தொடர் விடுமுறை கொண்டாட்டம்

விடுமுறை என்றாலே கொண்டாட்டம் தான், அந்த வகையில், எப்போது விடுமுறை கிடைக்கும் வெளியூர்களுக்கு சுற்றுலா செல்லலாம், உறவினர்கள் வீட்டிற்கு செல்லலாம் என காத்திருப்பவர்களுக்கு குஷியான மாதமாக செப்டம்பர் மாதம் அமைந்தது. அந்த வகையில் அடுத்தடுத்து 3 நாள் தொடர் விடுமுறையானது கிடைத்தது. குறிப்பாக செப்டம்பர் 4 ஆம் தேதி வெள்ளிக்கிழமை கிருஷ்ண ஜெயந்தியையொட்டி அரசு விடுமுறையாகவும், அடுத்ததாக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை என தொடர்ந்து 3 நாள் விடுமுறை கிடைத்தது.

இதே போல மீண்டும் 3 நாள் தொடர் விடுமுறையாக செப்டம்பர் 12ஆம் தேதி சனிக்கிழமையும், அடுத்தாக 13 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறையோடு சேர்த்து திங்கட்கிழமை விநாயகர் சதுர்த்தி விடுமுறை காரணமாக தொடர்ந்து 3 நாள் விடுமுறை கிடைத்தது.

3 நாட்கள் தொடர் விடுமுறை

எனவே தொடர் விடுமுறை காரணமாக மாணவர்கள்கள் முதல் அரசு ஊழியர்கள் வரை குஷியில் இருந்தனர். இந்த நிலையில், அக்டோபர் மாதம் தொடக்கமும் விடுமுறையை அள்ளிக்கொடுக்கும் மாதமாக தொடங்கியுள்ளது. அந்த வகையில் தற்போது பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறையாக இன்று முதல் வருகிற அக்டோபர் 4ஆம் தேதி வரை 9 நாட்கள் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அரசு ஊழியர்களுக்கு குஷியான அறிவிப்பாக அக்டோபர் 2, வெள்ளிக்கிழமை காந்தி ஜெயந்தி அரசு பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அக்டோபர் 3 சனிக்கிழமை, அக்டோபர் 4 ஞாயிற்றுக்கிழமை என தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை கிடைக்கிறது. தமிழக அரசின் 2026-ம் ஆண்டுக்கான விடுமுறை அறிவிப்பின்படி, அரசு அலுவலகங்களுக்கு அனைத்து சனிக்கிழமைகள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளும் விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

அக்டோபர் 2 முதல் தொடர் விடுமுறை

இதனால் அரசு ஊழியர்களுக்கு அக்டோபர் 2 முதல் 4-ம் தேதி வரை தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை கிடைக்கிறது. ஏற்கனவே பள்ளி மாணவர்களுக்கு காலாண்டுத் தேர்வு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது அரசு ஊழியர்களுக்கும் இதே காலகட்டத்தில் தொடர் விடுமுறையானது கிடைக்கவுள்ளதால் குடும்பத்துடன் வெளியூர் செல்லவும், சொந்த ஊருக்குச் செல்லவும் இந்த மூன்று நாள் விடுமுறை பயனுள்ளதாக அமையும் என்பதால் அரசு ஊழியர்கள் குஷியில் உள்ளனர்.

Source: Read Full Article