CSK fixing controversy: மீண்டும் ஃபிக்சிங் சர்ச்சையில் சிக்கிய சிஎஸ்கே - ஒரு போட்டோவிற்கு ரூ.60 லட்சம்? சிக்கிய வீரர்?

CSK fixing controversy: மீண்டும் ஃபிக்சிங் சர்ச்சையில் சிக்கிய சிஎஸ்கே - ஒரு போட்டோவிற்கு ரூ.60 லட்சம்? சிக்கிய வீரர்?
News Image

CSK Fixing Controversy: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் விவரங்களை கசியவிட்ட வீரர் யார் என்ற கேள்வி? சமூக வலைதளங்களில் தீவிர விவாதங்களை எழுப்பியுள்ளது.

ஃபிக்சிங் சர்ச்சையில் சிக்கிய CSK:

டெல்லி பிரீமியர் லீகில் ஸ்பாட் ஃபிக்சிங் நடந்துள்ளது என்பது தொடர்பான பல்வேறு ஆதாரங்களை, டெஹல்கா எனும் தனியார் ஊடகம் அம்பலப்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக முன்னாள் ரஞ்சி கிரிக்கெட் வீரர் ரச்சித் பாட்டியா என்பவருடன், அந்த நிறுவன நிரூபர் நடத்திய கலந்துரையாடல் வீடியோவு வெளியிடப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தை மேலும் பூதாகரமானதாக மாற்றும் வகையில், ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரகசிய தகவல்களை முன்கூட்டியே கசியவிட்டு ஸ்பாட் ஃபிக்சிங் செய்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக டெஹல்கா ஊடகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், முன்னாள் ரச்சித் பாட்டியா கூறியதாக பல பகீர் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

ஸ்நாப்சாட் மூலம் பகிரப்பட்ட தகவல்கள்:

அதில், ”2025 இந்தியன் பிரீமியர் லீக் சீசனின் போது, ​​சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குறித்த தகவல்களை லண்டனில் உள்ள பந்தயத் தரகர்களுக்கு ஸ்நாப்சாட் மூலம் அனுப்பி, நான் ஐந்து போட்டிகளின் ஸ்பாட் ஃபிக்சிங்கில் ஈடுபட்டேன். ஒரு போட்டிக்கு ரூ.60 லட்சம் வீதம், அந்த ஐந்து போட்டிகளின் மூலம் மொத்தமாக ரூ.3 கோடி சம்பாதித்தேன். ஐபிஎல் 2026-ல் போட்டிகளை ஃபிக்சிங் செய்ய விரும்பினால், என் வீரரை அணியில் சேர்க்க வேண்டும். அவர் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன், போட்டி நிர்ணயம் மற்றும் ஸ்பாட் ஃபிக்சிங் ஆகிய இரண்டும் சாத்தியமாகும். ஐபிஎல்-ல் ஸ்பாட் ஃபிக்சிங்கிற்கான கட்டணம் ஒரு போட்டிக்கு ரூ. 1 கோடியாக இருக்கும். டாஸ் போடுவதற்கு முன்பே ஆடும் லெவன் குறித்த தகவல்களைப் பகிர்வதற்கு ஒரு போட்டிக்கு ரூ. 60 லட்சம் செலவாகும்" என்று அந்த கலந்துரையாடலில் ரச்சித் பாட்டியா குறிப்பிட்டுள்ளார்.

மீண்டும் CSK-வில் வெடித்த சர்ச்சை..!

ஏற்கனவே 2013ம் ஆண்டு ஐபிஎல் சீசனில் ஸ்பாட் ஃபிக்சிங்கில் ஈடுபட்ட குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு, சென்னை அணிக்கு 2016 மற்றும் 2017 ஆகிய இரண்டு சீசன்களில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் கடந்த சீசனில் அணியின் ப்ளேயிங் லெவன் உள்ளிட்ட தகவல்கள் டாஸிற்கு முன்பே கசிந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அதோடு, நடப்பாண்டிலும் அத்தகைய தகவல்களை பெற தனக்கு சாதகமான வீரர் அணியில் இருக்க வேண்டு என ரச்சித் பாட்டியா குறிப்பிட்டுள்ளார். அவர் குறிப்பிடும் வீரர் டெல்லியை சேர்ந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆன வன்ஷ் பேடி தான் எனவும் சிலர் சமூக வலைதளங்களில் விவாதிக்க தொடங்கினர்.

வன்ஷ் பேடி விளக்கம்:

சமூக வலைதளங்களில் பரவி வரும் வதந்திகள் தொடர்பாக 2025ம் ஆண்டு சிஎஸ்கே அணியில் இடம்பெற்று இருந்த வன்ஷ் பேடி  சமூக வலைதளத்தில் விளக்கம் அளித்துள்ளார். அதில், “சிஎஸ்கே வீரர் ஒருவர் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் ஸ்பாட் ஃபிக்சிங் குறித்து முன்னாள் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் வீரர் ரச்சித் பாட்டியா குறிப்பிடும் நபர் நான் அல்ல என்பதையும், அத்தகைய எந்தவொரு செயலிலும் எனக்குச் சிறிதளவும் தொடர்பு இல்லை என்பதையும் நான் திட்டவட்டமாகக் கூறுகிறேன். இந்தக் குற்றச்சாட்டுகளுடன் என்னைத் தவறாகத் தொடர்புபடுத்தும் எந்தவொரு முயற்சியும் மிகவும் அவதூறானது” என விளக்கமளித்துள்ளார்.

இதையும் படியுங்கள்: TN Byelection: ஆளுக்கு ஒன்னு..! வேட்பாளர்களை கைவிட்டு, DMK & ADMK கூட்டணி? சமாளிக்குமா TVK? விஜய் வியூகம் என்ன?

சிஎஸ்கே திட்டம் என்ன?

செப்டம்பர் 25 அன்று நடைபெறவிருக்கும் பிசிசிஐ-யின் வருடாந்திர பொதுக் கூட்டத்திற்கு முன்னதாக, சிஎஸ்கே அணி நிர்வாகம் ஸ்பாட் ஃபிக்சிங் குற்றச்சாட்டுகளை ஆராயும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விவகாரத்தை ஆராய்ந்த பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த அணி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. அதில் ரச்சித் பாட்டியா சொன்ன தகவல்கள் உண்மையா? உண்மை என்றால் தகவல்களை கசியவிட்டது யார்? என்பது போன்ற பல்வேறு கேள்விகளுக்கான பதில்கள் வெளியாகுமா? என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks