோலார் பேனல் வாயிலாக 3KW வரை மின்சாரம் உற்பத்தி செய்பவர்களுக்கு 78 ஆயிரம் ரூபாய் வரையில் மானியம் வழங்கப்படுகிறது. அதோடு கூடுதலாக இனி மாநில அரசு சார்பில் அதிகபட்சமாக 22 ஆயிரம் ரூபாய் வரை மானியம் வழங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தை தொடங்கி வைத்த பிறகு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், தவெக அரசில் மின்வெட்டு மற்றும் அரிவாள் வெட்டிற்கு இடையே தான் கடும் போட்டி நிலவுகிறது என முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலினின் விமர்சனம் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.

மின்வெட்டை தீர்க்க நடவடிக்கை:

அதற்கு பதிலளிக்கையில், “ஸ்டாலின் அதை மட்டும் சொல்லவில்லை. கொளத்தூர் மக்களுக்கு நன்றியும் கூறியுள்ளார். இதன் மூலம் தனது அரசியல் பயணத்திற்கு முடிவுரை எழுதியுள்ளார். என்ன விமர்சனங்கள் வந்தாலும் அதை ஆக்கப்பூர்வமாக எடுத்துக்கொண்டு பணி செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம். மின் தட்டுப்பாடு எங்கெல்லாம் உள்ளதோ அதை நிவர்த்தி செய்ய முழு அளவில் பணியாற்றி வருகிறோம். சட்ட ஒழுங்கு விவகாரத்திலும் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

ஜெம் க்ராணைட் வீரமணி விவகாரத்தில் அமைதி ஏன்?

ஜெம் க்ராணைட் வீரமணி விவகாரம் எப்போது வந்தது? எந்த காலத்தில் புகார் அளிக்கப்பட்டது? சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக வீடியோ ஆதாரங்கள் இருந்தும், அவர் மீதான நடவடிக்கைகள் யார் உத்தரவால் நிறுத்தப்பட்டன? அப்போது முதலமைச்சராக இருந்த ஸ்டாலினுக்கு இதைபற்றி தெரியாதா? அவர் தானே அப்போது சட்ட-ஒழுங்கு விவகாரத்தை கையாண்டு வந்தார். இந்த பெரிய விவகாரமானது, ஸ்டாலினுக்கு நன்கு அறிந்த நபரால் செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் ஏன் அவரது ஆட்சி காலத்தில் மூடி மறைக்கப்பட்டது?

இதையும் படியுங்கள்: Marie Wilson: ”அண்ணாமலையை Matured அரசியல்வாதி என நினைத்தேன்” லண்டன் பயணம் மரிய வில்சன் விளக்கம்

யார் யாரிடம் பணத்தை பெற்றார்கள்?

பொள்ளாச்சி சம்பவத்திற்கு நிகரான ஒரு குற்றத்தை வீரமணி நிகழ்த்தியுள்ளார். அதுதொடர்பாக திமுக ஆட்சியில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனால் தவெக ஆட்சியில் தங்கு தடையுமின்றி குற்றவாளி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வழக்கு விசாரணையும் முறைப்படி நடைபெறும். தலைநகர் சென்னையில் திமுக ஆட்சி காலத்தில் நடந்த இந்த சம்பவத்தில் யார் யாரிடம் பணத்தை பெற்றுக்கொண்டு குற்றவாளிகளை தப்பிக்கவிட்டனர் என ஸ்டாலின் பதில் சொல்ல வேண்டும். அதைவிட்டு விட்டு தனது அரசியலை முடித்துக்கொள்ளும் வகையில் கொளத்தூர் மக்களுக்கு நன்றி சொல்வதை எல்லாம் செய்ய வேண்டாம் என சொல்லுங்கள்” என அமைச்சர் நிர்மல்குமார் வலியுறுத்தியுள்ளனர்.

கடந்த திமுக ஆட்சி காலத்திலேயே வீரமணி தொடர்பான புகார்கள் எழுந்தாலும், அந்த வழக்கை முடித்து வைக்க காவல்துறை முனைப்பு காட்டியது. ஆனால், நீதிமன்ற உத்தரவின் பேரில் வழக்கை விசாரித்த தவெக அரசு வீரமணியை கைது செய்து சிறையிலடைத்துள்ளது. சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்தது தொடர்பான இந்த விவகாரத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றனர்.

Source: Read Full Article