Fishermen Alert Weather Update (23.09.2026): கடலோர மாவட்டங்களில் இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்புள்ளது என கீழே விவரிக்கப்பட்டுள்ளது.

வானிலை மைய எச்சரிக்கை:

வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மத்தியமேற்கு மற்றும் அதை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவுகிறது. இது மேலும் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து வடக்கு ஆந்திர தெற்கு ஓடிசா கடலோர பகுதிகளை நாளை காலையில் விசாகப்பட்டினம் மற்றும் கோபால்பூர் இடையில் கரையை கடக்கக்கூடும். சுமார் 3.1 முதல் 7.6 கி.மீ உயரம் வரை தென்கிழக்கு அரபிக்கடல் முதல் காற்றழுத்த தாழ்வு மண்டலத்துடன் தொடர்புடைய வளிமண்டல சுழற்சி வரை, கர்நாடகா மற்றும் கடலோர ஆந்திரா வழியாக காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது.

கடலோர மாவட்டங்களில் இன்றைய மழை வாய்ப்பு:

வானிலை மைய அறிக்கையின்படி, இன்று சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

தமிழக கடலோரப்பகுதிகள்:

23-09-2026: தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர்வேகத்திலும் வீசக்கூடும்.

24-09-2026 மற்றும் 25-09-2026: வட தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர்வேகத்திலும், தென் தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர்வேகத்திலும் வீசக்கூடும்.

வங்கக்கடல்பகுதிகள்:

23-09-2026 முதல் 25-09-2026 வரை:

காற்றின் வேகம் உயர்ந்து மணிக்கு 55 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 75 கிலோ மீட்டர் வேகத்தில் மத்தியமேற்கு மற்றும் வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் 23 முதல் 24 மாலை வரை வீசக்கூடும். வடக்கு ஆந்திர-தெற்கு ஓடிசா கடலோர பகுதிகளில் குறாவளிக்காற்று மணிக்கு மணிக்கு 55 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்தில் 23 முதல் 24 மாலை வரை வீசக்கூடும். தெற்கு ஆந்திர- மேற்கு வங்க கடலோர பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 லோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்தில் 23 முதல் 24 மாலை வரை வீசக்கூடும்.

இதையும் படியுங்கள்: TN Weather News: 5 மாவட்டங்களுக்கு வார்னிங்? இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை, தமிழக வானிலை அறிக்கை

ஆந்திர கடலோர பகுதிகள் மற்றும் மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், தென்கிழக்கு வங்கக்கடலின் சில பகுதிகள் மற்றும் மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் குறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 இலோ மீட்ட கிலோ மீட்டர் வேகத்திலும் 25-09-2026 அன்று வீசக்கூடும். மீட்டர் வேகத்திலும் இடையிடையே 50

அரபிக்கடல் பகுதிகள்:

23-09-2026 மற்றும் 24-09-2026: கேரள-கர்நாடக கடலோரப்பகுதிகள், லட்சத்தீவு பகுதிகள் மற்றும் மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் குறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே ஆழ் கடல் மீனவர்கள் மேற்குறிப்பிட்ட நாட்களில் இப்பகுதிகளை செல்வதை தவிர்க்க வேண்டும்” என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

Source: Read Full Article