MK Stalin: ஸ்டாலினுக்கு என்ன ஆச்சு? திமுக முப்பெரும் விழா கடைசி நேரத்தில் ஒத்திவைப்பு - துரைமுருகன் அறிவிப்பு

MK Stalin: ஸ்டாலினுக்கு என்ன ஆச்சு? திமுக முப்பெரும் விழா கடைசி நேரத்தில் ஒத்திவைப்பு - துரைமுருகன் அறிவிப்பு
News Image

DMK MK Stalin: திமுக தலைவர் ஸ்டாலின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில், அக்கட்சியின் முப்பெரும் விழா ஒத்திவைப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு

அண்ணா பிறந்த நாள், பெரியார் பிறந்த நாள் மற்றும் திமுக தோற்றுவிக்கப்பட்டதை ஒன்றாக கொண்டாடும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15ம் தேதி அக்கட்சி சார்பில் முப்பெரும் விழா கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் நடப்பாண்டிற்கான முப்பெரும் விழா இன்று நடைபெற இருந்தது. அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக செய்யப்பட்டு வந்தன. இந்நிலையில், இன்று திட்டமிடப்பட்டு இருந்த திமுக முப்பெரும் விழா ஒத்திவைக்கப்படுவதாக, அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். திமுக தலைவர் ஸ்டாலின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில், அக்கட்சியின் முப்பெரும் விழா ஒத்திவைப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஸ்டாலினுக்கு என்ன ஆச்சு?

வழக்கமாக முப்பெரும் விழாவின் போது அண்ணா நினைவிடத்திற்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்துவதை, திமுக தலைவர் ஸ்டாலின் வாடிக்கையாக கொண்டுள்ளார். ஆனால், இன்று காலை உதயநிதி மட்டுமே அண்ணா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி இருந்தார். ஸ்டாலின் அங்கு வரவில்லை. இதனால் ஸ்டாலின் ஏன் வரவில்லை, என்ன காரணம் என பல கேள்விகள் எழுந்தன. இதையடுத்து அறிவாலயம் சார்பில் வெளியான தகவலின்படி, லேசான அசௌகரியம் காரணமாகவே ஸ்டாலின் அண்ணா நினைவிடத்தில் மரியாதை செலுத்த வரவில்லை என கூறப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தற்போது இன்று சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் நடைபெறவிருந்த திமுக முப்பெரும் விழாவே ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மாற்று தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும், ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாகவும் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

திமுக விருதுகள்:

இந்த விழாவையொட்டி, திராவிட இயக்க வளர்ச்சிக்காகப் பங்காற்றிய மூத்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் கழக விருதுகளுக்கான தேர்வாளர்கள் பட்டியலை திமுக ஏற்கனவே வெளியிட்டு இருந்தது. அதன்படி,

பெரியார் விருது விவசாய அணி துணைச் செயலாளர் கு. செல்லப்பா

அண்ணா விருது - சேலம் மத்திய மாவட்ட அவைத் தலைவர் சேலம் ஜி.கே.சுபாஷ்

கலைஞர் விருது -துணைப் பொதுச் செயலாளரும், தி.மு.க.மாநிலங்களவை குழுத் தலைவருமான திருச்சி சிவா

பாவேந்தர் விருது - மருத்துவ அணித் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி என்.வி.என். சோமு

பேராசிரியர் விருது தலைமைச் செயற்குழு உறுப்பினர் மிசா எஸ். அகமது தம்பி

மு.க.ஸ்டாலின் விருது - இளைஞர் அணி துணைச் செயலர் நா. இளையராஜா ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்: Brics Summit: ப்ரிக்ஸ் மாநாட்டை நடத்தி முடித்த இந்தியா..! வன்மத்தை கக்கிய மேற்கத்திய ஊடகங்கள் - பயம் காரணமா?

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks