எந்தவித முறையான அறிவிப்பும் இல்லாமல் முதலமைச்சர் விஜய் மேற்கொண்டுள்ள வெளிநாட்டு பயணத்தின் பின்னணி என்ன என்று திமுக ஐடி விங் சரமாரியாக கேள்வி எழுப்பி விளாசியுள்ளது.
லண்டன் சென்ற முதலமைச்சர் விஜய்
தமிழ்நாட்டில் தவெக ஆட்சிப் பொறுப்பேற்று 4 மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் முதலமைச்சர் விஜய் முதல்முறையாக வெளிநாட்டு பயணம் மேற்கொண்டுள்ளார். தொழில் முதலீடுகளை ஈர்க்க லண்டன் பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக நேற்றிரவு வீட்டிலிருந்து விமான நிலையம் புறப்பட்ட அவருக்கு வழியெங்கும் பொதுமக்களும், தவெக தொண்டர்களும் உற்சாக வரவேற்பளித்தனர். அவர்களின் அன்புகளைப் பெற்றுக் கொண்ட விஜய் கையெடுத்து கும்பிட்டும், கையசைத்தும் தனது நன்றியைத் தெரிவித்தார்.
இதற்கிடையில் செப்டம்பர் 12ம் தேதி லண்டனில் நடைபெறும் சில்வர்ஸ்டோன் கார் பந்தய போட்டியையும் முதலமைச்சர் விஜய் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். இந்த கார் பந்தயத்தின் நடிகர் அஜித்தை விஜய் சந்தித்து பேசவுள்ளார். இங்கிலாந்தைச் சேர்ந்த பல நிறுவனங்கள் தமிழ்நாட்டில் உற்பத்தி ஆலைகளை நடத்தி வரும் நிலையில் அதன் தொடர்பை மேலும் வலுப்படுத்தவும், புதிய முதலீடுகளை ஈர்க்கும் வகையிலும் இந்த பயணம் அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எந்த தகவலும் இல்லை
வழக்கமாக ஒரு மாநில முதலமைச்சர் அரசு முறைப் பயணமாக வெளிநாடு சென்றால் அவருடைய பயண நிகழ்ச்சி நிரல், மற்றும் பயண நோக்கங்கள் குறித்த விவரங்கள் முன்கூட்டியே வெளியிடப்படும். சில அரிதான நிகழ்வுகளின்போது தான அவை ரகசியம் காக்கப்படும். முதலமைச்சர் எந்த நாடு செல்கிறார், யாரை சந்திக்கிறார், என்ன மாதிரியான ஒப்பந்தம் கையெழுத்தாகும் போன்றவையெல்லாம் முன்கூட்டியே ஊடகங்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும். ஆனால் முதலமைச்சர் விஜய் மேற்கொண்டுள்ள லண்டன் பயணம் பற்றி இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனை திமுக ஐடி விங் கடுமையாக விமர்சித்துள்ளது.
தனிப்பட்ட முறையில் பயணமா?
தனது சமூக வலைத்தளப் பக்கத்தில், “அரசுமுறைப் பயணமா? கள்ளப் பயணமா? .. கடந்த காலங்களில் முதல்வரின் வெளிநாட்டு பயணம் என்றால் முன்பே அரசின் அதிகாரப்பூர்வ செய்தி வெளியீடு, பயண திட்டம் அரசுமுறை சந்திப்புகள், வெளிநாட்டு வாழ் தமிழர்களுடனான சந்திப்புகள் உள்ளிட்ட விவரங்கள் வெளியிடப்படுட்டு திட்டமிடப்பட்டிருக்கும்!
ஆனால் இப்போதோ, வழக்கம்போல முதல்வர் வெளிநாடு பயணம் என்ற செய்தி நடுபக்க சினிமா கிசுகிசு போல கசிய விடப்படுகிறது! எந்த அதிகாரப்பூர்வ வெளியீடும் இல்லை விவரமும் இல்லை. அப்படியானால் முதல்வர் உண்மையில் அரசுமுறைப் பயணமாக வெளிநாடு செல்கிறாரா? அல்லது தனிப்பட்ட முறையில் அவரது நண்பா நண்பிகளுடன் பயணம் போகிறாரா ?
இப்படி யாருக்கும் தெரியாமல் யாரிடமும் சொல்லாமல் ஏற்கனவே திருச்சி ஏர்போர்ட்டில் இருந்து தெறிச்சி ஓடியவர் இப்போது சென்னை ஏர்போர்ட்டிலிருந்து எங்கே செல்லப் போகிறார்? எதற்காக பத்திரிகையாளர்கள் சந்திப்புகூட அறிவிக்கவில்லை? அரசுமுறைப் பயணத்தில் அப்படியென்ன ரகசியம்? என சரமாரியாக திமுக ஐடி விங் சரமாரியாக கேள்வியெழுப்பியுள்ளது.
Source: Read Full Article