15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான பாஸ்போர்ட் செல்லுபடியாகும் காலம் தொடர்பான விதிகளில் மாற்றம் செய்து மத்திய வெளியுறவு அமைச்சகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி, 15 வயதுக்குட்பட்ட ஒரு குழந்தைக்கு வழங்கப்படும் 36 பக்கங்கள் கொண்ட சாதாரண பாஸ்போர்ட் வழங்கப்பட்ட தேதியிலிருந்து ஐந்து ஆண்டுகளுக்கு அல்லது அக்குழந்தை 18 வயதை அடையும் வரை இவற்றில் எது முந்தையதோ அதுவரை மட்டுமே செல்லுபடியாகும். அதுமட்டுமல்லாமல் பாஸ்போட் கட்டணங்கள் தொடர்பாகவும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

இந்தப் புதிய கட்டணங்கள் 2027ம் ஆண்டு ஜூலை 1 முதல் அமலுக்கு வருகின்றன. ஆனால் புது விதிகள் கடந்த செப்டம்பர் 15ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புது பாஸ்போர்ட் வழங்குதல், புதுப்பித்தல், அவரச பாஸ்போர்ட், தொலைந்த அல்லது சேதமடைந்ததற்கு பதிலாக புது பாஸ்போர்ட் வாங்குதல், காவல்துறை அனுமதிச் சான்றிதழ்கள் உள்ளிட்ட அனைத்து வகைகளுக்கும் இந்த கட்டணம் மாற்றம் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கான பாஸ்போர்ட் தொடர்பான கட்டணங்கள் கணிசமான அளவில் அதிகரித்துள்ளது.

அதாவது 36 பக்க பாஸ்போர்ட் இதற்கு முன்பு ரூ.1,500 ஆக இருந்த நிலையில் தற்போது ரூ.2,500 ஆகவும், 60 பக்க பாஸ்போர்ட் முன்பு ரூ.2,000 ஆக இருந்த நிலையில், தற்போது ரூ.3,500 ஆகவும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அவசர தேவைகளுக்காக விரைவாக பெறப்படும் தட்கல் பாஸ்போர்ட் 36 பக்கங்களுக்கு ரூ.3,500 ஆக இருந்த கட்டணத்தை ரூ.5,000 ஆகவும், 60 பக்க பாஸ்போர்ட் கட்டணம் முன்பு ரூ.4,000 ஆக இருந்த கட்டணத்தை ரூ.6,000 ஆகவும் உயர்த்தியுள்ளது. தட்கல் திட்டத்தின் கீழ் 60 பக்க பாஸ்போர்ட்டை மாற்றுவதற்கான கட்டணம் முன்பு ரூ.5,500 ஆக இருந்த நிலையில், இப்போது ரூ.8,500 ஆக உயர்ந்துள்ளது. 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு 36 பக்க புதிய பாஸ்போர்ட் கட்டணம் முன்பு ரூ.1,000 ஆக இருந்த நிலையில் இப்போது ரூ.1,750 ஆகவும், அதே தட்கல் பாஸ்போர்ட் கட்டணம் ரூ.3,000 ஆகவும் உயர்ந்துள்ளது.

8 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களின் புதிய பாஸ்போர்ட் விண்ணப்பங்களுக்கு 10% தள்ளுபடி தொடரும் என்றும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

உயர்த்தப்பட்ட விமான கட்டணம்

இதனிடையே பொதுமக்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் இண்டிகோ விமான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதுவும் குழந்தைகள் பயணம் செய்வதற்கான கட்டணம் 50 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இதுவரை இண்டிகோ விமானங்களில் குழந்தைகளுக்கான பயணக் கட்டணம் ரூ.2,000 ஆக இருந்த நிலையில் தற்போது அது ரூ.3,000 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. இந்த விதிமுறை 2 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்குப் பொருந்தும். இனி குழந்தைகளுக்கும் பயணச்சீட்டுகள் முன்பதிவு செய்ய வேண்டும். இருப்பினும் தனி இருக்கைகள் கிடைக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: Read Full Article