INDW vs PAKW: காட்டுத் தீயே பத்திக்கிச்சு.. இந்தியா - பாகிஸ்தான் இன்று மோதல்! பட்டையை கிளப்புவாங்களா நம்ம பொண்ணுங்க?

INDW vs PAKW: காட்டுத் தீயே பத்திக்கிச்சு.. இந்தியா - பாகிஸ்தான் இன்று மோதல்! பட்டையை கிளப்புவாங்களா நம்ம பொண்ணுங்க?
News Image

மகளிர்களுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. துபாயில் நடந்து வரும் இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, தாய்லாந்து, ஹாங்காக், ஐக்கிய அரபு அமீரகம், வங்கதேசம், இந்தோனேசியா ஆகிய நாடுகள் பங்கேற்றுள்ளன.

இந்தியா - பாகிஸ்தான்:

இந்ததொடரில் இந்திய அணி மிகவும் வலுவான அணியாக உள்ளது. ஆடவர் கிரிக்கெட் என்றாலும் சரி, மகளிர் கிரிக்கெட் என்றாலும் சரி இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி என்றாலே எப்போதும் தனி விறுவிறுப்பு இருக்கத்தான் செய்யும். அந்த வகையில், ஆசிய கோப்பையில் இன்று இந்தியா - பாகிஸ்தான் அணிகள் நேருக்கு நேர் மோதுகின்றன.

இந்திய அணி இதற்கு முன்பு ஆடிய போட்டியில் தாய்லாந்து, ஹாங்காங் அணியை வீழ்த்தி உள்ளது.  பாகிஸ்தான் அணி தாய்லாந்து அணியுடன் ஆடிய போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. இரு அணிகளும் தோல்வியே சந்திக்காத நிலையில், இன்று இரு அணிகளில் வெற்றியைத் தொடரப்போவது யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

பேட்டிங், பவுலிங் யுத்தம்:

இந்திய அணியைப் பொறுத்தமட்டில் ஸ்மிரிதி மந்தனா, ஷபாலி வர்மா, ப்ரதிகா ராவல், ரிச்சா கோஷ், ஹர்மன்ப்ரித்கவுர், தீப்தி ஷர்மா என பேட்டிங் பட்டாளம் மிகவும் வலுவாக உள்ளனர். பந்துவீச்சைப் பொறுத்தமட்டிலும் ப்ரேமா ராவத், நந்தினி ஷர்மா, ஸ்ரீசரணி, கிரந்தி கவுத், தீப்திஷர்மா என வலுவாக உள்ளனர்.

பாகிஸ்தான் அணியைப் பொறுத்தமட்டில் முனிபா அலி, ஷாவால் ஜுல்பிகர், கல் ஃபெரோசா, ஆய்ஷா ஜாபர், சதாஃப் ஷமாஸ், ஃபாத்திமா சனா, உம் இ ஹனி பேட்டிங் பட்டாளம் வலுவாக உள்ளது.  ஆனால், அவர்கள் இந்திய பந்துவீச்சை சமாளிப்பார்களா? என்ற மிகப்பெரிய கேள்வி எழுந்துள்ளது.

பாகிஸ்தான் அணியில் பந்துவீச்சில் கேப்டன் ஃபாத்திமா சனா, ஷாதியா, உம் இ ஹனி, நஷ்ரா, துபா, ஆயிஷா என பந்துவீச்சு படை வலுவாக உள்ளது. குறிப்பாக, ஷாதியா, நஷ்ரா அசத்தலாக பந்துவீசி வருகின்றனர். இவர்கள் பந்துவீச்சை இந்திய அணி சமாளிக்க வேண்டியது அவசியம் ஆகும்.

போட்டி எப்போது?

இந்தியாவின் வலுவான பேட்டிங்கிற்கும், பாகிஸ்தானின் வலுவான பந்துவீச்சிற்கும் இடையே நடக்கும் மோதலாகவே இந்த போட்டி பார்க்கப்படுகிறது. துபாயின் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இந்த போட்டி நடக்கிறது. இன்று இரவு 8 மணிக்கு இந்த போட்டி நடக்கிறது.

இந்திய அணி ஆடும் கடைசி லீக் போட்டி இதுவாகும். இந்திய அணி ஏறத்தாழ அரையிறுதி வாய்ப்பை ஏற்கனவே உறுதி செய்துவிட்டது. பாகிஸ்தான் அணிக்கு இந்த போட்டி மிக மிக முக்கியமான போட்டி ஆகும். அரையிறுதி வரும் செப்டம்பர் 10ம் தேதி, செப்டம்பர் 11ம் தேதி நாட்களில் நடக்கிறது. வரும் 13ம் தேதி இறுதிப்போடடி நடக்கிறது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks