Diwali 2026 Train Booking: தீபாவளிக்கு ஊருக்கு போறீங்களா? .. ரயில் டிக்கெட் முன்பதிவு எப்போது?.. தேதியை நோட் பண்ணுங்க!

Diwali 2026 Train Booking: தீபாவளிக்கு ஊருக்கு போறீங்களா? .. ரயில் டிக்கெட் முன்பதிவு எப்போது?.. தேதியை நோட் பண்ணுங்க!
News Image

2026ம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரயில்களில் முன்பதிவு எப்போது தொடங்கும் என்பது பற்றிய தகவல்களைக் காணலாம்.

2026ம் ஆண்டு தீபாவளி பண்டிகை

சாதி, மதங்கள் கடந்து அனைவராலும் கொண்டாடப்படும் பண்டிகையாக தீபாவளி உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாத அமாவாசையை கணக்கிட்டு கொண்டாடப்படும் இப்பண்டிகை அக்டோபர் 15ம் தேதி தொடங்கி நவம்பர் 15ம் தேதிக்குள் வரும். அப்படியாக பார்க்கும்போது 2026ம் ஆண்டு தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் 8ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருகிறது. இதனால் ஒரு அரசு விடுமுறை கட் ஆகும் சூழல் உருவாகியுள்ளதால் பலரும் சோகத்தில் உள்ளனர்.

தீபாவளி பண்டிகைக்கு இப்போதே பட்டாசு விற்பனை தொடங்கி விட்டது. ஆன்லைனில் பட்டாசுகள் விற்பனை தள்ளுபடி விலையிலும் கிடைக்கிறது.

சொந்த ஊர் செல்லும் மக்கள்

இந்த சூழலில் வெளியூரில் உள்ளவர்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு செல்ல திட்டமிடுவார்கள். குறைவான கட்டணம், சரியான பயண நேரம், பாதுகாப்பு உள்ளிட்டவை கருத்தில் கொண்டு பலரின் விருப்பமாக ரயில்கள் உள்ளது. இத்தகைய ரயில்களில் 60 நாட்களுக்கு முன்னரே டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும் என்பதால் பலரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இன்னும் சில நாட்களில் தீபாவளி பண்டிகை டிக்கெட் முன்பதிவானது தொடங்கவுள்ளது.

தீபாவளி நவம்பர் 8ம் தேதி என்ற நிலையில் நவம்பர் 5ம் தேதி முதலே வெளியூரில் உள்ளவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர்.

எந்த நாளுக்கு செல்ல எப்போது புக் பண்ண வேண்டும்?

அப்படியாக நவம்பர் 5ம் தேதி வியாழக்கிழமை செல்லவுள்ளவர்கள் செப்டம்பர் 6ம் தேதி ஞாயிற்றுக்கிழமை முன்பதிவு செய்ய வேண்டும். நவம்பர் 6ம் தேதி வெள்ளிக்கிழமை செல்லவுள்ளவர்கள் செப்டம்பர் 7ம் தேதி திங்கட்கிழமை முன்பதிவு செய்ய முடியும். நவம்பர் 7ம் தேதி சனிக்கிழமை பயணம் மேற்கொள்ள விரும்பினால் செப்டம்பர் 8ம் தேதி செவ்வாய்க்கிழமை டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும். தீபாவளி அன்று விடுமுறை வாங்கி ஊருக்கு செல்ல விரும்பினால் செப்டம்பர் 9ம் தேதி புதன்கிழமை டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும்.

மறுமார்க்கமாக தீபாவளி பண்டிகை முடிந்து ஊரில் இருந்து வர நவம்பர் 9ம் தேதி திங்கட்கிழமை டிக்கெட் வேண்டுமென்றால் செப்டம்பர் 10ம் தேதியும், செவ்வாய்கிழமையான நவம்பர் 11ம் தேதி வேண்டும் என நினைத்தால் செப்டம்பர் 11ம் தேதி வெள்ளிக்கிழமையும் டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும்.

ஒவ்வொரு நாளும் காலை 8 மணிக்கு முன்பதிவு தொடங்கும் நிலையில் சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட ஐஆர்சிடிசி இணையதளம் மக்களுக்கு கைகொடுக்கும் என நம்பப்படுகிறது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks