FlyDubai Flight: 180 உயிர்களை காப்பாற்றிய இந்தியர்? விமான பயணிகளை கொல்ல முயன்ற கேப்டன் , 17,000 அடியில் பயங்கரம்

FlyDubai Flight: 180 உயிர்களை காப்பாற்றிய இந்தியர்? விமான பயணிகளை கொல்ல முயன்ற கேப்டன் , 17,000 அடியில் பயங்கரம்
News Image

FlyDubai Flight: விமானத்தை விபத்துக்குள்ளாக்கி 180 பேரை கொல்ல முயன்ற சம்பவம் தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

”180 உயிர்களை காப்பாற்றிய இந்தியர்”

துபாயிலிருந்து இஸ்ரேலின் டெல்-அவிவ் பகுதிக்கு சென்றுகொண்டிருந்த ஃப்ளைதுபாய் FZ1073 விமானத்தின் துணை விமானியுடன் சண்டையிட்டு, பெரும் விபத்தை தடுத்த கேப்டன் ஒரு இந்தியர் என இஸ்ரேல் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. துபாயிலிருந்து டெல் அவிவ் சென்ற ஃப்ளைதுபாய் விமானம், பயணிகளிடையே பயணித்த கூடுதல் விமானிகளால் தரையிறக்கப்பட்டது. இந்திய கேப்டன் கத்தியால் குத்தப்பட்டதாகவும், அதன் பிறகு அவர் முன்னெடுத்த நடவடிக்கைகளால் பெரும்பாலும் இஸ்ரேலியர்கள் அடங்கிய 180-க்கும் மேற்பட்டோர் கொல்லப்படுவது தடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், “துணை விமானி ஒரு ஓமன் நாட்டவர். தாக்குதலுக்கு உள்ளானவர் இந்தியர் அல்லது இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்” என இஸ்ரேல் தரப்பில் இருந்து வெளியாகியுள்ள கூடுதல் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

பைலட்டை தாக்கிய கோ-பைலட்

விமானம் செங்குத்தாகக் கீழே விழத் தொடங்கியபோது, ​​இளம் விமானி தன்னுடன் கட்டுப்பாட்டு அறையில் இருந்த மூத்த விமானியைக் கத்தியால் குத்தி, அவரை விமானத்தின் காக்பிட்டிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்ற முயன்றதாக இஸ்ரேலியப் பயணி ஒருவர் ஊடகத்திடம் தெரிவித்துள்ளார். அவர் வழங்கிய தகவலின்படி, “விமானம் கீழே நோக்கி சரிய தொடங்கியதும், ​​முன்பகுதியில் அமர்ந்திருந்த பல இஸ்ரேலியர்கள் விமானியின் அறைக்கு விரைந்து சென்று தாக்குதல் நடத்தியவருடன் சண்டையிட்டனர். பின்பகுதியில் அமர்ந்திருந்த மற்ற இரண்டு விமானிகள் ஆரம்பத்தில் அதிர்ச்சியில் உறைந்து போயிருந்தனர். உடனே அங்கிருந்து கூடுதல் விமானிகளை நோக்கி கத்தி கூச்சலிட்டு அவர்களை விமானத்தின் கட்டுப்பாட்டை கையிலெடுக்க வலியுறுத்தியுள்ளனர். அந்த பயணிகள் குழு இறுதியில் தாக்குதல் நடத்தியவரை விமானத்தின் காக்பிட்டிலிருந்து வெளியேற்றியுள்ளனர். இந்த ஒட்டுமொத்த சம்பவமும் 17 ஆயிரம் அடி உயரத்தில் அரங்கேறியுள்ளது.

This is terrifying.

Over two dozen children onboard. pic.twitter.com/LWMsyZIdLQ
— Eyal Yakoby (@EYakoby) September 30, 2026

WATCH: Footage shows the aircraft during its descent, losing 4,000 meters in one minute.

pic.twitter.com/zXPAlrj4nD
— Open Source Intel (@Osint613) September 30, 2026

17,000 அடி உயரத்தில் நடந்தது என்ன?

குத்தப்பட்ட விமானி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்க, பயணிகளில் ஒருவராக இருந்த இஸ்ரேலிய பல் மருத்துவர் முதலுதவி செய்து உயிரை காப்பாற்றியுள்ளார். இதனிடையே விமானம் அவசர நிலையை எச்சரித்து சவுதி அரேபியாவில் உள்ள தபுக் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. முன்னதாக, சுமார் 30 ஆயிரம் அடி உயரத்தில் இருந்த விமானம் 30 நொடிகளில் 13 ஆயிரம் அடி உயரம் சரிந்து 17 ஆயிரம் அடி உயரத்தில் பறந்த நிலையில் இந்த ஒட்டுமொத்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இதனை கண்ட பயணிகள் உயிர் பயத்தில் அலறிய சம்பவம் தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. விமானம் தறிகெட்டு பறந்ததால் பல பயணிகள் காயமடைந்தது தொடர்பான வீடியோக்களும் அதிர்ச்சியூட்டும் விதமாக உள்ளன.

தீவிரவாத தாக்குதலா?

கத்தி குத்துபட்ட மூத்த விமானி மட்டுமின்றி, பயணிகளால் தாக்கப்பட்ட மற்றொரு விமானியும் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது ஒரு தீவிரவாத தாக்குதல் முயற்சியாக இருக்கக் கூடும் என பல்வேறு கருத்துகள் எழுந்தாலும், இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்தவித தகவலும் வெளியாகவில்லை.  ஓமன் நாட்டைச் சேர்ந்த இளம் விமானி, கடந்த ஓராண்டிற்கும் குறைவான காலமாகவே அந்த விமான நிறுவனத்தில் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது. இந்த நிகழ்விற்கான உண்மையான காரணம் என்ன? என்பது குறித்து விரிவான விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks