மதுராந்தகம் தொகுதி இடைத் தேர்தலில் தவெக வேட்பாளருக்குப் பிரச்சாரம் செய்ய முதல்வர் விஜய், ஆத்தூர் வந்துள்ளார்.

அங்கு அவர் பேசியதாவது:

’’முதலமைச்சராக இங்கு நான் வரவில்லை. இடைத் தேர்தலுக்காக ஓட்டு கேட்டு வந்துள்ளேன். உங்க வீட்டுப் பிள்ளையாக, அண்ணனாக, தம்பியாக, மகனாக ஓட்டு கேட்டு வந்திருக்கிறேன்.

தமிழ்நாட்டில் ஆபாச நதி ஓடிக்கொண்டு இருக்கிறது. திமுகவில் தலைவர் முதல் நிர்வாகிகள் வரை அவதூறாகவே பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

என் தங்கச்சி மரகதம் குமரவேல்…

என் தங்கச்சி மரகதம் குமரவேலுக்கு தயவுசெய்து விசில் சின்னத்துக்கு ஓட்டு போடுங்கள். விசில் சின்னத்துக்கு நீங்கள் ஓட்டு போடுவது, மகளிர் பாதுகாப்புக்கு நீங்களே கொடுக்கும் உறுதி.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை, திமுக தலைவர் ஸ்டாலினே ஆபாசமாகப் பேசினார். திமுகவுக்கு வாக்களிப்பது, பெண்கள் மீதான ஆபாச பேச்சை ஆதரிப்பது ஆகிவிடும்.

திமுகவின் கிளைக் கழகமான அதிமுக

பாஜகவின் கிளைக் கழகமாக இருந்த அதிமுக, தற்போது திமுகவின் கிளைக் கழகமாக மாறி விட்டது. அரசியலுக்கு நாங்கள் (தவெக) குழந்தைதான். ஆனால் மக்களின் குழந்தை.

திமுகதான் பாஜக, பாஜகதான் திமுக!

எப்போது பார்த்தாலும் பாஜக உள்ளே வந்துவிடும் என்று பூச்சாண்டி காட்டுகின்றனர். டெல்லியில் உள்ள திமுகதான் பாஜக. தமிழ்நாட்டில் உள்ள பாஜகதான் திமுக.

வாயைத் திறங்க ஸ்டாலின் சார்!

தமிழ்நாட்டில் சிறுமிகளைச் சீரழித்த ஒருவனைத் தூக்கி உள்ளே வைத்துவிட்டோம். ஆனால் திமுக ஆட்சியில் நடந்த இந்தக் குற்றம்பற்றி ஸ்டாலினோ, மற்றும் பலரோ வாயையே திறக்கவில்லை. இதில் கூடவா கூட்டு வைப்பீர்கள்?

ஸ்டாலின் என் SWEET UNCLE!

மு.க.ஸ்டாலின்தான் எதிர்க்கட்சித் தலைவர்கூட ஆகவில்லையே, ஏன் விமர்சிக்கிறேன் என்கிறார்கள். தேர்தலில் ஜெயித்தாலும் தோற்றாலும் அவர் என்னோட ஸ்வீட் அங்கிள்!''.

இவ்வாறு முதல்வர் விஜய் பேசினார்.

Source: Read Full Article