Fishermen Alert: தமிழக மீனவர்கள் இன்று கடலில் செல்லக்கூடாத பகுதிகள், புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி - வானிலை மையம் வார்னிங்

Fishermen Alert: தமிழக மீனவர்கள் இன்று கடலில் செல்லக்கூடாத பகுதிகள், புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி - வானிலை மையம் வார்னிங்
News Image

Fishermen Alert Weather Update (22.09.2026): கடலோர மாவட்டங்களில் இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்புள்ளது என கீழே விவரிக்கப்பட்டுள்ளது.

காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்:

வலுவான ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியானது மத்தியமேற்கு மற்றும் அதை ஒட்டிய மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவுகிறது. இது இன்று மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவடையும். மேலும் வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மத்தியமேற்கு மற்றும் அதை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவக்கூடும். இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து வடக்கு ஆந்திரதெற்கு ஓடிசா கடலோர பகுதிகளை சென்றடையக்கூடும். சுமார் 4.5 முதல் 7.6 கி.மீ உயரம் வரை மத்திய தமிழகம் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. சுமார் 5.8 முதல் 7.6 கி.மீ உயரம் வரை தென்கிழக்கு அரபிக்கடல் முதல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியுடன் தொடர்புடைய வளிமண்டல சுழற்சி வரை கேரளா, தமிழகம் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் வழியாக காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

கடலோர மாவட்டங்களில் இன்று மழை?

கடலோர மாவட்டங்களில் இன்று பெரிய அளவில் மழைக்கு வாய்ப்பு இல்லை எனவும், மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

தமிழக கடலோரப்பகுதிகள்:

22-09-2026 முதல் 23-09-2026 வரை: தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர்வேகத்திலும் வீசக்கூடும்.

வங்கக்கடல்பகுதிகள்:

22-09-2026: மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகள், தெற்கு வங்கக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோ மீட்டர்வேகத்திலும், வடக்கு ஆந்திர கடலோர பகுதிகள் மற்றும் இதர வங்கக்கடலின் அநேக பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர்வேகத்திலும், அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் இதர வங்கக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர்வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

23-09-2026: வடக்கு ஆந்திர கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோ மீட்டர்வேகத்திலும், இதர வங்கக்கடலின் அநேக பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர்வேகத்திலும், தெற்கு ஆந்திர கடலோர பகுதிகள், அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் இதர வங்கக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர்வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

இதையும் படியுங்கள்: TN Weather News: தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை நிலவரம் - வானிலை அறிக்கை

அரபிக்கடல் பகுதிகள்:

22-09-2026: கேரள-கர்நாடக கடலோரப்பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று” வானிலை மையம் எச்சரித்துள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks