CAG On Smart City: கடன் திருப்பிச் செலுத்தும் திறனில் தமிழ்நாடு தற்போது நிலையான நிலையில் இருந்தாலும், அதிகரித்து வரும் கடன் சேவைச் செலவுகள் கவலைக்குரிய விஷயம் என்று தணிக்கை குழு தெரிவித்துள்ளது.

ஸ்மார்ட் சிட்டி - மத்திய அரசின் தணிக்கை அறிக்கை

மத்திய அரசின் 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஸ்மார்ட் சிட்டி திட்டங்களின் முதல் விரிவான தணிக்கை அறிக்கையில், தமிழகத்தில் நிதி முறைகேடு, அங்கீகரிக்கப்படாத திட்டங்களைச் செயல்படுத்துதல், அங்கீகரிக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்தாதது மற்றும் ஸ்மார்ட் சிட்டிக்காக ஒதுக்கப்பட்ட பகுதிகளுக்கு வெளியே பணிகள் மேற்கொள்ளுதல் உள்ளிட்ட பரவலான விதிமீறல்கள் தலைமை கணக்குத் தணிக்கையாளர் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரூ.10 ஆயிரம் கோடியில் குவிந்த முறைகேடுகள்:

2015 முதல் 2023ம் ஆண்டு வரையிலான தமிழ்நாட்டின் 11 ஸ்மார்ட் நகர திட்டங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. அதில், சென்னை உட்பட ஏழு நகரங்களின் செயல்திறன் தணிக்கையில், தெளிவான நியாயத்துடன் அவசர சூழ்நிலைகளில் மட்டுமே நீக்க அனுமதிக்கும் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தின் (MoHUA) வழிகாட்டுதல்கள் இருந்தபோதிலும், உண்மையான ஸ்மார்ட் நகர முன்மொழிவுகளில் (SCPs) சேர்க்கப்பட்டிருந்த ரூ. 1.602.20 கோடி மதிப்பிலான 52 திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை என கண்டறியப்பட்டுள்ளது. அதே நேரத்தில். ரூ.623.86 கோடி மதிப்பிலான 44 திட்டமிடப்படாத திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இவற்றில், ரூ.184.71 கோடி மதிப்பிலான 21 திட்டங்கள். அங்கீகரிக்கப்பட்ட பகுதி சார்ந்த மேம்பாட்டு (ABD) பகுதிகளுக்கு முற்றிலும் தொடர்பில்லாதவையாக உள்ளன.

இதர திட்டங்களுக்கு பயன்படுத்தப்பட்ட நிதி

ரூ.21.42 கோடி மதிப்பிலான ஐந்து திட்டங்கள், அந்தந்த மாநகராட்சிகளால் நிதியளிக்கப்பட்டிருக்க வேண்டிய வழக்கமான பணிகளாகும். இந்த பட்டியலில் அதிகபட்சமாக திருநெல்வேலியில் ரூ. 314.62 கோடி மதிப்பிலான 15 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. இது ஆய்வுக்கு எடுக்கப்பட்ட திட்டங்களில் 25.84% ஆகும். பெருநகர சென்னை மாநகராட்சி வளாகத்தில் ஒரு பசுமைக் கட்டிடம், கோயம்புத்தூரில் உள்ள நேரு மைதானத்தில் மின்விளக்குகள், திருநெல்வேலியில் ஒரு விருந்தினர் மாளிகை மற்றும் மதுரையில் ஒரு மாநாட்டு மையம் ஆகியவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் இடம்பெறாத பணிகள் ஆகும். இதுபோக கார்கள், கணினிகள், சட்டக் கட்டணங்கள் மற்றும் பிற செயல்பாடுகள் உள்ளிட்ட அனுமதிக்கப்படாத செலவினங்களுக்காக ஆறு நகரங்களால் ரூ.23.83 கோடி பயன்படுத்தப்பட்டதும் கண்டறியப்பட்டுள்ளது.

விளம்பரங்களுக்கு பயன்படுத்தப்பட்ட ஸ்மார்ட் சிட்டி நிதி

சென்னையில், மாநில அரசின் விளம்பரங்களுக்காக ரூ.66.58 லட்சமும், ஸ்மார்ட் சிட்டி அல்லாத திட்டங்களுக்கான ஆலோசகர்களுக்கு ரூ. 18.44 லட்சமும், குடும்பங்களை இடம்பெயரச் செய்வதற்கும் மீள்குடியேற்றுவதற்கும் ரூ. 15.33 கோடியும் செலவிடப்பட்டுள்ளதாம். திருப்பூர், உள்ளாட்சி மன்ற மாநாட்டு மண்டபத்தைப் புதுப்பிப்பதற்கும், 110 இன்ச் எல்.ஈ.டி தொலைக்காட்சி, கணினிகள், அச்சுப்பொறிகள் மற்றும் தளவாடங்களை வாங்குவதற்கும் நிதியைச் செலவிடப்பட்டுள்ளதாம். ஈரோடு, நிலத்தடி கழிவுநீர்ப் பிரிவு ஊழியர்களின் சம்பளத்தை வழங்க நிர்வாக மற்றும் அலுவலகச் செலவுகள் என்ற தலைப்பின் கீழ் ரூ.2.59 கோடியைப் பயன்படுத்தியுள்ளது. அதேசமயம், சேலம் அதே தலைப்பின் கீழ் ரூ. 2.95 கோடியை மாற்றியுள்ளது. மதுரை, இதர மாநகராட்சித் திட்டங்களுக்காக ஒப்பந்ததாரர்களுக்குச் செலுத்த ரூ. 48.36 லட்சத்தைப் பயன்படுத்தியுள்ளது. இவை மத்திய அரசின் வழிகாட்டுதல்கள் மற்றும் திட்ட நெறிமுறைகளின் மீறல்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்: TN Govt: பழனி நிலம் முறைகேடு டூ முன்கூட்டியே கசிந்த ரகசியம் வரை - சிக்கிய குமரகுருபரன் IAS? தூக்கி அடித்த அரசு

விதிகளை மீறிய திமுக அரசு

மத்திய அரசு தனது பங்கான ரூ. 5,000 கோடிக்கும் அதிகமான தொகையை முழுமையாக விடுவித்த போதிலும், பணம் ஒரு ஒருங்கிணைப்பு முகமைக் கணக்கில் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தும் ஸ்மார்ட் சிட்டி விதிகளை மீறி, தமிழ்நாடு ஜூலை முதல் அக்டோபர் 2021 வரையிலான காலகட்டத்தில் எட்டு முறை குறைந்தபட்சம் ரூ. 1,127 கோடியை மாநிலத் துறைகளின் தனிநபர் வைப்புக் கணக்குகளுக்கு (PD) திருப்பிவிட்டுள்ளது.

வட்டி வருவாய் எங்கே?

மாநில அரசிடமிருந்து TUFIDCO-விற்கு நிதி பரிமாற்றம் செய்வதில் 714 நாட்கள் வரையிலும், TUFIDCO-விலிருந்து ஸ்மார்ட் சிட்டி அமைப்புகளுக்கு நிதி பரிமாற்றம் செய்வதில் 960 நாட்கள் வரையிலும் தாமதம் ஏற்பட்டது. இதன் மூலம் ஐந்து நகரங்கள் வட்டியாக ரூ.239.40 கோடியை ஈட்டின. ஆனால் திட்டத்தில் ரூ.149.01 கோடி மட்டுமே திருப்பி விடுவிக்கப்பட்டது. TUFIDCO, குறிப்பிட்ட அங்கீகாரம் இல்லாமல் ரூ. 11 கோடியையும், திண்டுக்கல் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் இல்லாதபோது அதன் பெயரிலும் ரூ. 2 கோடி மாற்றப்பட்டுள்ளது. கோயம்புத்தூரில் நடைபெற்று வரும் 24x7 குடிநீர் விநியோகத் திட்டத்திற்காக ரூ.150.73 கோடி பயன்படுத்தப்பட்டுள்ளது என தணிக்கை அறிக்கையில் ஏராளமான குற்றச்சாட்டுகள் அடுக்கப்பட்டுள்ளன.

Source: Read Full Article