தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர் பாரதிதாசன் மலேசியாவில் படித்து வருகிறார். அவரது கல்வி உதவித்தொகையை தமிழக அரசு கவனித்து வருகிறது. தவெக ஆட்சி அமைந்தது முதலே அவருக்கு கல்வி உதவித்தொகை கிடைக்கவில்லை என்று அந்த மாணவர் ஏற்கனவே குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த நிலையில், தான் கோரிக்கை விடுத்தும் தமிழக அரசு தனது கோரிக்கையை நிறைவேற்றாத காரணத்தால் தன்னை கல்லூரியில் இருந்து நீக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அந்த மாணவர் வேதனையாக வீடியோ வெளியிட்டிருந்தார்.

இந்த விவகாரத்தில் மாணவருக்கு உரிய உதவியை அரசு செய்ய வேண்டும் என்று முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். தனது எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது,

நெஞ்சம் கனக்கிறது:

“எதைப் பற்றியும் கவலைப்படாமல் படியுங்கள். உங்களுக்கு என்ன தேவையென்றாலும் நமது அரசு நிறைவேற்றித் தரும்” என்ற நம்பிக்கையை முதலமைச்சராக ஒவ்வொரு மேடையிலும் விதைத்தவன் என்ற வகையில், இந்தத் தம்பியின் கண்ணீர் நெஞ்சைக் கனக்கச் செய்கிறது.

“எதைப் பற்றியும் கவலைப்படாமல் படியுங்கள். உங்களுக்கு என்ன தேவையென்றாலும் நமது அரசு நிறைவேற்றித் தரும்” என்ற நம்பிக்கையை முதலமைச்சராக ஒவ்வொரு மேடையிலும் விதைத்தவன் என்ற வகையில், இந்தத் தம்பியின் கண்ணீர் நெஞ்சைக் கனக்கச் செய்கிறது.

அவர் கேட்பது உதவியில்ல, அரசு சார்பில் அவருக்கு…

— M.K.Stalin (@mkstalin) September 17, 2026

அவர் கேட்பது உதவியில்ல, அரசு சார்பில் அவருக்கு உறுதியளிக்கப்பட்ட உரிமையைத்தான் கோருகிறார். ஆட்சி மாற்றம் ஏற்பட்ட காரணத்தாலேயே ஒரு மாணவரின் பல ஆண்டு உயர்கல்விக் கனவு பாழாகக் கூடாது.

அவப்பெயர் வேண்டாம்:

ரோகித் வெமுலாவுக்கு நடந்தது போல எனக்கும் நடக்கிறது என்கிறார். எங்களுக்கு எதிர்க்கட்சியாகவே இருந்தாலும் அப்படி ஒரு அவப்பெயரைத் த.வெ.க. அரசு சுமக்க வேண்டாம் என்பதே என் வேண்டுகோள்.

மாணவர் பாரதிதாசனுக்குத் தேவைப்படும் நிதியை வழங்கமுடியாது என்றால் அதனை முதலமைச்சர் வெளிப்படையாக அறிவித்துவிடவும். தி.மு.க.வும் தமிழ்நாட்டு மக்களும் அந்த மாணவருக்கான கல்விக் கட்டணத்தைக் கட்டிப் படிக்க வைப்போம்.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

தமிழக அரசு என்ன செய்யப்போகிறது?

மாணவர் பாரதிதாசனுக்கு ஆதரவாக பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றனர். இந்த விவகாரத்தில் மாணவருக்கு உரிய உதவியை அரசு செய்ய வேண்டும் என்று தவெக அரசுக்கு பல தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். இதனால், விரைவில் தவெக அரசு இந்த விவகாரத்தில் தக்க நடவடிக்கை எடுக்கும் என்று கருதப்படுகிறது.

தமிழ்நாட்டில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதியில் விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த விவகாரம் தமிழக அரசுக்கு பின்னடைவை உண்டாக்கும் சூழலும் உருவாகியுள்ளது.

Source: Read Full Article