கரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை ( செப்டம்பர் 15, 2026, செவ்வாய்க்கிழமை) மின் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது.

மாதாந்திர பராமரிப்புப் பணிகள்

தமிழ்நாட்டில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படும்போது, அது குறித்து முந்தைய நாள் அறிவிக்கப்படும். இந்த பராமரிப்புப் பணிகளின்போது, சிறிய பழுதுகளைச் சரிசெய்வது, மின்கம்பங்கள் மற்றும் மின்வழித்தடங்களில் உள்ள மரக்கிளைகளை அகற்றுவது போன்ற பல்வேறு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவார்கள். இந்நிலையில், கரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மின் விநியோகம் தடைப்படும் பகுதிகள்

கரூர் மாவட்டம்

மாயனூர் துணை மின் நிலையம்

மாயனூர், மகாதானபுரம், கிருஷ்ணராயபுரம், பிச்சம்பட்டி, கோவக்குளம், திருக்காம்புலியூர், மலைப்பட்டி, செங்கல், பழைய ஜெயங்கொண்டம், மாயனூர், தொட்டியபட்டி, சின்னசெங்கல், கீழமுனையனூர்.

பஞ்சப்பட்டி துணை மின் நிலையம்

பஞ்சாப்பட்டி, தட்டம்பட்டி, குமடேரி, கண்ணமுத்தம்பட்டி, பாப்பையம்பாடி, வீரியம்பாளையம், கரட்டுப்பட்டி, வடவம்பாடி, எரிப்புகுளி, அய்யம்பாளையம், காக்காயம்பட்டி, கீரனூர், மீனாட்சிபுரம், ஆனைக்கரைப்பட்டி, புதுவாடி.

வல்லம் துணை மின் நிலையம்

லாலாப்பேட்டை, சிந்தலவாடி, தெம்மாச்சிபுரம், கருபத்தூர், கல்லப்பள்ளி, புனவாசிபட்டி, அந்தராப்பட்டி, மகிழிப்பட்டி, பொட்டம்பட்டி, ஓமந்தூர், எம்.புதுப்பட்டி, மத்திப்பட்டி மற்றும் பாலப்பட்டி.

நாச்சலூர் துணை மின் நிலையம்

நாச்சலூர், நல்லூர், அர்த்தம்பட்டி, இனுங்கூர், கலிங்கப்பட்டி, புதுப்பட்டி, கீழப்பட்டி மற்றும் கல்லை.

தோகமலை துணை மின் நிலையம்

தோகமலை, தெலுங்கப்பட்டி, பொருந்தலூர், சின்னரெட்டிப்பட்டி, தொண்டமாங்கினம், நாகனூர், வலைக்கினம், கழுகூர், வேம்பதுராம்பட்டி, கே.துறையூர், முத்தக்கன்பட்டி, கூடலூர், ரக்கம்பட்டி, குன்னகவுண்டம்பட்டி.

அய்யர்மலை துணை மின் நிலையம்

அய்யர்மலை, சத்தியமங்கலம், தாளியம்பட்டி, வெங்கம்பட்டி, திம்மாம்பட்டி, கொட்டமேடு, எரும்புதிப்பட்டி, கருங்கல்லப்பள்ளி, கனகப்பிள்ளையூர், கோடாங்கிபட்டி, குப்பாச்சிப்பட்டி, வயலூர், கத்தரிப்பட்டி, வேப்பங்குடி, வடுகபட்டி

சிந்தாம்னிப்பட்டி துணை மின் நிலையம்

சிந்தாமணிப்பட்டி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள்

சிந்தாமணிப்பட்டி 33/11 கே.வி துணை மின் நிலையம்

அய்யம்பாளையம், சீத்தாபட்டி, தேவர்மலை, வீரணாம்பட்டி, வரவனை, வெரளிபட்டி, மாமரத்துப்பட்டி, பி.உதயபட்டி, மயிலம்பட்டி, தரகம்பட்டி, சிங்கம்பட்டி, சிந்தாமணிப்பட்டி, வெள்ளப்பட்டி, வேலாயுதம்பாளையம், பண்ணப்பட்டி.

கோசூர் துணை மின் நிலையம்

கொசூர், பள்ளிகவுண்டனூர், தந்திரிப்பட்டி, ஓட்டப்பட்டி மற்றும் சந்தையூர்

பாலவிடுதி துணை மின் நிலையம்

பாலவிடுதி, தலைவாசல், சேர்வைக்காரன்பட்டி, கவரப்பட்டி, குரும்பபட்டி, கஸ்தூரிப்பட்டி, பூஞ்சூலைப்பட்டி, சிங்கம்பட்டி, முள்ளிப்பட்டி, கழுதரிக்காபட்டி, கோடாங்கிபட்டி, சின்னம்பட்டி, சடையம்பட்டி, வெள்ளப்பட்டி, பூலாம்பட்டி

மின்தடை நேரத்தில் செய்ய வேண்டியவை

மின்தடை காலங்களில் தகவல்களைப் பெறுவது மிகவும் முக்கியம். மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் நிலை மற்றும் அவசர அறிவிப்புகள் குறித்து தெரிந்துகொள்ள, குடியிருப்போர் பேட்டரி சக்தியில் இயங்கும் வானொலிகள் அல்லது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட மொபைல் போன்களை பயன்படுத்த வேண்டும். மொபைல் பேட்டரி ஆயுளை பாதுகாக்க, பவர் சேவிங் மோடினை இயக்கி, அவசர அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் போன்ற தேவையான பயன்பாட்டிற்கு மட்டுமே போனைக் கொண்டு செயல்படுவது நல்லது.

பாதுகாப்பாக சமாளிக்க முடியும்

மின்தடை நேரத்தில் திடீர் மின்வெட்டு ஏற்படும் அபாயத்தைத் தவிர்க்க, லிப்டைப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். மேலும், அவசர தொடர்பு எண்கள் எளிதில் கிடைக்கும் வகையில் வைத்திருப்பதோடு, தண்ணீர், சிற்றுண்டி, மற்றும் முதலுதவி பெட்டி போன்ற அத்தியாவசிய பொருட்களையும் தயாராக வைத்திருக்க வேண்டும். இந்த முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம், குடியிருப்போர் மின்தடை நேரத்தை பாதுகாப்பாக சமாளிக்க முடியும்.

Source: Read Full Article