Brics India - Russia: ப்ரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக ரஷ்ய அதிபர் புதின் மூன்று நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்தடைந்துள்ளார்.

இந்தியா - ரஷ்யா ஆயுத ஒப்பந்தம்:

இந்தியாவில் நடைபெறும் ப்ரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக மூன்று நாள் சுற்றுப்பயணமாக, ரஷ்ய அதிபர் புதின் டெல்லி வந்தடைந்துள்ளார். இந்த பயணத்தின் ஒரு பகுதியாக மாஸ்கோவானது. Su-57 ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களை இணைந்து தயாரிப்பது மற்றும் 11 பில்லியன் டாலருக்கும் அதிகமான செலவில் Su-30MKI ரக விமானங்களை 'சூப்பர் சுகோய்'களாக மேம்படுத்துவது ஆகிய பாதுகாப்பு தொடர்பான திட்ட முன்னெடுப்புகளையும் இந்தியாவிடம் வழங்கியுள்ளதாம். புதினுடன் வெள்ளிக்கிழமை நடத்திய பேச்சுவார்த்தையில், வர்த்தகம், உள்கட்டமைப்பு, எரிசக்தி, தொழில்நுட்பம் போன்ற பல்வேறு துறைகள் குறித்து விவாதித்ததோடு, பாதுகாப்பு குறித்தும் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றதாக பிரதமர் மோடி விளக்கமளித்துள்ளார்.

இந்தியாவிற்கு வரும் ரஷ்யாவின் அதிநவீன ஆயுதங்கள்?

இந்தியாவிற்கான இந்த உயர்மட்ட சுற்றுபயணத்தில் வழங்கப்பட்டுள்ள, பாதுகாப்பு துறை சார்ந்த பரிந்துரைகள் தொடர்பாக விரிவான பேச்சுவார்த்தை நடத்த ரஷ்யா திட்டமிட்டுள்ளதாம். Su-57 ஜெட் மற்றும் Su-30MKI அப்க்ரேட்களின் சலுகைகள் மட்டுமின்றி, கூடுதலாக S-400 வான் பாதுகாப்பு அமைப்புகள், பான்சிர்-S1M பாயிண்ட் டிஃபென்ஸ் சிஸ்டம், ரேடார்கள் மற்றும் மூலோபாய நீர்மூழ்கிக் கப்பல்களுக்கான முன்மொழிவுகளையும் புதின் தரப்பு வலியுறுத்தும் என எதிர்பார்க்கப்படுவதாக பாதுகாப்பு துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ரஷ்யா பட்டியலிட்ட ஆயுதங்கள் என்ன?

S-400-இன் 400 கிலோ மீட்டர் ரேஞ்சுடன் ஒப்பிடுகையில், 600 கிலோ மீட்டர் தூரம் வரை ஏவுகணைகளைத் தாக்கக்கூடிய மேம்படுத்தப்பட்ட எடிஷனான தனது S-500 வான் பாதுகாப்பு அமைப்பை பரிசீலிக்குமாறு ரஷ்யா இந்தியாவை தொடர்ந்து வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. S-400-ஐப் பொறுத்தவரை ஒரு இந்திய நிறுவனத்துடன் கூட்டாக இந்தியாவில் பராமரிப்பு, பழுதுபார்ப்பு மற்றும் முழுமையான சீரமைப்பு (MRO) வசதியை நிறுவ ரஷ்யா முன்வந்துள்ளது. உலகில் அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய மூன்று நாடுகள் மட்டுமே ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் போர் விமானத் தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளதால், Su-57 ஜெட் விமானம் இந்தியாவிற்கு ஒரு இயல்பான தேர்வாக 2இருக்கும் என பரிசீலிக்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்: விண்ணப்பித்து ஆண்டுகளாக காத்திருக்கும் பாகிஸ்தான் - கண்டுகொள்ளாதா BRICS அமைப்பு- கார்ட் வருமா?

அமெரிக்காவை புறக்கணித்த இந்தியா..!

அமெரிக்காவிடமிருந்து லாக்ஹீட் மார்ட்டின் F-35 ஸ்டெல்த் போர் விமானங்கள் மீது விருப்பமில்லை என இந்தியா ஏற்கனவே தெரிவித்துவிட்டது. இதனால் மீதமுள்ள ஒரே ஆப்ஷன் Su-57 மட்டுமே ஆகும். ஏனெனில், இந்தியாவின் சொந்த அட்வான்ஸ்ட் மீடியம் காம்பேக்ட் ஏர்க்ராஃப்ட் (AMCA) திட்டம் நிறைவடைய நீண்ட காலம் ஆகும். மேலும் இதன் முதல் சோதனையே 2029-30-க்கு முன்பு நிகழ வாய்ப்பில்லையாம். இந்தியாவின் போர் விமானப் படைப்பிரிவுகள் கவலைக்கிடமான வகையில் 29 ஆகக் குறைந்துள்ளதாலும், AMCA திட்டம் இன்னும் எட்டாக்கனியாகவே இருப்பதாலும், இந்தியா Su-57 ரக விமானங்களை பரிசீலித்து வருகிறது.

அதிநவீன போர் விமானம்

அதேநேரம், ரஷ்யாவிடமிருந்து முழுமையான தொழில்நுட்பப் பரிமாற்றம், ஏவுகணைத் தொகுப்பு மற்றும் 'மேக்-இன்-இந்தியா' திட்டம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு சிறந்த தொகுப்பை எதிர்பார்க்கிறது. இந்தியா தனது கிட்டத்தட்ட 260 Su-30MKI போர் விமானங்களை, ஆரம்பத்தில் 84 விமானங்களை பெறும் ஒரு கொள்முதலை பற்றி விவாதித்து வருகிறது. 11 பில்லியன் டாலர் மதிப்பிலான "சூப்பர் சுகோய்” திட்டத்தில் புதிய AESA ரேடார்கள், நவீன விமான மின்னணுவியல், மேம்படுத்தப்பட்ட மின்னணுப் போர் திறன்கள் மற்றும் புதிய என்ஜின்கள் ஆகியவை அடங்கும். கூடுதலாக, நேரடி கொள்முதல் அல்லது எதிர்கால உள்நாட்டு உற்பத்தி ஏற்பாடுகள் மூலம் ரஷ்யாவிடமிருந்து சுமார் 300 R-37M ஏவுகணைகளை வாங்க இந்தியா திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Source: Read Full Article