Madurantakam By Election: மதுராந்தகம் மக்களே உஷார்! தேர்தல் விதிமீறலா? புகார் அளிக்க உடனே இந்த எண்களைத் தொடர்பு கொள்ளுங்கள்!

Madurantakam By Election: மதுராந்தகம் மக்களே உஷார்! தேர்தல் விதிமீறலா? புகார் அளிக்க உடனே இந்த எண்களைத் தொடர்பு கொள்ளுங்கள்!
News Image

செங்கல்பட்டு மாவட்டம், 35-மதுராந்தகம் (தனி) சட்டமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனையொட்டி, கடந்த 07.09.2026 முதல் தொகுதி முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. இந்த இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செப்டம்பர் 9-ஆம் தேதி புதன்கிழமை தொடங்கி, செப்டம்பர் 16-ஆம் தேதி புதன்கிழமை வரை நடைபெறுகிறது.

தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை செப்டம்பர் 17 வியாழக்கிழமை அன்று மேற்கொள்ளப்படும். வேட்பு மனுக்களை திரும்பப் பெற செப்டம்பர் 19 சனிக்கிழமை கடைசி நாளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, வாக்குப்பதிவு அக்டோபர் 6-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை நடைபெற்று, வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 9-ஆம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. தேர்தல் நடைமுறைகள் அனைத்தும் அக்டோபர் 11-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையோடு நிறைவடைகின்றன.

தேர்தல் அலுவலர்கள் நியமனம் மற்றும் கட்டுப்பாட்டு அறை

இடைத்தேர்தலை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் சிறப்பு தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தேர்தல் தொடர்பான புகார்களை 1950, 1800-425-7088 மற்றும் 044-27427412 ஆகிய தொலைபேசி எண்கள் வழியாக சுழற்சி முறையில் பணியாற்றும் அலுவலர்களிடம் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

இத்தேர்தலுக்கான தேர்தல் நடத்தும் அலுவலராக மதுராந்தகம் வருவாய்க் கோட்டாட்சியர் திரு. கே.ஆர். நரேந்திரன் (9445000415) நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு உதவியாக வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் திரு. ராஜேஷ் (8056835165), மதுராந்தகம் வட்டாட்சியர் திரு. பெருமாள் (9445000503) மற்றும் சமூகப் பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியர் திரு. வீரமணி (9597671072) ஆகியோர் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களாகச் செயல்படுவார்கள்.

வாக்காளர்கள் எண்ணிக்கை மற்றும் தீவிர கண்காணிப்பு குழுக்கள்

மதுராந்தகம் தொகுதியில் 1,04,886 ஆண் வாக்காளர்கள், 1,08,738 பெண் வாக்காளர்கள் மற்றும் 65 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 2,13,689 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். இதற்காக 167 அமைவிடங்களில் மொத்தம் 285 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்படவுள்ளன.

வாக்காளர்களுக்குச் சட்டத்திற்குப் புறம்பாகப் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்குவதைத் தடுக்கும் பொருட்டு 9 பறக்கும் படைகள், 9 நிலையான கண்காணிப்புக் குழுக்கள் மற்றும் 2 வீடியோ கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு 24 மணி நேர தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த வாக்காளர்கள் தங்களது வீடுகளிலிருந்தே அஞ்சல் வாக்குகள் செலுத்துவதற்கும் சிறப்பு வழிவகைகள் செய்யப்பட்டுள்ளன.

விளம்பரங்கள் அகற்றம் மற்றும் அனுமதி பெறும் நடைமுறைகள்

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால் அரசு சொத்துக்கள், பொது இடங்கள், இரயில் நிலையங்கள், மின்சார கம்பங்கள் மற்றும் உள்ளாட்சி கட்டிடங்களில் உள்ள அரசியல் கட்சிகளின் விளம்பரங்கள், சுவரொட்டிகள் மற்றும் விளம்பரப் பலகைகள் உடனடியாக அகற்றப்பட்டு வருகின்றன. தனியாருக்குச் சொந்தமான இடங்களில் வைக்கப்பட்டுள்ள அனுமதியற்ற அரசியல் விளம்பரங்களை 72 மணி நேரத்திற்குள் அகற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் பிரச்சாரக் கூட்டங்கள், ஒலிபெருக்கி பயன்பாடு, வாகனப் பிரச்சாரம், ஊர்வலங்கள் மற்றும் தற்காலிகக் கட்சி அலுவலகங்கள் அமைப்பதற்கான அனுமதிகளை இந்திய தேர்தல் ஆணையத்தின் 'SUVIDHA' செயல செயலி மூலம் விண்ணப்பித்து முன்அனுமதி பெற வேண்டும். பொதுமக்கள் தேர்தல் விதிமீறல்கள் குறித்த புகார்களை 'C-Vigil' செயலி மற்றும் தேர்தல் ஆணையத்தின் இணையதளம் வாயிலாகவும் தெரிவிக்கலாம்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks