விழுப்புரத்தில் பரபரப்பு… மகளை பார்க்கச் சென்ற துணை நடிகை மீது தாக்குதல்? காவல் நிலையத்தில் புகார்

விழுப்புரத்தில் பரபரப்பு… மகளை பார்க்கச் சென்ற துணை நடிகை மீது தாக்குதல்? காவல் நிலையத்தில் புகார்
News Image

விழுப்புரம் : விழுப்புரத்தில் குடும்ப பிரச்சனையில் சினிமா துணை நடிகை மீது தாக்குதல். மருமகன் குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண்ணை மீட்டு தர வேண்டும் என சினிமா துணை நடிகை பிரேமப்ரியா காவல் நிலையத்தில் கண்ணீருடன் புகார்.

சென்னை சாலிகிராமத்தைச் சேர்ந்தவர் சினிமா துணை நடிகை பிரேமபிரியா(45). பல்வேறு தமிழ் சினிமாக்களில் துணை நடிகையாகவும், நகைச்சுவை நடிகையாகவும் நடித்துள்ளார். இவரின் சொந்த ஊர் விழுப்புரம் என்பதால், விழுப்புரம் அடுத்த அயினம்பாளையம் பகுதியில் இடம் வாங்கி வீடு கட்டி வசித்து வருகிறார்.

இவருக்கு பவானி(20) என்ற மகள் உள்ளார். இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் 11-ம் தேதி விழுப்புரம் குழந்தைவேல் நகர் பகுதியில் வசிக்கும் ஆனந்தராஜா, வனிதா இவர்களின் மகன் பிரவீன் குமாருக்கும், பவானிக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. நிச்சயதார்த்தம் நடைபெற்ற மூன்றாவது நாளில் பிரவீன் குமார் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியானது.

இதனால் அதிர்ச்சியடைந்த பிரேமபிரியா திருமணத்தை நிறுத்தி விடலாம் என மகள் பவானியிடம் கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் பவானி கோபித்துக் கொண்டு பிரவீன் குமார் வீட்டிற்கு சென்று விட்டார். பிரவீன் குமாருக்கும் பவானிக்கும் ஆகஸ்ட் 24ஆம் தேதி திருமணம் நடைபெற்ற நிலையில் தொடர்ந்து தாய் பிரேமபிரியாவிடம் பேசுவதை பவானி தவிர்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு 10:30 மணியளவில் மகள் பவானியை பார்ப்பதற்காக பிரேமபிரியா அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது என் பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்து விட்டீர்கள் என பெருமை பிரியா சண்டையிட்டுள்ளார் இதனால் ஆத்திரமடைந்த ஆனந்தராஜா அவரது மனைவி வனிதா, மகன் ஸ்ரீபன்ராஜ் ஆகியோர் பிரேமபிரியாவை கடுமையாக தாக்கியுள்ளனர்.

இதில் காயமடைந்த பிரேமபிரியா விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். இந்நிலையில் தன்னை தாக்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். என் பெண்னிடம் பேசுவதை யாரும் தடுக்கக்கூடாது என கேட்டு விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்தில் பிரேமபிரியா புகார் அளித்துள்ளார். இந்த புகாரியின் அடிப்படையில் காவல்துறையினர் இரு தரப்பையும் அழைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks