இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி இன்று கேரளாவின் திருவனந்தபுரத்தில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் சிறப்பான பேட்டிங்:

இந்த போட்டியில் ஆட்டத்தை தொடங்கிய ஜான் கேம்ப்பால் - ஜஸ்டின் கிரீவ்ஸ் இருவரும் பொறுப்பாக ஆடினார். நிதானமாகவும், அதேசமயம் ஏதுவான பந்துகளை பவுண்டரிக்கும் விளாசி சிறப்பாகவே ஆடினர். இளம் பந்துவீச்சாளர்கள் நிதிஷ்குமார், குர்னூர் ப்ரார், நமன் தீர் ஆகியோரது பந்துவீச்சை இவர்கள் இருவரும் விளாசினர்.

மைதானம் பேட்டிங்கிற்கு ஒத்துழைப்பால் இருவரும் அவ்வப்போது சிக்ஸர் விளாசி அசத்தினர். சிறப்பாக ஆடிய இருவரும் அபாரமாக ஆடி அரைசதம் விளாசினர். வேகப்பந்துவீச்சாளர்களை அவர்கள் இருவரும் எளிதாக எதிர்கொண்ட நிலையில், சுழற்பந்துவீச்சாளர்களை அழைத்தார் கேப்டன் கில். குல்தீப்யாதவ் - ஜடேஜா இருவரும் இவர்களது வேகத்தை சற்று கட்டுப்படுத்தினர்.

கிரீவ்ஸ் அபாரம்:

அதற்கு பலனாகவும் அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த கேம்ப்பால் அவுட்டானார். சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த கேம்பால் 60 பந்துகளில் 6 பவுண்டரி 3 சிக்ஸருடன் 62 ரன்கள் எடுத்து குல்தீப் யாதவ் சுழலில் அவுட்டானார். மறுமுனையில் அபாரமாக ஆடிக்கொண்டிருக்கும் ஜஸ்டின் கிரீவ்ஸ் பவுண்டரிகளாக விளாசி வருகிறார். வெஸ்ட் இண்டீஸ் அணி இந்திய அணிக்கு எதிரான முதல் போட்டியில் அபாரமாக ஆடி வருகிறது. 32 வயதான ஜஸ்டின் கிரீவ்ஸ் சமீபகாலமாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக தொடர்ந்து சிறப்பாக ஆடி வருகிறார். சிறப்பாக ஆடிய கிரீவ்ஸ் 104 பந்துகளில் தனது சதத்தை விளாசினார். இவருக்கு இதுவே முதல் ஒருநாள் சதம் ஆகும். இந்திய மண்ணில் அவர் விளாசும் முதல் சதமும் இதுவோ ஆகும். சிறப்பாக ஆடிய கிரீவ்ஸ் 101 ரன்களுக்கு அவுட்டானார்.

பும்ரா, சிராஜ் இல்லாத இந்திய அணியின் வேகப்பந்து வீச்சில் பிரசித் கிருஷ்ணா, நிதிஷ்ரெட்டி, குர்னூர் ப்ரார் ஆகிய பந்துவீச்சாளர்களே வேகத்தில் உள்ளனர். சுழலில் மட்டுமே அனுபவமிகுந்த ஜடேஜா, குல்தீப் யாதவ் ஆகியோர் உள்ளனர். வெஸ்ட் இண்டீஸ் அணியில் கேப்டன் ஷாய் ஹோப், அமீர் ஜாங்கோ, ஜுவல் ஆண்ட்ரூ, ரோஸ்டன் சேஸ் ஆகியோர் உள்ளனர். பந்துவீச்சில் அல்சாரி ஜோசப், ஜேடன் சீல்ஸ், மோதி ஆகியோர் உள்ளனர்.

ரோ-கோ மீது எதிர்பார்ப்பு:

இந்திய அணியில் கேப்டன் விராட் கோலி, ரோகித் சர்மா, ருதுராஜ் கெய்க்வாட், கே.எல்.ராகுல், நமன்தீர், ஜடேஜா, நிதிஷ்ரெட்டி, குர்னூர் ப்ரார், குல்தீப் யாதவ், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் நீண்ட இடைவேளைக்கு பிறகு விளையாடுவதால் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் இந்த போட்டியை எதிர்பார்த்து காத்துள்ளனர்.

Source: Read Full Article