காலை உணவு திட்ட சாம்பாரில் சாணிப்பவுடர்.! மாணவர்களுக்கு உயிருடன் விளையாடுவதா.? சீறிய வானதி சீனிவாசன்

காலை உணவு திட்ட சாம்பாரில் சாணிப்பவுடர்.! மாணவர்களுக்கு உயிருடன் விளையாடுவதா.? சீறிய வானதி சீனிவாசன்
News Image

மாணவர்களுக்கான காலை உணவு திட்டம்

பள்ளி மாணவர்களு காலை உணவில் வழங்கப்படும் சாம்பாரில் சாணிப்பவுடர் கலக்கப்பட்டதாக வெளியான செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக பாஜக நிர்வாகியான வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் ராமபையனூர் அரசு நடுநிலைப்பள்ளியில் காலை உணவுத் திட்டம் சாம்பாரில் சாணிப்பவுடரை, அதேஊரைச் சேர்ந்த ஒருவர் மாணவி ஒருவரைக் கொண்டு கலக்கத் தூண்டியதாகக் கூறப்படும் செய்தி கடும் அதிர்ச்சி அளிக்கிறது. ஆசிரியரின் வழக்கமான உணவு பரிசோதனையின் போது இச்சம்பவம் கண்டுபிடிக்கப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டிருக்கிறது. கொஞ்சம் கூட ஈவு இரக்கமின்றி மாணவர்கள் உயிருடன் விளையாடிய இச்சம்பவம் கடும் கண்டனத்திற்குரியது.

சாம்பாரில் சாணிப்பவுடர்

சாணிப்பவுடர் விற்பது சட்டப்படி குற்றம் என்ற நிலையில் சாதாரண மளிகைக் கடையில் கூட விற்பனை செய்யும் அளவிற்கு இதன் புழக்கம் உள்ளது அச்சமூட்டுகிறது. இதுதொடர்பாக சாணிப்பவுடரைக் கலக்கத் தூண்டியவர் கைது செய்யப்பட்டாலும் பள்ளி, விடுதி மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவு, மதிய உணவு மற்றும் அங்கன்வாடி சத்துணவு விஷயத்தில் தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். மேலும் சமீப காலங்களில் சத்துணவு உணவில் பல்லி விழுவது, தரமற்ற பொருட்கள் கொண்டு சமைப்பது போன்றவற்றால் அதனை உண்ணும் மாணவர்கள் உடல் உபாதைகளுக்கு ஆளாகும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருகின்றன.

உணவை பரிசோதிக்க வேண்டும்

எனவே அவ்வப்போது உணவுப் பொருட்களின் தரம் குறித்து ஆய்வும், சுகாதாரமான முறையில் உணவு சமைக்கப்படுகிறதா என்பதையும் பள்ளி நிர்வாகங்கள் உறுதி செய்ய வேண்டும். அதுமட்டுமன்றி, ஒவ்வொருமுறையும் தவறாமல் உணவினை பரிசோதனை செய்த பின்பே மாணவர்களுக்கு வழங்க வேண்டும் எனவும் வானதி சீனிவாசன் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks