தாராபுரம் இடைத்தேர்தலில் போட்டியிடும் தவெக வேட்பாளர் சத்யபாமாவை ஆதரித்து முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று பரப்புரை மேற்கொள்ளவுள்ளார்.

களைகட்டும் தாராபுரம் இடைத்தேர்தல்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் வரும் அக்டோபர் 6ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு அங்கு அரசியல் கட்சியினர் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகின்றனர். தாராபுரம் தொகுதியில் தவெக, திமுக, அதிமுக, நாம் தமிழர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி என 5 முனை போட்டி நிலவுகிறது. தாராபுரத்தில் தவெக வேட்பாளராக சத்யபாமா அறிவிக்கப்பட்டுள்ளார். அவரை ஆதரித்து தவெக அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், நிர்வாகிகள், கூட்டணி கட்சி தலைவர்கள் என பலரும் வாக்கு சேகரித்து வருகின்றனர்.

முதலமைச்சர் விஜய் தேர்தல் பரப்புரை

இதனிடையே தமிழ்நாடு முதலமைச்சரும், தவெக தலைவருமான ஜோசப் விஜய் இன்று தாராபுரம் வட்டம், சித்ராவுத்தன்பாளையம் கிராமம், மாருதி நகரில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். மாலை 3.30 மணிக்கு இந்நிகழ்ச்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக விமானம் மூலம் கோவை வரும் விஜய் பின் சாலை மார்க்கமாக தாராபுரம் செல்கிறார். வழியெங்கும் விஜய்க்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்க தவெக தொண்டர்கள், பொதுமக்கள் ஆர்வமுடன் உள்ளனர்.

இந்த நிகழ்ச்சியானது முழுக்க முழுக்க அனுமதி பெற்றவர்களுக்கு மட்டுமே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. QR குறியீட்டுடன் கூடிய நுழைவுச் சீட்டு அளிக்கப்பட்டுள்ள 5000 பேர் மட்டுமே இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புக் கருதி, கர்ப்பிணிப் பெண்கள், சிறுவர் - சிறுமியர், பள்ளி மாணவ - மாணவியர், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், உடல்நலம் குன்றியவர்கள் உள்ளிட்டவர்களுக்கு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளவர்களுக்குத் தேவையான குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

காலையிலேயே குவிந்த தொண்டர்கள்

இந்த நிலையில் தாராபுரத்தில் தேர்தல் பரப்புரை நடக்கும் இடத்தில் காலை முதலே தொண்டர்கள் குவிந்து வருகின்றன. அவர்களுக்கு தேவையான குடிநீர், உணவு போன்றவை வழங்கப்பட்டு வருகின்றன. மேலும் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் நிகழ்ச்சி நடைபெறும் இடத்துக்கு வெளிப்பகுதியிலும் மக்களும், தொண்டர்களும் குவியத் தொடங்கியுள்ளனர். இதனால் அங்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அமைச்சர்கள், தவெக நிர்வாகிகள் என அனைவரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு தொண்டர்களை கட்டுக்கோப்பாக வைத்து வருகின்றனர். இளைஞர்கள், இளம் பெண்கள் என போட்டி போட்டு நிகழ்ச்சி நடைபெறும் மைதானத்தில் இடம்பிடித்துள்ளனர்.

தாராபுரத்தில் கூடிய கூட்டத்தைப் பற்றி முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கூறுகையில், “திராவிட கட்சிகள் இப்படி ஒரு கூட்டத்தை கூட்ட வேண்டும் என்றால் வண்டி, சாப்பாடு நிறைய ஏற்பாடுகள் செய்யணும். ஆனால் இங்க வந்திருக்க கூட்டம் தலைவர் மேல் உள்ள பாசத்தால் மட்டும் வந்திருக்க கூட்டம் என மகிழ்ச்சி பொங்க தெரிவித்துள்ளார்.

Source: Read Full Article