ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டியின், துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று, இந்தியாவிற்கே பெருமைச் சேர்த்திருக்கிறார் தமிழ்நாட்டை சேர்ந்த இளவேனில் வாலறிவன். இவருக்கு இந்தியா முழுவதும் வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

இளவேனில்

காராமணிகுப்பத்தை சேர்ந்த சோராமணி !

தமிழ்நாட்டின் வட மாவட்டமான, கடலூர் காராமணிகுப்பத்தை பூர்வீகமாக கொண்ட இளவேனில், தனிநபர் 10 மீட்டர் துப்பாக்கிச் சுடுதலில் ஒற்றை ஆளாக நின்று, வென்று, இந்தியாவிற்கு வெள்ளிப் பதக்கத்தை பெற்றுக்கொடுத்தது மட்டுமல்லாமால், மூன்று பேர் கொண்ட மகளிர் அணியையும் வெள்ளிப் பதக்கம் வாங்க வைத்து, சாதனைப் படைத்திருக்கிறார் இளவேனில்.

ஜுனியரிலும் தங்கம் – சீனியரிலும் தங்கம்

வெறும் 20 வயதில் 2018 ல் நடைபெற்ற ஜூனியர் உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதலில் பங்கேற்று, முதன் முதலில் தங்கப்பதக்கம் வென்ற சாதனை படைத்த தாரகை இளவேனில். 2019ல் பிரேசிலில் நடைபெற்ற சீனியர் உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியிலும் தங்கப்பதக்கம் வென்று இந்தியாவிற்கு கூடுதல் பெருமை சேர்த்தவர்.

அர்ஜூனா விருது அறிவித்த மத்திய அரசு

இளவேனிலின், சாதனையை பாராட்டி மத்திய அரசு அவருக்கு, விளையாட்டுத் துறைக்கு அளிக்கப்படும் உயரிய விருதான அர்ஜூனா விருது அளித்து கவுரவித்தது. சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தங்கம் வென்ற மூன்றாவது இந்தியர் என்ற பெருமையை கொண்டிருக்கும் இளவேனில், விஜயகுமாருக்கு பின்னர் சுப்பாக்கிச் சுடுதலுக்காக அர்ஜூனா விருது பெற்ற இரண்டாவது தமிழ்நாட்டை சேர்ந்த வீராங்கனை என்ற மற்றொரு வீராங்கனை என்ற புகழையும் தன் வசப்படுத்தியிருக்கிறார்.

தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை

கடலூர் மாவட்டம் காராமணிக்குப்பத்தை சேர்ந்த வாலறிவான் என்ற ஒரு சாதாரண ஆசிரியரின் மகளான வாலறிவான், இன்று உலகமே திரும்பி பார்க்கும் சாதனை பெண்ணாக உயர்ந்ததற்கு அவரது தந்தை வாலறிவன் முக்கிய காரணமாக இருந்திருக்கிறார். பெண் பிள்ளைகளை விளையாட்டில் ஈடுபடுத்தவே இன்னும் பல பெற்றோர்கள் தயங்கி நிற்கும் நேரத்தில், அனைவருக்கும் எடுத்துக்காட்டாய் விளங்கி, இளவேனிலை இந்தியாவின் பெருமையாக மாற்றிக்காட்டியிருக்கிறார் அவர்.

தமிழ்நாடு அரசு கவுரவிக்க வேண்டும்

குஜராத் மாநிலம் அகமதாப்பாத்தில் இளவேனில் குடும்பம் செட்டில் ஆகிவிட்டாலும், தமிழ்நாட்டின் தங்க மகளான அவரை அழைத்து, இந்தியாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமையை பெற்றுக்கொடுத்திருக்கிற இளவேனிலை முதல்வர் விஜய் கவுரவிக்க வேண்டும் என்று அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இளவேனிலுக்கு குடியரசுத் தலைவர், துணை குடியரசுத் தலைவர், பிரதமர், உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்தியநாத் உள்ளிட்டோரும் வாழ்த்துகளை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Source: Read Full Article