IND vs JAP: வரலாற்றிலே முதன்முறை.. ஜப்பானுடன் நாளை டி20 கிரிக்கெட் ஆடும் இந்தியா - எப்படி பார்ப்பது?

IND vs JAP: வரலாற்றிலே முதன்முறை.. ஜப்பானுடன் நாளை டி20 கிரிக்கெட் ஆடும் இந்தியா - எப்படி பார்ப்பது?
News Image

கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி நம்பர் 1 அணியாக உலா வருகிறது. மேலும், உலகின் பல நாடுகளிலும் கிரக்கெட் வளர்ச்சியடைய இந்திய கிரிக்கெட் வாரியம் ஒத்துழைப்பு அளித்து வருகிறது.

இந்தியா - ஜப்பான் கிரிக்கெட்:

உலக கிரிக்கெட் வரலாற்றிலே இந்திய அணி முதன்முறையாக ஜப்பான் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு நாடுகள் உறவை வலுப்படுத்தும் வகையிலும், ஜப்பானிலும் கிரிக்கெட்டை ஊக்கப்படுத்தும் வகையிலும் இந்திய அணி ஒரே ஒரு டி20 போட்டியில் பங்கேற்று விளையாட உள்ளது.

இரு அணிகளும் பங்கேற்கும் போட்டி இந்திய நேரப்படி நாளை காலை 9.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. ஜப்பான் நாட்டில் விளையாட கான்டோ நகரத்தில் உள்ள சானோ இன்டர்நேஷனல் கிரிக்கெட் மைதானத்தில் இந்த பாேட்டி நடக்கிறது.

முன்னணி வீரர்கள்:

ஜப்பான் போன்ற சிறிய அணி என்பதால் இந்திய அணி புதிய வீரர்களை அனுப்பாமல் முன்னணி வீரர்களை களமிறக்கியுள்ளது. கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்திய அணியில் சூர்யவன்ஷி, அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ஷிவம் துபே, இஷான் கிஷன், ரவி பிஷ்னோய், பும்ரா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

The warmest of welcomes for #TeamIndia in Tokyo ahead of a truly special occasion 🫶

🎥 𝗡𝗮𝗺𝗮𝘀𝘁𝗲 𝗝𝗮𝗽𝗮𝗻 🇯🇵 🤝 𝗞𝗼𝗻𝗻𝗶𝗰𝗵𝗶𝘄𝗮 𝗜𝗻𝗱𝗶𝗮 🇮🇳

WATCH 🔽 - By @Moulinparikh | #TeamIndiaInJapan | @CricketJapan pic.twitter.com/oQEIfGvOtU
— BCCI (@BCCI) September 21, 2026

ஜப்பான் அணி கேப்டன் கென்டல் ஃப்ளெமிங் தலைமையில் களமிறங்குகிறது. மேலும், ஷிரை பாட்மோர், அலெஸ்டர் ஃப்ளெமிங், பெஞ்சமின் டேவிஸ், சாகுரானோ தாமஸ், குபோடா, மியூச்சி, சுசுகி, இப்ராஹிம், தானியமா, லச்லான், தகாடா ஆகியோர் களமிறங்குகின்றனர்.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு:

இந்திய அணி வரலாற்றிலே முதன்முறையாக ஜப்பானுக்குச் சென்று கிரிக்கெட் ஆட இருப்பதால் ஜப்பானில் வசிக்கும் இந்தியர்கள் இந்த போட்டியை காண ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்திய அணியின் வருகைக்கு பிறகு ஜப்பான் அணியின் கிரிக்கெட் வளர்ச்சி பன்மடங்கு அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது. ஜப்பான் நாட்டில் நடந்து வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் மகளிர் கிரிக்கெட்டில் இந்தியா - இலங்கை அணிகள் தங்கப்பதக்கத்திற்கான போட்டியில் மோதுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

எப்படி பார்ப்பது?

ஜப்பான் நாட்டில் முதன்முறையாக மிகப்பெரிய அணியான இந்திய கிரிக்கெட் அணி விளையாட இருப்பதால் இந்த போட்டிக்கு அந்த நாட்டு சார்பில் மிகப்பெரிய விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளது. ஆசியாவில் இந்தியா, இலங்கை, வங்கதேசம், பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மட்டும் கிரிக்கெட் பிரபலமாக இருக்கும் நிலையில், மற்ற நாடுகளிலும் பிரபலப்படுத்த ஐசிசி தீவிரம் காட்டி வருகிறது. ஃபேன்கோடில் இந்த போட்டியை நேரலையில் கண்டுகளிக்கலாம்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks