மீனாட்சியம்மன் முதல் டெங்கு வரை: தமிழக அரசின் நிர்வாகக் குறைபாடுகளை லிஸ்ட் போட்டு சொன்ன தமிழிசை

மீனாட்சியம்மன் முதல் டெங்கு வரை: தமிழக அரசின் நிர்வாகக் குறைபாடுகளை லிஸ்ட் போட்டு சொன்ன தமிழிசை
News Image

முதலமைச்சர் விஜய் லண்டன் சென்று பல முதலீடுகளை ஈர்த்துள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டாலும், எந்தெந்த முதலீடுகள் தமிழகத்திற்கு வந்துள்ளன என்பது குறித்து தெளிவான தகவல்கள் இல்லை என்று முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை திருவொற்றியூர் அமைந்துள்ள பெருமாள் கோயில் அருகே விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வேத விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் நேரில் வந்து வேத விநாயகரை வழிபட்டு சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கிய அவர், பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கருத்துகளை தெரிவித்தார்.

ஆன்மிகத்திற்கு பக்தர்களுக்கு இடையூறு கூடாது

தமிழ்நாட்டில் ஆன்மிகம் தலைதூக்க வேண்டும் என்று தெரிவித்த தமிழிசை சௌந்தரராஜன், கோயில்களுக்கு வரும் பக்தர்களிடம் செல்போன்களை ஒப்படைக்கச் செய்து, அதற்காக ரூ.5 வசூலிக்கும் நடைமுறை பல இடங்களில் இருப்பதாக கூறினார். இதனால் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுவதாகவும், பல இடங்களில் அந்த நடைமுறையை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியதாகவும் தெரிவித்தார். சில கோயில்களில் இந்த நடைமுறை திரும்பப் பெறப்பட்டுள்ளதாகவும், சில கோயில்களில் இன்னும் நடைமுறையில் இருப்பதாகவும் கூறிய அவர், கோயில்களுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை அரசு ஏற்படுத்தித் தர வேண்டும் என வலியுறுத்தினார்.

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கூடாது

தமிழக அரசு பல்வேறு திட்டங்களை குழப்பமான முறையில் மேற்கொண்டு வருவதாக விமர்சித்த தமிழிசை சௌந்தரராஜன், பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டக்கூடாது என்றார். பட்டினப்பாக்கம் பகுதி மீனவ மக்களின் வாழ்வாதாரத்துடன் தொடர்புடைய இடம் என்பதால், அங்கு தலைமைச் செயலகம் அமைப்பது தொடர்பாக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என அவர் தெரிவித்தார்.

லண்டன் பயணம் குறித்து கேள்வி

தமிழக அரசின் லண்டன் பயணம் குறித்தும் தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பினார். லண்டன் சென்று பல முதலீடுகளை ஈர்த்துள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டாலும், எந்தெந்த முதலீடுகள் தமிழகத்திற்கு வந்துள்ளன என்பது குறித்து தெளிவான தகவல்கள் இல்லை என்று அவர் கூறினார். அமைச்சர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பேசிக் கொண்டிருப்பதாகவும், முதலீடுகள் தொடர்பாக அரசு வெளிப்படையான தகவல்களை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

தமிழகத்தில் டெங்கு அதிகரிப்பு

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருவதாகவும், கொசுக்கள் பெருகுவதற்கு சுகாதாரக் குறைபாடுகளும் ஒரு காரணம் என்றும் தமிழிசை சௌந்தரராஜன் கூறினார். சென்னை மாநகராட்சி மற்றும் தமிழக அரசுக்கு இடையே கருத்து மோதல் இருப்பதாகக் கூறிய அவர், மாநகராட்சி பணிகள் முறையாக நடைபெறவில்லை என விமர்சித்தார். “மேயர் என்ன பணி செய்கிறார் என்பது தமிழக அரசுக்கு தெரியவில்லை; தமிழக அரசு என்ன நினைக்கிறது என்பது மேயருக்கு தெரியவில்லை” என்று அவர் தெரிவித்தார். இதன் காரணமாக பல இடங்களில் குப்பைகள் தேங்கி கிடப்பதாகவும், கொசுக்கள் அதிகரிப்பதாகவும் அவர் கூறினார்.

தமிழ்நாட்டில் ஒரே நேரத்தில் சுமார் 300 டெங்கு காய்ச்சல் பாதிப்புகள் பதிவாகியுள்ளதாக கேள்விப்படுவதாக தெரிவித்த தமிழிசை சௌந்தரராஜன், டெங்கு தடுக்கக்கூடிய நோய் என்பதால் சுகாதார நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார். அரசு மருத்துவமனைகளில் டெங்கு நோயாளிகளுக்கு ரத்தம் தேவைப்படும் நிலையில், போதிய அளவு ரத்தம் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார்.

மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம் குறித்து விமர்சனம்

தொடர்ந்து மதுரை மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம் குறித்தும் தமிழிசை சௌந்தரராஜன் கருத்து தெரிவித்தார். கும்பாபிஷேகத்திற்கு வந்த பக்தர்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்ததாகவும், பக்தர்களை சரியான நேரத்தில் கோயிலுக்குள் அனுமதிக்கவில்லை என்றும் அவர் கூறினார். மேலும், ஆதீனங்களுக்கும் உரிய இடம் வழங்கப்படவில்லை என தகவல்கள் கிடைத்துள்ளதாக தெரிவித்தார்.

இதுபோன்ற சம்பவங்கள் தமிழக அரசின் நிர்வாகத் திறன் குறித்து கேள்வி எழுப்புவதாக கூறிய தமிழிசை சௌந்தரராஜன், மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம் தமிழக அரசின் நிர்வாகத் திறன் குறைபாட்டை வெளிப்படுத்தியுள்ளதாக குற்றம்சாட்டினார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks