New Passport Rules: பாஸ்போர்ட் விதிகளில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய மாற்றங்களின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

பாஸ்போர்ட் விதிகளில் மாற்றம்:

வெளியுறவு அமைச்சகமானது 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான போஸ்போர்ட் தொடர்பான விதிகளில் சில மாற்றங்களை கொண்டுவந்துள்ளது. அதன்படி, வழங்கப்படும் இயல்பான பாஸ்போர்ட்களின் ஆயுட்காலம் 5 ஆண்டுகளுக்கு அல்லது 18 வயது வரை, எது முதலில் வருகிறதோ அதுவரை பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 17 அன்று இந்திய அரசிதழில் வெளியிடப்பட்ட பாஸ்போர்ட்கள் (திருத்த) விதிகள், 2026 மூலம் இந்த மாற்றம் அறிவிக்கப்பட்டது. திருத்தப்பட்ட இந்த விதிகள், 1980 ஆம் ஆண்டின் பாஸ்போர்ட் விதிகளை மாற்றியமைக்கின்றன.

திருத்தப்பட்ட விதி 12(1A)-இன் கீழ், 15 வயதுக்குட்பட்ட ஒரு குழந்தைக்கு வழங்கப்படும் 36 பக்க சாதாரண பாஸ்போர்ட், விநியோகிக்கப்பட்ட தேதியிலிருந்து ஐந்து ஆண்டுகளுக்கு அல்லது அக்குழந்தை 18 வயதை அடையும் வரை, இவற்றில் எது முதலில் நிகழ்கிறதோ அதுவரை செல்லுபடியாகும்.

பாஸ்போர்ட்களுக்கான புதிய விதியின் விவரம்

புதிய விதியின் பொருள் என்பது, குறிப்பிட்ட காலக்கெடு முடிவதற்குள் ஒரு குழந்தைக்கு 18 வயது ஆகிவிட்டால், அக்குழந்தையின் பாஸ்போர்ட்டை முழு ஐந்து ஆண்டுகளுக்கும் பயன்படுத்த முடியாமல் தானாகவே காலவதியாகிவிடும். அத்தகைய நிலையில், 18 வயதை பூர்த்தி செய்த நபர்கள் வயதுவந்தோருக்கான பாஸ்போர்ட்டிற்கு விண்ணப்பித்து பெற வேண்டும்.

உதாரணமாக, ஒரு குழந்தைக்கு 15 வயது நிறைவடைவதற்குச் சற்று முன்பு பாஸ்போர்ட் வழங்கப்பட்டால், அதன் செல்லுபடி காலம் ஐந்து ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படலாம், ஆனால் அக்குழந்தைக்கு 18 வயது பூர்த்தியானவுடன் அது செல்லுபடியற்றதாகிவிடும். எனவே, திருத்தப்பட்ட விதிமுறையானது, பாஸ்போர்ட் வழங்கப்பட்ட நாளிலிருந்து ஐந்து ஆண்டுகள் அல்லது குழந்தையின் 18வது பிறந்தநாள், இவற்றில் எது முதலில் வருகிறதோ அதுவாக என, செல்லுபடி காலத்திற்கு இரண்டு வரம்புகளை நிர்ணயிக்கிறது. திருத்தப்பட்ட விதிகளின்படி, இந்த ஏற்பாட்டின் கீழ் வரும் குழந்தைகளுக்கு 36 பக்கங்களைக் கொண்ட ஒரு வழக்கமான பாஸ்போர்ட் வழங்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாஸ்போர்ட் விண்ணப்பக் கட்டணங்களிலும் திருத்தம்:

பாஸ்போர்ட் விண்ணப்பக் கட்டணங்கள் தொடர்பான விதி 8-ஐயும் வெளியுறவு அமைச்சகம் திருத்தியுள்ளது. அதன்படி, ஒவ்வொரு வகை விண்ணப்பத்திற்கும் செலுத்த வேண்டிய கட்டணம், விதிகளின் அட்டவணை IV-இல் குறிப்பிடப்பட்டுள்ளபடி இருக்கும். அந்த அறிவிப்பு கடந்த 16ம் தேதி வெளியிடப்பட்ட நிலையில், திருத்தப்பட்ட விதிகள் அதிகாரப்பூர்வ அரசிதழில் வெளியிடப்பட்ட தேதியிலிருந்து அமலுக்கு வந்தன. பாஸ்போர்ட் விதிகள், 1980, முதலில் டிசம்பர் 11, 1980 தேதியிட்ட ஜிஎஸ்ஆர் 691(இ) அறிவிப்பின் மூலம் வெளியிடப்பட்டன என்றும், அவை கடைசியாக ஜூன் 20, 2026 தேதியிட்ட ஜிஎஸ்ஆர் 156(இ) அறிவிப்பின் மூலம் திருத்தப்பட்டன என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்: Mid Air Clash: சட்டையை கிழித்து நடுவானில் மல்லுக்கட்டிய பயணிகள் - சரமாரியாக தாக்கிக் கொள்ளும் வீடியோ - காரணம்?

36 பக்க பாஸ்போர்ட் - ரூ.2,500

36 பக்க பாஸ்போர்ட் (தட்கல்) - ரூ.5,000

60 பக்க பாஸ்போர்ட் - ரூ.3,500

60 பக்க பாஸ்போர்ட் (தட்கல்) - ரூ.6000

15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான 36 பக்க பாஸ்போர்ட் - ரூ.1,750

15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான 36 பக்க பாஸ்போர்ட் (தட்கல்) - ரூ.3000

Source: Read Full Article