மு.க.ஸ்டாலின், உதயநிதி பற்றி K.N. நேரு சொன்னதை லிஸ்ட் போட்டு பதிலடி கொடுத்த துரை வைகோ

மு.க.ஸ்டாலின், உதயநிதி பற்றி K.N. நேரு சொன்னதை லிஸ்ட் போட்டு பதிலடி கொடுத்த துரை வைகோ
News Image

சட்டமன்ற தேர்தலில் திமுக தோல்வி அடைந்த நிலையில், தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்தது. இதனையடுத்து திமுக கூட்டணியில் இருந்த கட்சிகள் ஒன்றன் பின் ஒன்றாக தவெகவிற்கு ஆதரவு தெரிவித்தது. அந்த வகையில் மதிமுகவும் தவெக கூட்டணியில் இணைந்த நிலையில், அக்கட்சியை திமுகவினர் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். திமுக போட்ட பிச்சை தான் மதிமுக எம்.பி. பதவி என தெரிவித்திருந்தனர். இதற்கு பதில் அளித்த மதிமுக எம்.பி.துரை வைகோ, மக்கள் எங்களுக்கு பிச்சை போட்டு வெற்றி பெற வைத்தார்கள். ஆனால் கொளத்தூர் மக்கள் திமுகவிற்கு பிச்சை போடவில்லையென கடுமையாக பதிலடி கொடுத்திருந்தார். இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு  நேற்று பதில் அளிக்கையில்,

சின்னப் பிள்ளை  (துரை வைகோ ) ரொம்ப அதிகமாகப் பேசுகிறார். எங்க அப்பா கோபக்காரர், கொஞ்ச நாள் பொறுங்கள், என்னால் கட்சி நடத்த முடியாது, நான் திமுகவுடன் வந்து விடுகிறேன் எனக் கூறியவர் தான் துரை வைகோ என தெரிவித்திருந்தார். இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இன்று இதற்கு துரை வைகோ பதிலடி கொடுத்துள்ளார். திருச்சி தென்னூர் உழவர் சந்தை பகுதியில் உள்ள அவரது  அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்,

முதல்வரின் வெளிநாட்டு பயணம் மூலம் தமிழ்நாட்டிற்கு பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் முதலீடுகள் வரவுள்ளது. இதனால் 10ஆயிரத்திற்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் உருவாகும். தமிழ்நாட்டின் உச்ச நடிகர் அஜித் கார் ரேஸில் கலந்துகொள்வது தமிழ்நாட்டிற்கு சர்வதேச அளவில் பெரும் சுற்றுலா ஈர்ப்பையும், முதலீடுகளையும் பெற்றுத் தரும் பெருமைக்குரிய விஷயமாகும் என தெரிவித்தார்.

இதனையடுத்து மதிமுகவை கலைத்துவிட்டு திமுகவில் சேருகிறேன் என கே.என்.நேரு தெரிவித்த கருத்திற்கு பதிலடி கொடுத்த அவர்,  பாராளுமன்ற தேர்தலில் வேட்பாளராக அறிவித்த உடனே எனக்கு திமுக அழுத்தம் கொடுத்தார்கள். உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என எனக்கு அழுத்தம் கொடுத்தார்கள். பாராளுமன்றத் தேர்தலில் நான் போட்டியிட்டபோது கலைஞர் அறிவாலயத்தில் நடந்த கூட்டத்தில் நான் பங்கேற்றபோது கருப்பு சட்டை அணிந்து வந்தேன் அந்த சட்டையை கழட்டி விட்டு வர கூறி திமுகவினர் வற்புறுத்தினர்.  எனது சுயமரியாதைக்கு பங்கம் ஏற்படும் விதமாக செயல்பட்டனர். தொடர்ந்து என்னை சிறுமைபடுத்தும், அவமானம் படுத்தும் விதமாக திமுகவினர் பேசினர்.

ஒரு கட்டுக்கதையை முன்னாள் அமைச்சர்  கே.என்.நேரு பேசி இருக்கிறார். எனது தந்தை வைகோ கோபக்காரர் என அனைவருக்கும் தெரியும். நான் எனது அப்பா, கட்சி நிர்வாகிகளுக்காக அரசியலுக்கு வந்துள்ளேன், நான் அரசியலுக்கு வந்தது ஒரு விபத்து, ஆனால் எங்கள் நிர்வாகிகளுக்காக கட்சியில் இருக்கிறேன். பாராளுமன்ற உறுப்பினராக தற்போது மக்களுக்காக செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன். கலைஞரோடு அரசியல் முடிந்துவிட்டது. இந்த பையனை வைத்து (ஸ்டாலின்) அரசியல் செய்ய முடியாது என முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு சொன்னார்.. மேலும் தற்போது எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பற்றி அவர் கூறுகையில், இந்த பையனை வைத்து அரசியல் செய்ய முடியாது என KN நேரு சொன்னதாக துரை வைகோ குறிப்பிட்டார்.  திமுகவினர் , மதிமுகவில் இருந்து சென்ற 2 நபர்களை வைத்து சமூக வலையதலங்களில் தனிநபர் தாக்குதல் செய்கிறார்கள். எதற்கும் நான் பயப்பட மாட்டேன் என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், கே.என். நேரு அவர் ஸ்டைலில், பல எம்.எல்.ஏ களை மறைமுகமாக காலி செய்தவர்.  தற்போது திருச்சியில் ஒரு நபர் தேர்தலில் தோற்றதுக்கு காரணமே கே.என்.நேரு தான். மிசா சட்டம் வந்தபோது நான் பிறக்கவே இல்லை என கே என் நேரு கூறியுள்ளார். மிசா எப்போது வந்தது என்று நேரு அவர்களுக்கு வரலாறு தெரியவில்லை. மிசா வந்தபோது எனக்கு 3 வயது என துரை வைகோ பதிலடி கொடுத்துள்ளார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks