திமுகவின் கண்டன ஆர்ப்பாட்டத்தில் சர்ச்சையாக பேசிய துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா பேச்சுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பற்றி பேசிய கருத்துகளை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் நேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுக துணைப் பொதுச்செயலாளரும், எம்பியுமான ஆ.ராசா பங்கேற்று பேசிய கருத்துகள் கடும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமாரை ஒருமையில் பேசியதோடு மட்டுமல்லாமல் அவரது பிறப்பு குறித்தும் பேசினார். இது மிகப்பெரிய அளவில் கண்டனத்தைப் பெற்று வருகிறது. அரசியல் தலைவர்களும் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.

மு.க.ஸ்டாலின் வேடிக்கை பார்க்கிறார்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில பொதுச் செயலாளர் சண்முகம் வெளியிட்டுள்ள பதிவில், “திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா பேச்சு வன்மையான கண்டனத்திற்குரியது. திமுக தலைவர்களில் சிலர் தொடர்ந்து பெண்களை கொச்சைப்படுத்தி பேசுவதும் அதைக் கேட்டு தொண்டர்கள் ஆர்ப்பரிப்பதும் சகிக்க முடியவில்லை. அமைச்சர் நிர்மல் குமார் பேசியதை கண்டியுங்கள். அவருடைய தாயாரை இழிவு படுத்துவதை எப்படி திமுக தலைவர் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்.

பொதுவெளியில் பெண்களை இழிவு படுத்தி பேசுபவர் யாராக இருந்தாலும் அந்தந்த கட்சி தலைமை கண்டிக்கவும், ஒழுங்குபடுத்தவும் முன்வர வேண்டும். சில திமுகவினர் "கண்ணியம்" தவறுவது தொடர்கிறது. "கட்டுப்பாடு" நிலை நிறுத்தும் "கடமை"யை திமுக. தலைவர் செய்வார் என்று நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.

மூழ்கும் கப்பலாக மாறும் திமுக

இதேபோல், கண்ணியம் என்பது திமுகவின் மேடைகளில் வெறும் வெற்று முழக்கம்தானா? திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பொதுவெளியிலும் தொண்டர்கள் கூட்டத்திலும் "அரசியல் களத்தில் யாரை விமர்சித்தாலும் கண்ணியத்தோடும் நாகரிகத்தோடும் பேசுங்கள்" என்று உபதேசம் செய்கிறார். ஆனால் எதார்த்த களத்தில் நடப்பதோ அதற்கு முற்றிலும் நேர்மாறாக இருக்கிறது. முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மற்றும் ஆர்.எஸ்.பாரதி போன்ற மூத்த உறுப்பினர்கள் பொதுமேடைகளில் வரம்பு மீறி, முதலமைச்சர் விஜய் அவர்களை ஒருமையில் விளிப்பதும், தரம் கெட்ட வன்மச் சொற்களைப் பயன்படுத்துவதும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.மக்கள் தீர்ப்பை மதிக்காமல் மாநில முதலமைச்சரையே பொதுமேடைகளில் ஒருமையில் இழிவுபடுத்துவது, பெண்களுக்கு எதிரான தொடர் அவமதிப்புகள் மீது தன் கட்சிக்குள் உரிய நடவடிக்கை எடுக்காமல் மௌனம் காப்பது, அதிகாரத்தை இழந்த விரக்தியில் பொதுவெளியில் தரம் தாழ்ந்து கூச்சலிடுவது என திமுக இன்று தன் நம்பகத்தன்மையை இழந்து மூழ்கும் கப்பலாக மாறிக் கொண்டிருக்கிறது என காங்கிரஸ் மாநில தலைவர் மாணிக்கம் தாகூர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

Source: Read Full Article