Lpg Cylinder Subsidy : நாளை முதல் சமையல் சிலிண்டர் புக் செய்ய முடியாது.! வெளியான ஷாக் நியூஸ்- யாரெல்லாம் தெரியுமா.?

Lpg Cylinder Subsidy : நாளை முதல் சமையல் சிலிண்டர் புக் செய்ய முடியாது.! வெளியான ஷாக் நியூஸ்- யாரெல்லாம் தெரியுமா.?
News Image

சமையல் எரிவாயு புக் செய்ய பயோமெட்ரிக்

நவீன காலத்திற்கு ஏற்ப மக்களும் மாறி வருகிறார்கள். அந்த வகையில் அடுப்பிற்கு பதிலாக சமையல் எரிவாயு சிலிண்டரை மக்கள் அதிகளவு பயன்படுத்தி வருகிறார்கள். எனவே சமையல் எரிவாயு பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில் மத்திய அரசு பயனாளிகளுக்கு மானியம் வழங்கி வருகிறது. ஆனால் இந்த மானியம் சரியான பயனாளிகளுக்கு கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் பயோமெட்ரிக் அடிப்படையிலான e-KYC சரிபார்ப்பு கட்டாயம் என அறிவிக்கப்பட்டது. எனவே சமையல் எரிவாயு இணைப்பு வைத்துள்ளவர்கள் தங்களது பயோமெட்ரிக் சரிபார்க்க வேண்டும் என உத்தரவிடப்பட்டு கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக கை விரல் ரேகை பதிவு செய்யப்பட்டு வருகிறது.

மானிய விலையில் சமையல் எரிவாயு

மானிய விலையில் சமையல் எரிவாயு சிலிண்டர் பெறும் வாடிக்கையாளர்களுக்கான பயோமெட்ரிக் அடிப்படையிலான e-KYC சரிபார்ப்பு தொடர்பாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவுறுத்தியுள்ளன. மோசடி இணைப்புகளைத் தடுப்பது, ஒரே நபரின் பெயரில் உள்ள தவறான அல்லது பயன்படுத்தப்படாத இணைப்புகளை கண்டறிவது மற்றும் அரசு வழங்கும் மானியம் உரிய பயனாளிகளுக்குச் சென்றடைவதை உறுதி செய்வதே இதன் முக்கிய நோக்கமாக கூறப்படுகிறது. அந்த வகையில் தற்போது நாடு முழுவதும்  இதுவரை சுமார் 90 சதவீத வாடிக்கையாளர்கள் e-KYC செயல்முறையை முடித்துள்ளதாக எண்ணெய் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மீதமுள்ள 10 சதவீத வாடிக்கையாளர்களும் தங்களது எரிவாயு விநியோகஸ்தர் மூலம் அல்லது சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட வழிமுறையில் e-KYC-ஐ முடித்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.  ஏற்கனவே இந்த ஆதார் சரிபார்ப்பை முடித்த வாடிக்கையாளர்களுக்கு வழக்கம் போல எல்பிஜி சிலிண்டர் வழங்கப்படும். தீர்ந்து போனால் முன்பதிவு செய்து மீண்டும் பெறலாம்.

e-KYC செய்யாமல் இருப்பதால் என்ன பாதிப்பு?

இந்த நிலையில் இன்றோடு பயோமெட்ரிக் அடிப்படையிலான e-KYC சரிபார்ப்பு செய்ய கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. காலக்கெடு முடிந்த பிறகு, e-KYC நிலுவையில் உள்ள இணைப்புகளுக்கு மானியத் தொகை வழங்கப்படாது என கூறப்படுகிறது. மேலும் சிலிண்டர் முன்பதிவு அல்லது விநியோகத்திலும் சிக்கல் ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும்  ஆதார் சரிபார்ப்பை முடிக்காத வாடிக்கையாளர்களுக்கு மானிய விலையில் எல்பிஜி கிடைக்காது. அதற்கு பதிலாக சந்தை விலையில் தான் பெற முடியும் என எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளது.

பயோமெட்ரிக் ஆதார் சரிபார்ப்பை எப்படி செய்வது?:

மானிய விலையில் எல்பிஜி பெற விரும்பும் வாடிக்கையாளர்கள் நேராக டிஸ்ட்ரிபியூட்டர் அலுவலகங்களுக்கு சென்று அங்குள்ள ஊழியர்களின் உதவியுடன் ஆதார் பயோமெட்ரிக் சரிபார்ப்பை பூர்த்தி செய்யலாம்.

இந்தியன் ஆயில் ஒன், பாரத் கேஸ் அல்லது ஹெச்பி பே போன்ற ஆப் மூலமாகவும் இதை செய்து முடிக்கலாம்.

LPG விநியோகம் செய்ய வரும் ஊழியரிடம் சொன்னால் அவர் அந்த ஓஎம்சி நிறுவனத்தின் மொபைல் ஆப் மூலமாக சரிபார்ப்பை செய்து தருவார்

சமையல் எரிவாயு அத்தியாவசிய சேவை என்பதால் e-KYC செய்யத் தவறியவர்களுக்கு கூடுதல் கால அவகாசம் வழங்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் எண்ணெய் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே, காலக்கெடு தொடர்பான இறுதி அறிவிப்பை சம்பந்தப்பட்ட எண்ணெய் நிறுவனத்திடம் உறுதி செய்து கொண்டு, தாமதிக்காமல் e-KYC செய்வது பாதுகாப்பான நடைமுறையாகும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks