தவெக அரசின் முத்தான திட்டமாக அறிவிக்கப்பட்ட பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைத்தார்.

காலை உணவுத்திட்டம்

அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் மதிய உணவு திட்டம் பல்லாண்டு காலமாக அமலில் இருந்து வரும் நிலையில், கடந்த திமுக ஆட்சியில் அப்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காலை உணவுத்திட்டத்தை அறிமுகம் செய்து தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தால் லட்சக்கணக்கான குழந்தைகள் பயனடைந்தனர். 5 வகுப்பு வரையிலான தொடக்கப்பள்ளியில் மட்டுமே இந்த திட்டம் செயலில் இருந்து வந்தது. இதனிடையே தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் நடந்து தவெக ஆட்சிப் பொறுப்பேற்றது. விஜய் முதலமைச்சராக பதவியேற்ற நிலையில் பல திட்டங்கள் ஒவ்வொன்றாக தொடங்கி வைக்கப்பட்டு வருகிறது.

காலை உணவுத்திட்டம் விரிவாக்கம்

அந்த வகையில் உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் என்ற பெயரில் நடுநிலைப்பள்ளி 8ம் வகுப்பு வரை இந்த திட்டம் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. இதனை சென்னை திருவான்மியூர் காந்தி கிராமம் பகுதியில் அமைந்துள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார். இதற்காக வேட்டி சட்டையில் வந்திறங்கிய அவரை அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, ஜெகதீஸ்வரி உள்ளிட்டோர் வரவேற்றனர்.

மழைச் செல்வங்களின் மாம்பழ பாடலை கேட்டு மகிழ்ச்சியோடு கைதட்டிய முதல்வர் விஜய் ☺️#CMJosephVijay‌ #CMVijay‌ pic.twitter.com/bSHRngefMS

— BOSS TVK ❤️💛❤️ (@BossTVK) September 22, 2026

பள்ளி மாணவர்களுடன் உணவருந்திய விஜய்

இதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கு சர்க்கரை பொங்கல் பறிமாறி இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து மாணவர்களின் நடுவில் ஒதுக்கப்பட்ட இடத்தில் அமர்ந்து அவர்களுடன் உணவருந்தினார். அப்போது அங்கிருந்த மாணவ, மாணவியர்களிடம் கலந்துரையாடினார். தொடர்ந்து அந்த நடுநிலைப்பள்ளியில் ஒவ்வொரு வகுப்பாக சென்ற விஜய் மாணவ, மாணவியர்களை நன்றாக சாப்பிட வேண்டும் என அறிவுரை வழங்கினார். பல மாணவ, மாணவியர்கள் தங்களின் அபிமான விஜய் மாமாவை பார்த்த மகிழ்ச்சியில் திக்குமுக்காடினர். சிலர் சுட்டித்தனம் செய்தனர். அவற்றையெல்லாம் விஜய் ரசித்து பார்த்தார்.

அங்கிருந்த ஆசிரியர்களிடம் கலந்துரையாடிய விஜய் பின் விடைபெற்று செல்லும் முன் பள்ளிக்கு வெளிப்பகுதியில் கூடியிருந்த மக்களை கண்டு கையசைத்தார். இதனால் அங்கிருந்தவர்கள் ஆர்ப்பரித்தனர்.

Source: Read Full Article