Chennai Metro: கோடம்பாக்கம் டூ பனகல் பார்க் ரூட்டில் பிரச்னை ஓவர்.. டபுள் டனல், 5KM நீளம் - மெட்ரோ சேவை எப்போது?

Chennai Metro: கோடம்பாக்கம் டூ பனகல் பார்க் ரூட்டில் பிரச்னை ஓவர்.. டபுள் டனல், 5KM நீளம் - மெட்ரோ சேவை எப்போது?
News Image

Chennai Metro Kodambakkam Panagal Park: சென்னை மெட்ரோ நிர்வாகத்தின் கோடம்பாக்கம் டூ பனகல் பார்க் வரையிலான ரயில் சேவை வரும் ஜுன் 2027ம் ஆண்டு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ சுரங்கம் தோண்டுவதில் சாதனை:

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகள் நகரின் பல்வேறு பகுதிகளிலும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக சுரங்கப்பாதை அமைக்கும் பணியில் மெட்ரோ நிர்வாகம் புதிய சாதனை படைத்துள்ளது. அவாது மீனம்பாக்கம் விமான நிலையம் மற்றும் விம்கோ நகரை இணைக்கும் நீல வழித்தடத்தில் பயணிகள் சேவைக்கு இடையூறு விளைவிக்காமல், ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள இரட்டைச் சுரங்கப்பாதை மெட்ரோ பாதையின் கீழ் வெற்றிகரமாக புதிய சுரங்கம் தோண்டி முடிக்கப்பட்டுள்ளது. நந்தனம் மற்றும் சைதாப்பேட்டை மெட்ரோ நிலையங்களுக்கு இடையே, பயன்பாட்டில் உள்ள நந்தனம் மெட்ரோ சுரங்கப்பாதைக்கு நேர் கீழே இரண்டு சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் ஒன்றை ஒன்றை கடந்து சென்றுள்ளன. இதனால் இரண்டாம் கட்டத் திட்டத்தின் 4-ஆம் வழித்தடத்தின் நிலத்தடிப் பிரிவில் இருந்த முக்கியப் பொறியியல் மற்றும் சிக்கலான பணி வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டுள்ளது.

கோடம்பாக்கம் - பனகல் பார்க் வழித்தடம்:

கோடம்பாக்கம் பகுதியில் தொடங்கி பனகல் பூங்கா வரையிலான நிலத்தடிப் பாதை பணிகள் ஜூன் 2027 வாக்கில் நிறைவடையும் என சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் திட்ட இயக்குநர் அர்ஜுனன் தெரிவித்துள்ளார். தலா 5.8 மீட்டர் அகலம் கொண்ட இந்தப் புதிய சுரங்கங்கள், தரைக்குக் கீழே 20 மீட்டருக்கும் அதிகமான ஆழத்தில் அமைக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள நந்தனம் மெட்ரோ சுரங்கப்பாதைகள் தரைக்குக் கீழே சுமார் 10 மீட்டர் ஆழத்தில் அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

செங்குத்து இடைவெளியானது, சுரங்கத் துளையிடும் இயந்திரங்களை ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள மின்பாதையின் கீழ் பாதுகாப்பாகச் செல்ல அனுமதித்துள்ளது. இந்தப் பொறியியல் சாதனையானது, காரிடார் 2-இன் கீழ்பாக்கம் பகுதியில் முன்னர் எட்டப்பட்ட ஒரு மைல்கல்லை அடிப்படையாகக் கொண்டது. அங்கு, காரிடார் 2-இன் கீழ் ஏற்கனவே இருந்த கீழ்பாக்கம் மெட்ரோ நிலைய நீள சுரங்கப்பாதையின் அடியில் ஒரு சுரங்கத் துளையிடும் இயந்திரம் சென்றது. தற்போது இரண்டு இயந்திரங்கள் வெற்றிகரமாக கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சுமார் 5KM வழித்தட விவரம்:

இந்த வழித்தடமானது போட் க்ளப், நந்தனம், பனகல் பார்க் மற்றும் கோடம்பாக்கம் ஆகியவற்றை இணைக்கும் 4.9 கி.மீ நீளமுள்ள ஒரு பெரிய நிலத்தடி வழித்தடத்தின் ஒரு பகுதியாகும். இந்த முழு வழித்தடமும் டிசம்பர் 2027-க்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. காரிடார்-4 நிலத்தடி வழித்தடத்தில் நான்கு நிலத்தடி ரயில் நிலையங்கள், இரட்டைத் துளையிடப்பட்ட சுரங்கங்கள், பனகல் பூங்காவில் ஒரு குறுக்குப்பாதை, ஒரு Cut & Cover Box, ஒரு 'U' வடிவப் பிரிவு மற்றும் ஒரு மேம்பாலச் சரிவுப்பாதை ஆகியவை அடங்கும். பனகல் பார்கிற்கும் கோடம்பாக்கத்திற்கும் இடையே 1,154 மீட்டர் நீளமும், பனகல் பூங்காவிற்கும் நந்தனத்திற்கும் இடையே 868 மீட்டர் நீளமும் கொண்ட இரட்டைச் சுரங்கங்கள் தயாராக உள்ளன. நந்தனம் சரிவுப்பாதைக்கும் கோடம்பாக்கம் நிலையத்திற்கும் இடையேயான 750 மீட்டர் நீளப் பகுதியும், 290 மீட்டர் நீள Cut & Cover Box பணியும் நிறைவடைந்துள்ளன. மீதமுள்ள சுரங்கப்பாதைப் பணியானது, நந்தனத்திற்கும் போட் கிளப்பிற்கும் இடையே திட்டமிடப்பட்டுள்ள 868 மீட்டர் நீள இரட்டைச் சுரங்கப்பாதையின் 263 மீட்டர் பகுதியை உள்ளடக்கியதாகும்.

இதையும் படியுங்கள்: Kia Carens: மிடில்க்ளாஸ் குடும்பங்களுக்கான தீர்வு..! 25KM மைலேஜ் தரும் 7 சீட்டர் - கியாவின் புத்தம் புதிய பட்ஜெட் MPV

இறுதிகட்ட பணிகள் தீவிரம்:

இரண்டு நீர்மூழ்கி இயந்திரங்களில் ஒன்று, தற்போது அண்ணா சாலையில் உள்ள நந்தனம் நிலையத்திலிருந்து சுமார் 300 மீட்டர் தொலைவில், இறுதி பகுதியை நெருங்கிக் கொண்டிருக்கிறது. அது டிசம்பர் மாதத்திற்குள் போட் கிளப் நிலையத்தை சென்றடைந்த பின்னர், 2027 ஜனவரியில் அதனை மீட்க சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதனால் இப்பிரிவில் மீதமுள்ள நிலையம் மற்றும் சுரங்கப்பாதைப் பணிகள், 2027 டிசம்பர் மாத நிறைவில் முடிக்க முடியும் என்ற நம்பிக்கையை அளிக்கிறது. கோடம்பாக்கம் மற்றும் பனகல் பார்கில், முக்கிய கட்டமைப்புப் பணிகள் இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், நந்தனம் மற்றும் போட் கிளப் நிலையங்களின் பணிகள் ஏறக்குறைய பாதியளவே நிறைவடைந்துள்ளன. அந்த பணிகள் முடிவடைவதை பொறுத்தே, இந்த வழித்தடம் எப்போது முழுமையாக பயனாட்டிற்கு வரும் என்பது தெரியவரும்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks