கேரள மாநிலத்தில் இலவச பேருந்தில் பயணம் மேற்கொண்ட மாணவியை தகாத முறையில் பேசிய கண்டக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரியதர்ஷினி இலவச பேருந்து பயண திட்டம்

கேரள அரசுப் பெண்களுக்கும் திருநங்கைகளுக்கும் சாதாரண அரசுப் பேருந்துகளில் கட்டணமின்றி பயணிக்கும் வகையில் பிரியதர்ஷினி இலவச பயணத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டம் கடந்த ஜூன் 15ம் தேதி தொடங்கி வைக்கப்பட்டது. இந்த திட்டத்தில் மிகப்பெரிய அளவில் சர்ச்சை வெடித்துள்ளது.

அநாகரிகமாக பேசிய நடந்துநர்

கேரளம் மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள பரவூரில் கே.எஸ்.ஆர்.டி.சி கீழ் குருவாயூர்-எர்ணாகுளம் வழித்தடத்தில் இயக்கப்பட்டு வரும் பிரியதர்ஷினி இலவச பேருந்தில் கடந்த செப்டம்பர் 26ம் தேதி 12ம் வகுப்பு படிக்கும் 5 மாணவிகள் ஏறியுள்ளனர். அவர்களில் நான்கு பேருக்கு பிரியதர்ஷினி திட்டத்தின் கீழ் கட்டணமில்லா பயணத்துக்கான டிக்கெட்டுகள் வழங்கப்பட்டது. ஆனால் ஒரு மாணவிக்கு மட்டும் நடத்துநர் இலவச டிக்கெட் வழங்கவில்லை.

அந்த பெண் சமீபத்தில் ஒரு புனித யாத்திரை மேற்கொண்ட நிலையில் தனது தலை முடியை காணிக்கையாக செலுத்தியுள்ளார். அந்த மாணவியை நடந்துநர் ஆண் எனக் கருதி டிக்கெட் எடுக்குமாறு கோரியுள்ளார். ஆனால் அந்த மாணவி தான் ஒரு பெண் என கூறிய நிலையில் அதனை நடத்துநர் கேலி செய்துள்ளார். உடன் வந்த தோழிகளும் அவர் பெண் தான் என தெரிவித்துள்ளனர்.

இதனை ஏற்காத நடத்துநர் மற்ற பயணிகளின் முன்னிலையில் மாணவியின் பாலினத்தை கேலி செய்தார். அவரது தோற்றத்தைப் பற்றி இழிவான கருத்துகளை தெரிவித்தார். உன்னைப் பார்த்தால் பெண் போல் இல்லை, ஆடையை அவிழ்க்கவா முடியும் என மிக மோசமான முறையில் பேசியுள்ளனர். நடத்துநரின் பேச்சுக்கு பேருந்தில் இருந்த பயணிகளில் சிலர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் அந்த மாணவிக்கு தீவிர மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது.

அப்பெண்ணைப் பேருந்திலிருந்து இறக்கிவிடவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியாகி மிகப்பெரிய அளவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. முதலமைச்சர் வி.டி. சதீசன் நேரடியாக தலையிட்டு, காவல்துறையை விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதன்படி சம்பந்தப்பட்ட பேருந்து நடத்துனர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு அவர் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டது.

இதனிடையே பயணிகளின் உரிமைகளையும் பாதுகாப்பையும் பேணுவதில் எந்தவித சமரசமும் கூடாது என கே.எஸ்.ஆர்.டி.சி தலைவர் பிரமோஜ் சங்கர் தெரிவித்துள்ளார். மேலும் பயணிகளிடமிருந்து பெறப்படும் இதுபோன்ற புகார்கள் விசாரிக்கப்பட்டு உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Source: Read Full Article