பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இந்தியா வந்தடைந்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் இரு தலைவர்களும் ஒருவரையொருவர் அன்புடன் வரவேற்றனர். அவர்கள் கைகுலுக்கி, கட்டித்தழுவினர். பிரதமர் மோடி, அதிபர் புதினுக்கு திருக்குறளின் ரஷ்ய மொழி மொழிபெயர்ப்பை வழங்கினார்.

புதினிடம் புத்தகத்தை வழங்கியபோது, "இது திருவள்ளுவர் சாஹிப் எழுதிய புத்தகம். இது மனித விழுமியங்களைப் பற்றிய புத்தகம். இதை ரஷ்ய மொழியில் மொழிபெயர்க்க உத்தரவிட்டுள்ளேன். இது நமது உறவுகளை மேலும் வலுப்படுத்தும்," என்று பிரதமர் மோடி கூறினார்.

என்னென்ன பிரச்னைகள் விவாதிக்கப்பட உள்ளன.?

பிரதமர் மோடிக்கும் புதினுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளில், வர்த்தகம், அணுசக்தி, பாதுகாப்பு, பொருளாதார ஒத்துழைப்பு, போக்குவரத்து மற்றும் வணிக மேம்பாடு போன்ற விடயங்கள் விவாதிக்கப்படுகின்றன. ரஷ்யா-உக்ரைன் மற்றும் ஈரான்-அமெரிக்கா என இரண்டு பெரும் போர்கள் உலகளவில் தீவிரமாக நடந்து கொண்டிருக்கும் நேரத்தில், புதின் மற்றும் மோடியின் சந்திப்பு நடைபெறுகிறது. இரு தலைவர்களும், மோதலின் தற்போதைய நிலை மற்றும் உலகில் மாறிவரும் மூலோபாய இயக்கவியல் குறித்து விவாதிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

#WATCH | Delhi: Prime Minister Narendra Modi and Russian President Vladimir Putin hold a bilateral meeting on the sidelines of BRICS Summit 2026.

(Video Source: DD News) pic.twitter.com/KhlCIatMI2

— ANI (@ANI) September 11, 2026

இந்தியாவிற்கு எஸ்யு-57 ரக போர் விமானங்களை வழங்கும் விவகாரமும் புதினின் செயல்திட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

இருதரப்பு பேச்சுவார்த்தையில் என்னென்ன விடயங்கள் விவாதிக்கப்பட வாய்ப்புள்ளது.?

வர்த்தகம் (2030-க்குள் இருதரப்பு வர்த்தக இலக்கு $100 பில்லியன்)

முதலீடு

பாதுகாப்பு ஒத்துழைப்பு

கல்வி

கலாச்சார ஒத்துழைப்பு

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

கடல்சார் ஒத்துழைப்பு

போக்குவரத்து

Source: Read Full Article