Mahindra City To Kilambakkam Metro: மஹிந்த்ரா சிட்டி தொடங்கி கிளாம்பாக்கம் வரையிலான மெட்ரோ வழித்தடமானது 23 கிலோ மீட்டர் நீளத்திற்கானதாகும்.

மஹிந்த்ரா சிட்டி டூ கோடம்பாக்கம் மெட்ரோ சேவை:

சென்னை மெட்ரோ ரயில் சேவையை விரிவுபடுத்தும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு வருகிறது. நகரின் உட்பகுதிகளை மட்டுமின்றி, வெளிவட்டத்தில் உள்ள தொழிற்பூங்காங்கள் உள்ளிட்ட பகுதிகளுக்கான அணுகலையும் எளிமைப்படுத்தும் வகையில் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மஹிந்த்ரா சிட்டியை, தென்மாவட்ட பயணங்களுக்கான மையமாக உள்ள கிளாம்பாக்கம் பேருந்து முனையத்துடன் இணைக்கும் வகையிலான புதிய மெட்ரோ ரயில் திட்டம் வடிவமைக்கப்படுகிறது. குறிப்பாக எதிர்கால போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு விரிவான சாலை போக்குவரத்து மற்றும் எளிதான மெட்ரோ ரயில் பயணம் ஆகியவற்றை இணைக்கும் வகையில் விரிவான திட்ட அறிக்கை தயாராகி வருகிறதாம்.

ரூ.3,500 கோடி பட்ஜெட்

முன்மொழியப்பட்டுள்ள மஹிந்த்ரா சிட்டி தொடங்கி கிளம்பாக்கம் வரையிலான 23 கிலோ மீட்டர் நீள வழித்தடமானது, எதிர்கால மெட்ரோ காரிடரை மனதில் கொண்டு வடிவமைக்கப்பட்டு வருகிறது. தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முதலில் இந்த பகுதியில் ஒரு உயர்த்தப்பட்ட 6 வழிச்சாலையை அமைக்க உள்ளது. அதன் பிறகு சாலையின் மேலே மெட்ரோவிற்கான மின்வழிப்பாதை ஏற்படுத்தப்பட உள்ளது. இந்த சாலையில் சுங்கச் சாவடியும் அமைக்கப்பட உள்ளது. இந்த 6 வழிச்சாலை மற்றும் மெட்ரோ திட்டத்தின் கூட்டு மதிப்பு சுமார் 3 ஆயிரத்து 200 கோடி தொடங்கி 3 ஆயிரத்து 500 கோடி ரூபாய் வரை இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.

முதலில் 6 வழிச்சாலை..!

வருங்கால மெட்ரோ வழித்தடத்திற்குத் தேவையான மையத் தூண்களையும், மேம்பாலத்தையும் அமைக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திட்டமிட்டுள்ளது. இதில், மெட்ரோ திட்டத்திற்குத் தேவையான பியர்கள் மற்றும் பியர் கேப்களும் அடங்கும். சாலை பணிகள் முழுமையடைந்த பிறகு, மெட்ரோ நிர்வாகமானது கர்டர்கள், தண்டவாளங்கள் மற்றும் மின்மயமாக்கல் போன்ற பணிகளை மேற்கொள்ளும். முன்மொழியப்பட்ட இந்த உட்கட்டமைப்பு, மேம்பாலச் சாலைக்கு மேலே எதிர்காலத்தில் ஒரு மெட்ரோ வழித்தடத்தை அமைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு வருகிறது.

30 ஆண்டுகளுக்கான தீர்வு..!

சென்னையின் அதிகரித்து கொண்டிருக்கும் நகரத்திற்கு உள்ளே வரும் போக்குவரத்துக்கான ஒரு நீண்டகாலத் தீர்வாக இந்த மேம்பாலச் சாலை திட்டமிடப்படுகிறது. முன்மொழியப்பட்ட இந்தச் சாலை விரிவாக்கமானது, அடுத்த 30 ஆண்டுகளுக்கு நகரின் உள்வரும் போக்குவரத்தைப் பூர்த்தி செய்யும் என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் எதிர்பார்க்கிறது. மஹிந்திரா சிட்டி - கிளாம்பாக்கம் வழித்தடமானது இந்த விரிவான போக்குவரத்துத் திட்டத்தின் ஒரு பகுதியாகும். இதனால் தென்மாவட்டங்களுக்கான பயணம் எளிதாகிறது என்பதோடு, தொழிற்பூங்காக்களின் அணுகலையும் எளிதாக்கி பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகை செய்கிறது.

இதையும் படியுங்கள்: Fishermen Alert: இன்று கடலில் எங்கெல்லாம் செல்லக்கூடாது..! Low Pressure, மீனவர்களுக்கான வானிலை மையம் எச்சரிக்கை

திட்டத்தின் பலன்கள்:

விரிவான திட்ட அறிக்கை தயாராகி வரும் நிலையில் அதற்கு அனுமதி கிடைத்ததும், டெண்டர் உள்ளிட்ட பிற பணிகள் விரைவில் தொடங்கும்.

இந்த திட்டம் பயன்பாட்டிற்கு வந்தால் கடுமையான போக்குவரத்து நெரிசல் சமயத்தில் 60 முதல் 90 நிமிடங்கள் எடுத்துக்கொள்ளும், மஹிந்த்ரா சிட்டி முதல் கிளாம்பாக்கம் வரையிலான பயணம் வெறும் 15 முதல் 20 நிமிடங்களுக்கு குறையும்

மெட்ரோவுடன் ஒருங்கிணைக்கப்பட்ட மேம்பால ஆறுவழிச்சாலையானது, உள்ளூர் வாகனங்கள், அதி வேக சரக்கு வாகனங்கள் மற்றும் வெகுஜன மக்கள் பயணிக்கும் மெட்ரோ ரயில் ஆகியவற்றை ஒரே நேரத்தில் தனித்தனி வழித்தடங்களில் பயணிக்கச் செய்து, ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெரிசலை கணிசமாக குறைக்கும்

நீண்ட தூரப் பயணிகள், கனரக வர்த்தக வாகனங்கள் மற்றும் தினசரி தொழிற்சாலைப் போக்குவரத்து ஆகியவை ஜிஎஸ்டி சாலையின் தரைப்பகுதியை சார்ந்து இருப்பது குறைகிறது

பிரமாண்டமான கிளம்பாக்கம் பேருந்து நிலையத்தை மஹிந்த்ரா வேர்ல்ட் சிட்டி போன்ற தென்னிந்திய வேலைவாய்ப்பு மையங்களுடன் நேரடியாக இணைத்து, தனியார் சாலைப் போக்குவரத்தைச் சார்ந்திருப்பதைக் குறைக்கிறது

ஜிஎஸ்டி சாலையின் தற்போதுள்ள மையப் பகுதியை ஒட்டியே புதிய திட்டம் வடிவமைக்கப்படுவதால், விரிவான இடிப்பு அல்லது தரைமட்டத்தில் இயங்கிவரும் வணிகங்கள் மற்றும் சொத்துக்களுக்கு ஏற்படும் இடையூறுகள் மிகவும் கணிசமாகவே உள்ளன

Source: Read Full Article