IND vs WI: 8 வருஷத்துக்கு முன்னாடி.. கோலி - ரோகித் பண்ண சம்பவம் அப்படி? வெடவெடத்து போன வெஸ்ட் இண்டீஸ்!

IND vs WI: 8 வருஷத்துக்கு முன்னாடி.. கோலி - ரோகித் பண்ண சம்பவம் அப்படி? வெடவெடத்து போன வெஸ்ட் இண்டீஸ்!
News Image

கவுகாத்தியில் உள்ள பாரஸ்பரா கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் ஆகிய இரு அணிகள் நாளை 2வது ஒருநாள் போட்டியில் நடக்கிறது. இந்த போட்டியில் நடக்கும் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் தொடரை வெல்லும்.

8 ஆண்டுகளுக்கு முன்பு:

இதே மைதானத்தில் கடந்த 2018ம் ஆண்டு அக்டோபர் 21ம் தேதி நடந்த சம்பவம் பற்றி கீழே விரிவாக காணலாம்.

அந்த நாளில் இதே வெஸ்ட் இண்டீஸ் - இந்தியா அணிகள் மோதியது. கேப்டன் ஹோல்டர் தலைமையிலான அணியில் பாவல், ஷாய் ஹோப், சாமுவேல்ஸ், ஹெட்மயர் என வலுவான பேட்டிங்குடன் வெஸ்ட் இண்டீஸ் களமிறங்கியது. முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு சந்திரபால் 9 ரன்னில் அவுட்டாக, ரோமன் பவல் அதிரடியாக ஆடி அரைசதம் விளாச, அவருக்கு ஒத்துழைப்பு தந்த ஷாய் ஹோப் 32 ரன்களில் அவுட்டானார்.

114 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில், ஹெட்மயர் அபாரமாக ஆடினார். பவுண்டரியும், சிக்ஸரும் விளாசிய ஹெட்மயர் 78 பந்துகளில் 106 ரன்கள் விளாச இந்தியாவிற்கு 323 ரன்கள் இலக்காக நியமிக்கப்பட்டது.  கீமர் ரோச், தாமஸ், ஜேசன் ஹோல்டர், நர்ஸ் ஆகிய பந்துவீச்சாளர்கள் இந்தியாவை வீழ்த்த களமிறங்கிய நிலையில் தொடக்க வீரர் ஷிகர் தவான் 4 ரன்னில் அவுட்டானார்.

ரோகித் - விராட் சம்பவம்:

இதனால், வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சாளர்கள் நம்பிக்கை  அடைந்த நிலையில், அவர்கள் நம்பிக்கையை ரோகித் சர்மா - விராட் கோலி உடைக்கத் தொடங்கினர். இவர்கள் இருவரும் இணைந்து நங்கூரம் போல களத்தில் நின்றனர். வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சாளர்கள் இவர்கள் இருவரையும் பிரிக்க முயற்சிக்க அந்த போட்டியில் கேப்டனாக இருந்த விராட் கோலியும், ரோகித் சர்மாவும் பந்துகளை பவுண்டரிக்கு விளாசினார்.

அபாரமாக ஆடி இருவரும் அரைசதம் கடந்தனர். அரைசதம் கடந்த பிறகு ஆட்டத்தின் வேகத்தை இருவரும் கூட்டினர். விராட் கோலி பவுண்டரிகளாக விளாச ரோகித் சர்மா சிக்ஸராக விளாசினார். அபாரமாக ஆடிய ரோகித் சர்மா மற்றும் கேப்டன் விராட் கோலியும் சதம் விளாசினார்.

10 ரன்னில் சேர்ந்த இந்த ஜாேடி இந்திய அணியின் வெற்றியை வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சாளர்கள் மனதில் ஆழமாக பதிய வைத்துவிட்டது. வெற்றிக்கு நன்றாக நங்கூரமிட்ட விராட் கோலி 107 ரன்களில் 21 பவுண்டரி 2 சிக்ஸர் 140 ரன்கள் எடுத்து இந்திய அணி 256 ரன்கள் எடுத்திருந்தபோது அவுட்டாக, மொத்த ஆட்டத்தையும் ரோகித் சர்மா கையில் எடுத்தார். சிக்ஸராக விளாச இந்திய அணியின் கையில் வெற்றி அபாரமாக வந்து அமர்ந்தது.

அபார வெற்றி:

இந்திய அணி 42.1 ஓவர்களில் 326 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ரோகித் சர்மா 117 பந்துகளில் 15 பவுண்டரி 8 சிக்ஸருடன் 152 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஓசன் தாமஸ் 9 ஓவர்களில் 83 ரன்களை விட்டுக்கொடுத்தார்.

ரோகித் சர்மாவும் விராட் கோலியும் ஒன்றாக சதம் விளாசிய இதே மைதானத்தில் இந்திய அணி மீண்டும் நாளை அதே வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் மோதுகிறது. 8 ஆண்டுகளுக்கு முன்பு ஆடிய விராட் கோலி, ரோகித் சர்மா இந்தியாவும், வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஷாய் ஹோப்பும் இடம்பிடித்துள்ளனர்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks