ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான பதற்றம் தணியவில்லை. ஈரான் வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்சி சமீபத்தில் இஸ்ரேலை தாக்கிப் பேசினார். அதைத் தொடர்ந்து, தற்போது இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, தங்களுடன் மோத முயற்சிக்க வேண்டாம் என ஈரானை எச்சரித்துள்ளார்.

நெதன்யாகுவின் அறிக்கை

இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஈரான் குறித்து ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளார் . அதில், "எங்களுடன் மோத முயற்சிக்காதீர்கள்" என்று கூறியுள்ளார். ஈரான் குறித்துப் பேசிய நெதன்யாகு, "இந்த அச்சுறுத்தலை நம்மால் நிரந்தரமாக ஒழிக்க முடியும், அதாவது இந்த ஆட்சியை நம்மால் கவிழ்க்க முடியும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்" என்றும் தெரிவித்துள்ளார்.

“எங்களுடன் மோத முயற்சிக்காதீர்கள்“

மேலும், "இதுவே நமக்கு முன்னால் இருக்கும் நமது முக்கியப் பணி, ஆனால் நாம் அதற்கு மிக அருகில் இருக்கிறோம். அது சாத்தியமற்றது அல்ல. அது நமது கைக்கு எட்டும் தூரத்தில்தான் உள்ளது... அவர்கள் காரணமின்றி நம்மை தாக்கத் தயங்குவதில்லை. அவர்கள் எல்லோரையும் தாக்குகிறார்கள். நம்மை மட்டும் அல்ல. நமது பலம், நமது ராணுவ சக்தி, நமது உறுதிப்பாடு ஆகியவற்றை அவர்கள் அறிவார்கள். நான் வழக்கமாக நமது எதிரிகளிடம் சொல்வதுண்டு: எங்களுடன் மோத முயற்சிக்காதீர்கள். நீங்கள் ஏதாவது கற்றுக்கொண்டிருந்தால், எங்களுடன் மோத முயற்சிக்காதீர்கள்." என்று நெதன்யாகு கூறியுள்ளார்.

אל תתעסקו איתנו pic.twitter.com/uvY9e6mgTk

— Benjamin Netanyahu - בנימין נתניהו (@netanyahu) September 3, 2026

நெதன்யாகு ஒரு பாம்பு என்று கூறிய ஈரான் வெளியுறவு அமைச்சர்

முன்னதாக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி சமீபத்தில் சமூக ஊடகங்களில் பகிர்ந்த ஒரு பதிவில், நெதன்யாகுவை ஒரு பாம்பு என்று கூறியிருந்தார். அது குறித்த அவரது பதிவில், "இஸ்ரேலின் சார்பாக ஈரானுக்கு எதிரான போருக்கு அமெரிக்க நிர்வாகத்தைத் தான் தூண்டியதாக நெதன்யாகு வெளிப்படையாகப் பெருமை பேசுகிறார். அமெரிக்க தொலைக்காட்சிகளில் 1,000 மணிநேர ஒளிபரப்பு நேரத்தின் மூலம் அமெரிக்காவை தான் எவ்வாறு பாதித்தேன் என்று நெதன்யாகு தெளிவாக சிரிக்கிறார். ஆங்கிலத்தில், அவர் அமெரிக்க அதிபரின் தலைமைத்துவத்தை புகழ்கிறார். பாம்பு." என்று கூறியிருந்தார்.

இதற்கு பதிலடியாகவே நெதன்யாகு தற்போது ஈரானை எச்சரித்துள்ளார். சிறிது காலமாக, இந்த போர் அமெரிக்கா-ஈரான் என்ற கோணத்திற்கு மாறியுள்ள நிலையில், தற்போது ஈரானின் சீண்டலால், இஸ்ரேல் மீண்டும் இந்த போருக்குள் தீவிரமாக இறங்குமா என்ற அச்சம் எழுந்துள்ளது.

Source: Read Full Article