“ஓம் காளி.. ஜெய் காளி” ... முழக்கமிட்ட உதயநிதி.. கொதித்தெழுந்த தமிழக பாஜக... கடும் கண்டனம்!

“ஓம் காளி.. ஜெய் காளி” ... முழக்கமிட்ட உதயநிதி.. கொதித்தெழுந்த தமிழக பாஜக... கடும் கண்டனம்!
News Image

மதுராந்தகத்தில் தேர்தல் பரப்புரையில் இந்துக்களின் நம்பிக்கைகளை அவமதிக்கும் வகையில் உதயநிதி ஸ்டாலின் பேசியதாக கடும் கண்டனம் எழுந்துள்ளது.

மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தல்

வரும் அக்டோபர் 6ம் தேதி மதுராந்தகம், தாராபுரம் தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து 2 தொகுதிகளிலும் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக பரப்புரை மேற்கொண்டு வருகின்றன. இரு தொகுதிகளிலும் 5 முனை போட்டி நிலவி வரும் நிலையில் கடந்த சட்டமன்ற தேர்தலில் மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகள் அதிமுக வசம் இருந்தது. இதனால் இடைத்தேர்தலில் யார் ஜெயிக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இதனிடையே மதுராந்தகம் தொகுதியில் திமுக வேட்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ. பரந்தாமன் நிறுத்தப்பட்டுள்ளார். அவரை ஆதரித்து எதிர்க்கட்சி தலைவரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் நேற்று பரப்புரை மேற்கொண்டார்.

ஓம் காளி.. ஜெய் காளி.. உதயநிதி முழக்கம்

இதில் பேசிய அவர், “முதலமைச்சர் விஜய் தனது உரையின்போது ஓம் சக்தி.. பராசக்தி.. திமுக ஒரு தீயசக்தி” என நம்மை திட்டுவார். அப்போது அவர் எதிர்க்கட்சியாகவும், நாம் ஆளும் கட்சியாகவும் இருந்தோம். விஜய் சொல்வதையெல்லாம் நாம் கேட்டுக் கொண்டிருந்தோம். இப்போது நமக்கு சொல்ல வேண்டிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது. திருப்பி தர வேண்டாமா?... ஓம் காளி.. ஜெய் காளி.. தவெக ஒரு ஓடுகாலி என கூறினார். இதை மக்கள் மனதில் பதிய வைக்க வேண்டும் என கூறினார். உதயநிதியின் இந்த முழக்கம் இந்து மத உணர்வாளர்களை புண்படுத்தியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மதுராந்தகத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசும் போது 'ஓம் காளி, ஜெய் காளி' என்று கோஷமிட்டு பின்னர் த வெ க 'ஓடு காலி' என்று எதிரில் நிற்பவர்களை சொல்லுமாறு தூண்டுகிறார் உதயநிதி ஸ்டாலின்.

ஓம் காளி, ஜெய் காளி என்பது ஹிந்துக்களின் நம்பிக்கைகளை, வழிபாடுகளை குறிக்கும் மந்திரம். ஒட்டுமொத்த…
— Narayanan Thirupathy (@narayanantbjp) September 27, 2026

அந்த வகையில் பாஜக மாநில செய்தி தொடர்பாளர் நாராயண் திருப்பதி வெளியிட்டுள்ள பதிவில், “மதுராந்தகத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில் , “ஓம் காளி, ஜெய் காளி” என்று கோஷமிட்டு, பின்னர் தனக்கு எதிரே நிற்பவர்களை “ஓடுகாலி” (தவெகவை நோக்கிய ஒரு ஏளனம்) என்று சொல்லத் தூண்டுகிறார். “ஓம் காளி, ஜெய் காளி” என்பது இந்துக்களின் நம்பிக்கைகளையும் வழிபாட்டையும் குறிக்கும் ஒரு மந்திரமாகும். ஒட்டுமொத்த இந்துக்களின் நம்பிக்கைகளை அவமதிக்கும் வகையில் பேசியதற்காக உதயநிதியை பாஜக வன்மையாகக் கண்டிக்கிறது. ஒரு கேள்வி கேட்கிறேன். இதே முறையில் இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ மத முழக்கங்களைக் கேலி செய்யவும்  உதயநிதி ஸ்டாலினுக்குத் துணிச்சல் இருக்கிறதா? என கேள்வியெழுப்பியுள்ளார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks