CM Vijay: மதுராந்தகம் மக்கள் மத்தியில் இன்று விஜய்! என்ன பேசப்போகிறார்? எதிர்பார்ப்பில் வாக்காளர்கள்?

CM Vijay: மதுராந்தகம் மக்கள் மத்தியில் இன்று விஜய்! என்ன பேசப்போகிறார்? எதிர்பார்ப்பில் வாக்காளர்கள்?
News Image

தமிழ்நாட்டில் காலியாக உள்ள 7 தொகுதிகளில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கும் வரும் அக்டோபர் 6ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் தனிப்பெரும்பான்மை இல்லாமல் ஆட்சி நடத்தி வரும் தவெக-விற்கு இந்த இடைத்தேர்தல் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.

மதுராந்தகத்தில் இன்று விஜய்:

இந்த இடைத்தேர்தலில் தவெக - திமுக - அதிமுக - நாம் தமிழர் - இந்திய கம்யூனிஸ்ட் என 5 முனைப் போட்டி நிலவுகிறது. இந்த நிலையில், ஆளுங்கட்சியான தவெக வேட்பாளர்களுக்கு ஆதரவாக முதலமைச்சர் விஜய் இன்று மதுராந்தகத்தில் பரப்புரையில் ஈடுபடுகிறார்.

3 மணிக்கு பரப்புரை:

அதிமுக-வில் இருந்து சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெக-வில் வேட்பாளராக களமிறங்கும் மரகதம் குமரவேலுக்கு ஆதரவாக விஜய் இன்று பரப்புரையில் ஈடுபடுகிறார்.  செங்கல்பட்டு, மதுராந்தகம் தொகுதிக்குட்பட்ட ஆத்தூர் சுங்கச்சாவடி அருகே மாலை 3 மணியளவில் பரப்புரையில் ஈடுபடுகிறார்.

முதலமைச்சர் விஜய்யின் இந்த பரப்புரையில் பங்கேற்க 5 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு அதிகமான அளவிலான மக்களை காவல்துறை அனுமதிக்காது. முதலமைச்சர் விஜய்யின்  இந்த பரப்புரையில் கர்ப்பிணி, சிறுவர், சிறுமிகள் ஆகியோருக்கு அனுமதி கிடையாது. மேலும், வயதானவர்கள், மாற்றுத் திறனாளிகள், உடல்நலம் குன்றியவர்கள் ஆகியோருக்கு அனுமதி கிடையாது.

கட்டாய வெற்றி நெருக்கடியில் தவெக?

முதலமைச்சர் விஜய் சாலை வலம் வந்த பிறகு தனது பரப்புரையை மேற்கொள்கிறார். முதலமைச்சர் விஜய் இன்று மதுராந்தகம் தொகுதிக்கு வருவதால் தொகுதி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்திலும் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. தனிப்பெரும்பான்மை இல்லாத தவெக அரசுக்கு இந்த இரண்டு தொகுதிகளின் வெற்றி மிக மிக முக்கியமாக அமைந்துள்ளது.

இன்று பரப்புரையில் ஈடுபட உள்ள முதலமைச்சர் விஜய் தற்போது தமிழ்நாட்டையே உலுக்கி வரும் ஜெம் வீரமணி விவகாரம் குறித்து பேசுவார் என்று கருதப்படுகிறது. மேலும், இந்த விவகாரத்தில் கடந்த கால திமுக அரசின் செயல்பாடுகள் குறித்தும் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் இடைத்தேர்தல்:

முதலமைச்சர் விஜய் மதுராந்தகம் தொகுதியில் மட்டுமின்றி தாராபுரத்திற்கும் விரைவில் பரப்புரையில் ஈடுபட உள்ளார். ஆளுங்கட்சியாக தவெக பொறுப்பேற்ற பிறகு நடக்கும் முதல் இடைத்தேர்தல் என்பதால் இது விஜய்க்கு மிக மிக முக்கியமான தேர்தல் ஆகும்.

இந்த தேர்தலைப் பொறுத்தமட்டில் அதிமுக எம்எல்ஏ-க்களாக பொறுப்பேற்றவர்கள் பதவியை ராஜினாமா செய்து தவெக-வில் போட்டியிடுவது பெரும் எதிர்ப்பை, பின்னடைவை தவெக-விற்கு ஏற்படுத்தியுள்ளது. மேலும், ஆளுங்கட்சியான தவெக அரசுக்கு ஆதரவு அளித்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியே தனது வேட்பாளர்களை களமிறக்கியுள்ளது.

மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த 2 தொகுதிகளின் இடைத்தேர்தல் முடிவுகள் வரும் அக்டோபர் 9ம் தேதி வெளியாக உள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks