Fishermen Alert Weather Update (24.09.2026): கடலோர மாவட்டங்களில் இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்புள்ளது என கீழே விவரிக்கப்பட்டுள்ளது.

கடலோர மாவட்டங்களில் இன்றைய வானிலை:

வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சுமார் 7.6 கி.மீ உயரம் வரை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் மையப்பகுதியிலிருந்து, தாய்லாந்து வளைகுடா (Gulf of Thailand) வரை மத்திய வங்கக்கடல் பகுதிகள் மற்றும் வடக்கு அந்தமான் கடல் பகுதிகள் வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது. இதனால் கடலோர மாவட்டங்களை பொறுத்த்தவரை இன்று சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

தமிழக கடலோரப்பகுதிகள்:

24-09-2026: வட தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர்வேகத்திலும், தென் தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர்வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

25-09-2026 முதல் 27-09-2026 வரை: வட தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

வங்கக்கடல்பகுதிகள்:

24-09-2026:

மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் செப்டம்பர் 24 ஆம் தேதி மாலை வரை சூறாவளிக் காற்று மணிக்கு 55-65 கி.மீ வேகத்திலும், இடையிடையே அதிகபட்சமாக 75 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். அதன் பிறகு காற்றின் வேகம் படிப்படியாக குறைய வாய்ப்புள்ளது.

தெற்கு ஒடிசா வடக்கு ஆந்திரா மற்றும் ஏனாம் கடலோரப் பகுதிகளில் செப்டம்பர் 24 ஆம் தேதி மாலை வரை சூறாவளிக் காற்று மணிக்கு 55-65 கி.மீ வேகத்திலும், இடையிடையே அதிகபட்சமாக 65 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். அதன் பிறகு இதன் வேகம் படிப்படியாக குறைய வாய்ப்புள்ளது.

வடக்கு-தெற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் செப்டம்பர் 24 ஆம் தேதி வரை குறாவளிக் காற்று மணிக்கு 50-60 கி.மீ வேகத்திலும், இடையிடையே அதிகபட்சமாக 70 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்.

மேற்கு வங்கம், தெற்கு ஆந்திரா மற்றும் ஏனாம் கடலோரப் பகுதிகளில் செப்டம்பர் 24 ஆம் தேதி மாலை வரை குறாவளிக் காற்று மணிக்கு 45-55 கி.மீ வேகத்திலும், இடையிடையே அதிகபட்சமாக 65 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். இதர வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் செப்டம்பர் 23 ஆம் தேதி வீசக்கூடும்.

இதையும் படியுங்கள்: TN Weather News: இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங்? சென்னை, தமிழக வானிலை அறிக்கை

அரபிக்கடல் பகுதிகள்:

24-09-2026: கேரள-கர்நாடக கடலோரப்பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்” எனவே ஆழ்கடலில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் மேற்குறிப்பிடப்பட்ட பகுதிகளை தவிர்க்கவும்” என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

Source: Read Full Article