Chennai Airport T5 Terminal: புதிய முனையத்தால் சென்னை விமான நிலையத்தின் பயணிகளை கையாளும் திறன் 5.5 கோடியாக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

சென்னை விமான நிலைய விரிவாக்க திட்டம்:

சென்னை விமான நிலையத்தில் ஐந்தாவது முனையத்தை அமைப்பதோடு, பயணிகளுக்கான அணுகலை எளிதாக்கும் வகையில் மேம்பால சாலையை அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளதனவாம். இதுதொடர்பாக மாநில அரசு அதிகாரிகள் மற்றும் விமான நிலைய நிர்வாக ஆணையம் (AAI) அதிகாரிகள் பங்கேற்ற இரண்டாவது ஆய்வுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றுள்ளது. அதில் புதிய முனையம், வழித்தடம் மற்றும் விமான நிலையத்தின் பயணிகளை கையாளும் திறனை மேம்படுத்துவது ஆகியவை குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டதாம். பரந்தூர் திட்டம் ரத்து செய்யப்பட்ட நிலையில், விமான நிலையத்தை அமைப்பதற்கான இடத்திற்கு மத்திய அரசு அனுமதியை பெறும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதற்குள் ஏற்கனவே இருக்கும் விமான நிலையத்தை விரிவாக்கம் செய்யும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

விமான நிலையத்தில் ஐந்தாவது முனையம்:

புதிய ஐந்தாவது முனையம் விமான நிலையத்தின் விமானப் பகுதிக்குள் அமையவிருப்பதால், நகரப் பக்கத்திலிருந்து பயணிகள் நுழைவதற்கு வழிவகை செய்யும் வகையில், மாதா பொறியியல் கல்லூரிக்கு அருகில்தேசிய நெடுஞ்சாலை 32-லிருந்து ஒரு மேம்பால வழித்தடம் முன்மொழியப்பட்டுள்ளது. இது ஆறு வழிப்பாதையாக அமைய வாய்ப்புள்ளதாம். தற்போதைய சூழலில் ஐந்தாவது முனையம் மற்றும் அணுகுசாலைக்கான அடிப்படைக் கட்டமைப்பு மட்டுமே தயாராக உள்ள நிலையில் ஒரு விரிவான திட்டம் தயாரிக்கப்பட வேண்டி உள்ளது. இந்நிலையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், "முனையத்திற்காக ஒதுக்கப்பட வேண்டிய பகுதி, முனையத்திற்கான அணுகலை எவ்வாறு ஏற்படுத்துவது, ஒரு மணி நேரத்திற்கு கையாளப்படும் விமானங்களின் எண்ணிக்கை, அது ஏன் அதிகரிக்கப்படவில்லை” என்பது குறித்தும் விவாதங்கள் நடைபெற்றனவாம்.

விமான நிலையத்தில் புதிய வசதிகள் என்ன?

விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்பட்டால், விமானங்களின் இயக்கம் மற்றும் பயணிகள் போக்குவரத்து ஆகியவற்றின் அடிப்படையில் கையாளும் திறன் எந்த அளவிற்கு அதிகரிக்க முடியும் என்பதை மறுபரிசீலனை செய்யுமாறு மாநில அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளதாம். இந்த முனையம் மற்றும் மேம்பால வழித்தடத்தின் திட்டமிடல் முடிந்தால், அதைக் கட்டி முடிக்க கிட்டத்தட்ட 7-8 ஆண்டுகள் ஆகலாம் என கூறப்படுகிறது. திட்டமிடப்பட்டுள்ள மேம்பால இணைப்பு சாலை சுமார் 5.32 கிலோ மீட்டர் நீளத்திற்கு இருக்கும் என கூறப்படுகிறது.

புதிய முனையத்தில் பலன்கள் என்ன?

ஏற்கனவே விமான நிலையதிற்குள் உள்ள சுமார் ஆயிரத்து 300 ஏக்கர் பரப்பளவிலான நிலத்தை பயன்படுத்தி, சுமார் 2 ஆயிரத்து 500 கோடி ரூபாய் செலவில் புதிய முனையம் கட்டும் திட்டம் பரிசீலனையில் உள்ளது. இந்த விரிவாக்கத்தின் மூலம், புதிய விமான நிலையத்திற்கான தாமதத்தை ஈடுசெய்ய முடியும் என அரசு நம்புகிறது.

இதையும் படியுங்கள்: Chennai ExpressWay: 106KM நீளத்திற்கு 6 வழிச்சாலை..! கிளம்பாக்கம் டூ திண்டிவனம், 120KM ஸ்பீட் - செங்கல்பட்டு ட்ராஃபிக் ஓவர்

புதிய முனையத்தில் ஆண்டிற்கு 2 கோடி பயணிகளை கையாளும் திறன் இருக்கும் என்பதால், விமான நிலையத்தின் ஒட்டுமொத்த பயணிகளை கையாளும் திறன் சுமார் 5.5 கோடியாக உயரும்

மேம்படுத்தப்பட்ட உள்கட்டமைப்பு, செயல்பாட்டுத் தடைகளைக் குறைக்கப்பட்டு சரக்கு போக்குவரத்து அதிகரிக்கப்படும்

திருத்தப்பட்ட சாலை அமைப்புகளும், பகிரப்பட்ட பொது அணுகல் பாதைகளும் சுற்றுவட்டார பகுதிகளுக்கான இணைப்பை மேம்படுத்துகின்றன

வசதியான மற்றும் பயணிகளுக்கான தரமான சேவைகள் மூலம் விமான நிலையத்தின் பயன்பாடு அதிகாரித்து மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி மேம்படும்

Source: Read Full Article