அமைச்சர் நிர்மல்குமார் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசியதாவது,

கட்டாயம்:

ஒரு விஷயத்தை நாம் மாற்ற வேண்டும் என்று அப்படி இல்லை. ஒரு தப்பான விஷயத்தை அவர்கள் திணிக்கும்போது அதை சொல்ல வேண்டிய கட்டாயத்தில் நாங்கள் உள்ளோம்.

இவர்களுக்கு ஏதும் தெரியாது, நாம்தான் இத்தனை ஆண்டுகள் இருந்தோம், இவர்களுக்கு எல்லாம் என்ன தெரியும்? அப்படி என்று ஒரு அணுகுமுறை இருக்கும்போது அதை சொல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது. இப்போ உள்ள இளைஞர்களுக்கு கடைசி தேர்தல் எப்போது நடந்தது? என்று கேட்டால் ஞாபகம் இருக்காது. ஆனால், இந்த தேர்தலில் என்ன நடக்கிறது? என்று தெரியும்.

சட்டசபை பற்றி தெரியும்:

முன்பு சட்டசபை என்னவென்று கேட்டால் யாருக்கும் தெரியாது. ஆனால், சட்டசபை பற்றி எங்களை விட அவர்களுக்கு நன்றாக தெரிகிறது. இந்த சூழலில், ஏன் இந்த மாநிலம் இப்படி இருக்கிறது? என்று சொல்ல வேண்டும். காவிரி என்றால் காவிரி விவகாரத்தில் என்னடா அனைத்து வருடமும் வழக்கு போடுகிறார்களே? தண்ணீர் திறக்க வேண்டும் என்கிறார்கள். அவர்கள் திறக்க மாட்டேங்கிறார்களே? காவிரி ஆணையம் இருக்கிறது. இப்போதுதான் யோசிக்க ஆரம்பித்துள்ளார்கள்.

கச்சத்தீவு என்றால் கச்சத்தீவு மீனவர்கள் போகிறார்கள், சுடுகிறார்கள். இதுவரை நாளிதழில் பார்த்திருப்பார்கள். அதை கடந்து சென்றிருப்பார்கள். ஒரு நிமிடம் கூட கேட்டிருக்கமாட்டார்கள். ஆனால், இப்போது அனைவரும் ஏன் நமது மீனவர்களை சுடுகிறார்கள். அவர்களுக்கு ஏன் அந்த வசதி கிடைக்கவில்லை? என்று கேள்வி கேட்கிறார்கள்.

இந்த சூழல் ஏன் ஏற்பட்டதை நாம் சொல்ல வேண்டியிருக்கும். தப்பான வரலாற்றை ஒருவர் திணிக்கும்போது அதை சொல்ல வேண்டிய சூழல் இருக்கிறது. இதனால்தான் இப்படி உள்ளது. இதை சரி செய்வதற்கான நேரம் வேண்டும். கட்சி நிதி என்கிறோம். கட்சி நிதி எங்கெங்கே வருகிறது என்று அனைவருக்கும் தெரியும்.

நம்பிக்கை:

காசு கொடுக்காமல் ஓட்டுநர் உரிமம் யாராவது எடுத்தீர்களா? ஒருவரும் எடுத்திருக்க மாட்டீர்கள். எங்கெங்கே கட்சி நிதியை நாம் நிறுத்தியுள்ளோம் என்று சொல்ல வேண்டும். நம்மிடம் எந்த பயமும் இல்லை. நம்மிடம் எந்த ஒளிவு மறைவும் இல்லை. அதனால், ஆணித்தரமாக எடுத்துச் சொல்வதில் எந்த தப்பும் இல்லை. சொன்னால்தான் இவர்களுக்கும் புரியும், மக்களுக்கும் புரியும். அந்த சூழல் ஏற்பட்டபோது சொல்ல வேண்டிய கட்டாயம். நம்மிடம் பயம் இல்லை.

இப்போது விட்டாலும் விஜய் சார் மீது மக்கள் வைத்த நம்பிக்கையில் 100 தேர்தலை பார்ப்போம். தேர்தலுக்காக பயப்படவில்லை. ஓட்டுக்கு 2 ஆயிரம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. மக்கள் தலைவரை ( விஜய்யை) நம்புகிறார்கள். அவர் மக்களை நம்புகிறார். அதுவே போதும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தவெக அரசில் மிகவும் முக்கியமான அமைச்சராக நிர்மல்குமார் உள்ளார். சட்டத்துறை, மின்சார துறை என முக்கிய துறைகளை அவர் நிர்வகித்து வருகிறார். மேலும், சட்டமன்ற கூட்டத்தொடரில் திமுக எம்எல்ஏ-க்கள் முன்வைத்த பல வாதங்களுக்கு நிர்மல்குமார் பதில்கள் அளித்தார். மேலும், அவரது பல்வேறு வாதங்களுக்கு திமுக-வினரும் கடும் கண்டனத்தை தெரிவித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Source: Read Full Article