ரயில் பயணிகளே கவனம்! இலவச குடிநீர் பாட்டில் விதிமுறைகள் என்ன? தெரிந்துகொள்ளுங்கள்!

ரயில் பயணிகளே கவனம்! இலவச குடிநீர் பாட்டில் விதிமுறைகள் என்ன? தெரிந்துகொள்ளுங்கள்!
News Image

இந்திய இரயில்வே நம் நாட்டின் உயிர்நாடி என்று அழைக்கப்படுகிறது. ரயில் பயணிகளுக்கு பாதுகாப்பான, வசதியான பயணத்தை வழங்குவதே இந்திய ரயில்வேயின் நோக்கமாகும். ரயில்களில் டிக்கெட் செலவு மிகவும் குறைவு. அதேபோல, பாதுகாப்பாகவும் வேகமாகவும் பயணிக்கலாம். அதனால் தான் பெரும்பாலான மக்கள் குறிப்பாக, நடுத்தர மக்கள் ரயில் பயணத்தை அதிகம் விரும்புகின்றனர்.

ரயில்களில் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் வசதிக்காக நிறைய விதிமுறைகள் உள்ளன. சில விதிமுறைகள் பயணிகளுக்கு அபராதம் விதிப்பது, தண்டனை விதிப்பது போன்ற வகையிலும் உள்ளன. ஆனால் பெரும்பாலான விதிமுறைகளின் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் வசதியை உறுதிசெய்யும் வகையிலேயே உள்ளன. ரயிலில் பயணம் செய்யும் போது, குடிநீர் பாட்டில்கள் இலவசமா அல்லது பணம் கொடுத்து வாங்க வேண்டுமா என்ற சந்தேகம் பயணிகளிடம் இருக்கிறது.

ரயில்வே விதிமுறைகளின்படி, அனைத்து ரயில்களிலும் இலவச குடிநீர் பாட்டில்கள் வழங்கப்படுவதில்லை. அப்படி அனைத்து ரயில்களிலும் இலவச தண்ணீர் கிடைக்கும் என்று  நாம்  நினைத்தால் அது உண்மையில்லை. இந்த சிறப்பான இலவச குடிநீர் வசதி பிரீமியம் ரயில்களில் மட்டுமே கிடைக்கும். வந்தே பாரத், ராஜ்தானி அல்லது சதாப்தி போன்ற பிரீமியம் ரயில்களில்  நாம் பயணம் செய்தால் அந்த ரயில்களில் பயணிகளுக்கு இலவச குடிநீர் பாட்டில்கள் வழங்கப்படுகின்றன. கூடுதலாக, இந்த பிரீமியம் ரயில்களின் முதல் மற்றும் இரண்டாம் வகுப்பு (First and Second AC) பெட்டிகளிலும் இந்த வசதி வழங்கப்படுகிறது.

மேலும் ஒரு முக்கியமான குறிப்பு என்னவென்றால்,  'No Food' (உணவு வேண்டாம்) என்ற விருப்பத்துடன் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தாலும் ரயிலில் உங்களுக்கு ஒரு தண்ணீர் பாட்டில் வழங்கப்படும். அதாவது, நீங்கள் உணவு விருப்பத்தைத் தேர்ந்தெடுக்காவிட்டாலும் தண்ணீருக்கான பலன் உங்களுக்கு தொடர்ந்து கிடைக்கும். இந்திய ரயில்வேயின் பிரீமியம் சேவைகளில் குடிநீர் முன்பே தொகுக்கப்பட்டவை ஆகும். அதாவது டிக்கெட் கட்டணத்தின் ஒரு பகுதியாகும். நீங்கள் வந்தே பாரத், ராஜ்தானி அல்லது சதாப்தி போன்ற ரயில்களில் முதல் அல்லது இரண்டாம் வகுப்பில் பயணம் செய்கிறீர்கள் என்றால்,  நாம் இலவச தண்ணீர் பாட்டிலைப் பெறலாம்.

ரயில்வே விதிமுறைகளின்படி, இந்திய ரயில்வேயில் ராஜ்தானி, சதாப்தி, வந்தே பாரத் மற்றும் துரோந்தோ போன்ற பிரீமியம் ரயில்களில் பயணக் கட்டணத்தோடு சேர்த்து குடிநீர் பாட்டில் மற்றும் உணவுக்கான கட்டணம் பெறப்படுகிறது. மேலும், பிரீமியம் ரயில்கள் திட்டமிட்ட நேரத்தை விட 2 மணி நேரத்திற்கு மேல் தாமதமாக இயக்கப்படும் பட்சத்தில் பயணிகளுக்குக் கூடுதல் குடிநீர் பாட்டில்கள் இலவசமாக வழங்கப்படுவது வழக்கில் உள்ளது. சாதாரண ரயில்களில் இலவச குடிநீர் பாட்டில்கள் வழங்கும் திட்டம் எதுவும் இல்லை. வழக்கமான எக்ஸ்பிரஸ் அல்லது மெயில் ரயில்களில், 1 லிட்டர் ரயில் நீர் பாட்டிலை நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச விற்பனை விலையான ரூ. 15 கொடுத்து வாங்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks