Chennai Poonamalle To Vadapalani Metro: சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில் தயார் நிலையில் உள்ள முதல் வழித்தடம் பூந்தமல்லி - வடபழனி ஆகும்.

திறக்கப்படாத 14.64KM மெட்ரோ ரயில் வழித்தடம்:

போக்குவரத்து நெரிசலை குறைத்து சென்னையின் பல்வேறு பகுதிகளை எளிதில் இணைக்கும் வகையில், மெட்ரோ ரயில் சேவையின் இரண்டாம் கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதில் பணிகள் முற்றிலுமாக நிறைவடைந்த முதலாவது வழித்தடமானது, பாதுகாப்பு ஒப்புதல் பெற்று 7 மாதங்கள் ஆன பிறகும் கூட, தற்போது வரை பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படவில்லை. 14.64 கிலோ மீட்டர் நீளத்திற்கான வழித்தடத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கும் நிகழ்ச்சிக்கு, பிரதமர் மோடியின் தேதி கிடைக்காததே இந்த தாமதத்திற்கு காரணமாக கூறப்படுகிறது. ஆரம்பத்தில் செப்டம்பர் இறுதியில் இந்த நிகழ்ச்சிக்காக பிரதமர் தேதி ஒதுக்குவார் என கூறப்பட்ட நிலையில், செப்டம்பர் 21ம் தேதி வரையிலும் பிரதமர் அலுவலகத்தில் இருந்து எந்த தகவலும் கிடைக்க்வில்லை என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாக தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றனர். இதனால், இந்த விழா அக்டோபர் முதல் வாரத்திற்கு ஒத்திவைக்கப்படலாம் என கூறப்படுகிறது. வேறு சில திட்டங்கள் மற்றும் நிகழ்வுகளையும் ஒருங்கிணைத்து மெட்ரோ ரயில் சேவை நிகழ்ச்சி ஒருங்கிணைக்கப்படும் என கூறப்படுகிறது.

பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ வழித்தடம்:

பூந்தமல்லி பைபாஸ் தொடங்கி வடபழனி வரையிலான14.64 கிலோ மீட்டர் வழித்தடமானது, 11 உயர்மட்ட ரயில் நிறுத்தங்களை கொண்டுள்ளது. பயணிகள் சேவைக்காகத் தயாராகும் சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டத்தின் முதல் வழித்தடம் இதுவாகும். இங்கு வணிகச் செயல்பாடுகளைத் தொடங்குவதற்கு ரயில்வே பாதுகாப்பு ஆணையரிடமிருந்து நிபந்தனைக்குட்பட்ட தற்காலிக ஒப்புதலானது கடந்த பிப்ரவரி மாதமே பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஒட்டுமொத்தமாக இந்த வழித்தடமானது கலங்கரை விளக்கம் மற்றும் பூந்தமல்லி புறவழிச்சாலைக்கு இடையே 26.1 கி.மீ தூரம் செல்லும் வழித்தடம் 4-இன் ஒரு பகுதியாகும். இரண்டாம் கட்டம் மொத்தம் 118.9 கி.மீ நீளமுள்ள மூன்று வழித்தடங்களைக் கொண்டுள்ளது.

மெட்ரோ ரயில் நிலையங்கள்:

பூந்தமல்லி (டிப்போ / தொடக்கம்)

பூந்தமல்லி பைபாஸ்

காட்டுப்பாக்கம்

ஐயப்பன்தாங்கல்

போரூர் சந்திப்பு

காரம்பாக்கம்

அலப்பாக்கம் சந்திப்பு

வளசரவாக்கம்

ஆழ்வார்திருநகர்

சாலிகிராமம்

வடபழனி

தொடரும் தாமதங்கள்:

ஆரம்பகட்ட ஒப்புதலுக்குப் பிறகு, சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவுறுத்தப்பட்ட நிபந்தனைகளைப் பூர்த்திசெய்து, மே மாதத்தில் ரயில் வேகம் மற்றும் இயக்க எண்ணிக்கையில் தளர்வுகளுடன் அனுமதி பெற்றது. சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கு இடையே, பிரதமர் இந்த வழித்தடத்தைத் திறந்து வைக்கும் ஒரு பிரம்மாண்டமான நிகச்சி திட்டமிடப்பட்டு கடைசி நேரத்தில் தாமதப்படுத்தப்பட்டது. ஆகஸ்ட் மாதத்தில் டெல்லியில் இருந்து காணொலிக் காட்சி மூலம் சென்னை வழித்தடம் திறக்கப்படலாம் என கூறப்பட்டது. ஆனால், அதுவும் கடைசியில் கைவிடப்பட்டது.

இதையும் படியுங்கள்: CSK fixing controversy: மீண்டும் ஃபிக்சிங் சர்ச்சையில் சிக்கிய சிஎஸ்கே - ஒரு போட்டோவிற்கு ரூ.60 லட்சம்? சிக்கிய வீரர்?

பொதுமக்கள் கோரிக்கை:

இந்த வழித்தடத்திற்கு உட்பட்ட போரூர் மற்றும் ஐயப்பன்தாங்கல் பகுதிகளில் குறுகலான சாலைகளால், பொதுமக்கள் தினசரி போக்குவரத்து நெரிசலால் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சென்னை நகர்ப்புறத்தை அணுக இருசக்கர வாகனங்களை தவிர்த்து மெட்ரோ சேவையை பயன்படுத்த தயாராக இருக்கிறோம் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர். பணிகள் முடிவடைந்து 7 மாதங்க்ள் ஆன பிறகும் கூட ஒரு திட்டத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவராதது என்பது ஏற்புடையதல்ல. பிரதமருக்காக காத்திருக்காமல், அமைச்சர்களை கொண்டு ஏன் சேவையை தொடங்கி வைக்கக் கூடாது எனவும் வினவிவருகினனர்.

Source: Read Full Article