DMK: "மக்கள் வரிப்பணத்தில் இன்பச்சுற்றுலா போனீங்களா விஜய்?" முதலமைச்சருக்கு திமுக சரமாரி கேள்வி

DMK: "மக்கள் வரிப்பணத்தில் இன்பச்சுற்றுலா போனீங்களா விஜய்?" முதலமைச்சருக்கு திமுக சரமாரி கேள்வி
News Image

தமிழ்நாட்டில் விஜய் தலைமையிலான தவெக அரசு நடந்து வருகிறது. தவெக ஆட்சிக்கு மிகப்பெரிய சவாலாக இருப்பது நிதிச்சுமை. இதனால், தமிழ்நாட்டிற்கு ஏராளமான முதலீடுகளை கொண்டு வர அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்த சூழலில், முதலமைச்சர் விஜய் லண்டனுக்குச் சென்று முதலீட்டாளர்களைச் சந்தித்தார்.

விஜய் லண்டன் பயணம்:

முதலீட்டாளர்களுடனான சந்திப்பின் மூலமாக சுமார் 13 ஆயிரம் கோடிக்கு மேல் முதலீடுகள் ஈர்க்கப்பட்டதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அதேசமயம், 6 நாட்கள் லண்டனில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் ஒரு நாள் மட்டுமே முதலீட்டாளர்களைச் சந்தித்ததால் மற்ற நாட்கள் என்ன செய்தார்? என்ற கேள்வியை பல்வேறு தரப்பினரும் முன்வைத்து வருகின்றனர்.

திமுக ஒப்பீடு:

முதலமைச்சர் விஜய்யின் லண்டன் பயணம் குறித்து திமுக கேள்வி எழுப்பியுள்ளது. இதுதொடர்பாக, அவர்கள் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக இருந்தபோது அவரது சுற்றுப்பயணத்தில் ஈர்க்கப்பட்ட முதலீடுகள், விஜய்யின் சுற்றுப்பயணத்தின்போது ஈர்க்கப்பட்ட முதலீடுகள் குறித்து ஒப்பிட்டு திமுக கேள்வி எழுப்பியுள்ளது.

இதுதொடர்பாக, திமுக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,

இன்பச் சுற்றுலா சென்றாரா விஜய்?

தமிழ்நாட்டிற்கான முதலீடுகளை ஈர்க்கப்போவதாகக் கூறி, மக்களின் வரிப்பணத்தில் அரசு செலவில் லண்டனுக்கு இன்பச் சுற்றுலா சென்று வந்துள்ளாரா முதலமைச்சர் தம்பி விஜய்?

திராவிட மாடல் ஆட்சியின் முதலமைச்சர், தலைவர் மு.க.ஸ்டாலினின் கடந்த ஆண்டு இதே செப்டம்பர் மாதத்தில் தான் ஐரோப்பா பயணம் மேற்கொண்டார். பயணத்தைத் தொடங்கும் முன்பும், நாடு திரும்பிய பின்பும், விமானநிலையத்தில் பத்திரிகையாளர்களை நேரில் சந்தித்து தகவல்களை மக்களிடம் வெளிப்படையாகப் பேட்டி மூலம் தெரிவித்தார்.

ஏன் இந்த ரகசியம்:

பயணத்தின் போதும் ஒவ்வொரு நாளும் அவருடைய நிகழ்ச்சிகள் தெளிவாக வெளியிடப்பட்டன.  ஆனால் டம்மி முதலமைச்சர் தம்பி விஜய்யின் அரசு செலவிலான பயண விவரங்கள் ரகசியமாகவே இருந்தன.  எந்தக் கேள்விக்கும் பதில் இல்லை, ஏன்?

ஒரு நாள் கார் ரேஸ் பார்த்த விவரம் வெளியானது. இன்னொரு நாள் முதலீட்டாளர் சந்திப்பு நடந்ததாக படம் காட்டப்பட்டது. மற்ற நாட்களில் இன்ப சுற்றுலா தானா?

என்ன முயற்சி?

செப்டம்பர் 10ல் லண்டன் கிளம்பி, செப்டம்பர் 17 திரும்பிய நிலையில்,  7 நாட்களில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக மேற்கொண்ட முயற்சிகள் என்ன? விடுமுறை நாட்களில் பயணம் போவது முதல்வரின் உரிமை. அதை முதலீட்டாளர் சந்திப்பு என்று அரசு பணத்தில் மேற்கொண்டது ஏன்?

இவ்வாறு திமுக பதிவிட்டுள்ளது.

முதலமைச்சர் விஜய்யின் 7 நாட்கள் சுற்றுப்பயணத்தின் முழு விவரத்தை வெளியிட வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதற்கு தவெக அரசு பதில் அளிக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks