CM Vijay: அஜித் ஓட்ட, விஜய் கொடியசைக்க..! கார் ரேஸில் இணையும் தல & தளபதி - போட்டி நேரம், இடம், நேரலை முழு விவரம்

CM Vijay: அஜித் ஓட்ட, விஜய் கொடியசைக்க..! கார் ரேஸில் இணையும் தல & தளபதி - போட்டி நேரம், இடம், நேரலை முழு விவரம்
News Image

CM Vijay Ajith Car Race: தொழில் முதலீடுகளை ஈர்க்க நேற்று இரவு லண்டனிற்கு புறப்பட்ட முதலமைச்சர் விஜய் வரும் 17ம் தேதி சென்னை திரும்ப உள்ளார்.

கார் பந்தயத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்:

தமிழ்நாட்டிற்கான தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான தனது முதல் வெளிநாட்டு பயணத்தை முதலமைச்சர் விஜய் மேற்கொண்டுள்ளார். நேற்று இரவு சென்னை விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட அவர், அடுத்த ஒரு வாரத்திற்கு ஒருங்கிணைந்த இங்கிலாந்தில் பல்வேறு தொழில் முதலீட்டாளர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி, தமிழ்நாட்டில் முதலீடு செய்ய அழைப்பு விடுக்க உள்ளார். அதோடு, அங்கு வசிக்கும் தமிழ் வம்சாவளியினரை சந்திப்பது உள்ளிட்ட ஏராளமான நிகழ்ச்சிகளும் திட்டமிடப்பட்டுள்ளன. அந்த வகையில் சில்வர்ஸ்டோனில் நாளை நடைபெறும் அஜித்குமார் பங்கேற்கும் கார் பந்தயத்தை, முதலமைச்சர் விஜய் கொடியசைத்து தொடங்கி வைக்க உள்ளார்.

கார் பந்தயம் - முழு விவரம்:

சில்வர்ஸ்டோனில் நடைபெறும் மிச்செலின் லெ மான்ஸ் கோப்பை பந்தயத்தை, முதலமைச்சர் விஜய் கொடியசைத்து தொடங்கி வைக்க உள்ளார். இந்த சாம்பியன்ஷிப் தொடரின் ஐந்தாவது சுற்றில் விஜய் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, இந்திய ஓட்டுநர்களுக்கான தனது ஆதரவை தெரிவிக்க உள்ளார். லே மான்ஸ் கப் போட்டி அமைப்பு வெளியிட்டுள ட்விட்டர் பதிவில், “இந்த வார இறுதியில் சில்வர்ஸ்டோனில் ஒரு சிறப்பு விருந்தினர் பச்சைக்கொடியை அசைத்துத் தொடங்கி வைக்கப் போகிறார்! சி. ஜோசப் விஜய். இந்திய நடிகரும், தமிழக முதலமைச்சருமான விஜய் இங்கிலாந்தில் உள்ள நமது இந்திய ஓட்டுநர்களை ஆதரிப்பதற்காகவும், 44 கார்கள் கொண்ட பந்தயத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைப்பதற்காகவும் எங்களுடன் இணையவுள்ளார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கார் ரேஸில் இணையும் தல - தளபதி:

இந்திய நடிகரும் பந்தய வீரருமான அஜித் குமார், விராஜ் நிறுவனத்தின் அஜித் ரெட்ஆன்ட் அணிக்காக LMP3 புரோ/ஆம் பிரிவில் ஃப்ரான்சின் ரோமெய்ன் வோஸ்னியாக்குடன் இணைந்து இந்த போட்டியில் பங்கேற்க உள்ளார். முன்னாள் ஃபார்முலா ஒன் பந்தய வீரரான நரேன் கார்த்திகேயன் மற்றும் ஆதித்யா படேல் ஆகியோர் LMP3 பிரிவில் அஜித் ரெட்ஆன்ட் ரேசிங் அணிக்காக களமிறங்குகின்றனர். அவர்களுக்கு விஜய் தனது ஆதரவை தெரிவிக்க உள்ளார். 2 மணி நேரம் நீடிக்கும் இந்த போட்டியானது இந்திய நேரப்படி நாளை மாலை 5.15 மணியளவில் தொடங்க உள்ளது. ஆனால், இந்த போட்டிக்கான நேரடி ஒளிபரப்பு இந்தியாவில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சில்வர்ஸ்டோன் பந்தயம், 5.891 கி.மீ. நீளமுள்ள கிராண்ட் பிரிக்ஸ் சுற்றுப்பாதையில் நடைபெறும். இந்த சீசன் அக்டோபர் மாதம் போர்டிமாவோவில் நிறைவடையும். 2016-ல் தொடங்கப்பட்ட மிச்செலின் லெ மான்ஸ் கோப்பை என்பது, ஐரோப்பிய லெ மான்ஸ் தொடர் மற்றும் 24 மணி நேர லெ மான்ஸ் போன்ற போட்டிகளை நோக்கி முன்னேற விரும்பும் ஓட்டுநர்களுக்கான ஒரு பாதையாக வடிவமைக்கப்பட்ட போட்டியாகும்.

இதையும் படியுங்கள்: TN Weather News: சென்னையில் நள்ளிரவில் திடீர் மழை, 9 மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை

மோட்டார் ஸ்போர்ட்ஸ் ஆய்வு

இதனிடையே தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ”மாநிலத்தில் ஏற்கெனவே வலுவாக நிலைபெற்றுள்ள வாகன மற்றும் மின்சார வாகன உற்பத்திச் சூழலை அடிப்படையாகக் கொண்டு. உலகத்தரம் வாய்ந்த ஒரு 'மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம் மாநிலத்தில் அமைக்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பை முன்னெடுத்துச் செல்லும் வகையில், உலகின் முன்னணி மோட்டார் ஸ்போர்ட்ஸ் விளையாட்டு உள்கட்டமைப்பு வசதிகளை நேரில் பார்வையிட்டு, அவற்றின் சிறந்த நடைமுறைகளை அறிந்துகொள்வது பயனுள்ளதாக இருக்கும்.

இதன் ஒரு பகுதியாக, புகழ்பெற்ற 'சில்வர்ஸ்டோன் மோட்டார் ரேசிங் சர்க்யூட்-ஐ பார்வையிடத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம், அங்குள்ள சுற்றுப்பாதை வடிவமைப்பு, பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் இத்தகைய வளாகங்களைச் சிறப்பாகவும் வணிக ரீதியாகவும் செயல்படுத்துவதற்கான சிறந்த நடைமுறைகள் குறித்து விரிவாக அறிந்துகொள்வதுடன், மோட்டார் ஸ்போர்ட்ஸ் விளையாட்டு உள்கட்டமைப்பு, விளையாட்டுச் சுற்றுலா மற்றும் அதனுடன் தொடர்புடைய சிறப்பு வாகனத் தொழில்கள் ஆகியவைகளில் உள்ள வாய்ப்புகளையும் அறிந்து கொள்ள இயலும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks