கொளத்தூர் தொகுதி எம்எல்ஏ விஎஸ் பாபு கடந்த செப்டம்பர் 8ஆம் தேதி இரவு திடீரென உடல் நிலை பாதிக்கப்பட்டதையடுத்து தனியார் மருத்துவமனையான எம்ஜிஎம் மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டார். மூச்சு திணறலால் அனுமதிக்கப்பட்டவருக்கு செயற்கை சுவாச கருவி மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கடந்த 10 நாட்களாக தொடர்ந்து சிகிச்சையில் அளிக்கப்பட்டு வந்தாலும், வயது மூப்பு காரணமாக சிகிச்சையில் பெரிய அளவில் முன்னேற்றம் இல்லையென தகவல் வெளியானது.

இதனையடுத்து கொளத்தூர் தொகுதி எம்எல்ஏ வி.எஸ்.பாபு உடல் நிலை தொடர்பாக எம்.ஜி.எம் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில்,சட்டமன்ற மாண்புமிகு உறுப்பினர் வி. எஸ். பாபு, சுவாசக் கோளாறு காரணமாக கடந்த 9-ம் தேதி முதல் சென்னை MGM Healthcare மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை தொடர்ந்து சீராக உள்ளது. பல்வேறு துறைகளைச் சேர்ந்த சிறப்பு மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் அவரது உடல்நிலையைத் தொடர்ந்து தீவிரமாகக் கண்காணித்து, தேவையான சிகிச்சைகளை வழங்கி வருகின்றனர். அவரது மருத்துவக் குறியீடுகள் சீராக உள்ளதுடன், உடல்நிலையில் நம்பிக்கையளிக்கும் முன்னேற்றமும் காணப்படுகிறது. தொடர்ந்து அளிக்கப்பட்டு வரும் மருத்துவ சிகிச்சைக்கு அவர் நல்ல முறையில் ஒத்துழைத்து வருகிறார் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: Read Full Article