"கத்தாதே.." டி காக்கை கெட்ட வார்த்தையில் திட்டிய தெம்பா பவுமா! நடந்தது என்ன? நீங்களே பாருங்க!

"கத்தாதே.." டி காக்கை கெட்ட வார்த்தையில் திட்டிய தெம்பா பவுமா! நடந்தது என்ன? நீங்களே பாருங்க!
News Image

ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளும் மோதிய 2வது ஒருநாள் போட்டி ஜோஹன்ஸ்பர்க்கில் உள்ள வாண்டரேர்ஸ் மைதானத்தில் நடந்தது.

டி காக் - பவுமா மோதல்:

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த இந்த  போட்டியில் முதலில் பேட் செய்த தென்னாப்பிரிக்க அணி 366 ரன்களை இலக்காக ஆஸ்திரேலியாவிற்கு நிர்ணயித்தது. இந்த பாேட்டியில் தென்னாப்பிரிக்காவின் டி காக் - கேப்டன் பவுமா ஆகியோர் இடையே கடும் வார்த்தை மோதல் நடைபெற்றது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடந்தது என்ன?

அதாவது, இமாலய இலக்கை நோக்கி ஆடிய ஆஸ்திரேலியாவிற்கு மிட்செல் மார்ஷ், ட்ராவிஸ் ஹெட் அதிரடியாக ரன்களை குவிக்க பின்னால் வந்த கூப்பர் கன்னூலி, அலெக்ஸ் கேரி, ரென்ஷா, கிரீன், எட்வர்ட்ஸ் தடுமாற 7வது விக்கெட்டிற்கு வந்த ஷேவியர் பார்ட்லெட் ஆட்டத்தில் அனல் பறந்தது.

The moment Temba Bavuma lost his cool at Quinton de Kock during the 2nd ODI vs Australia.👀#TembaBavuma #QuintondeKock #SAvsAUSpic.twitter.com/lBYiF1ELJd
— CREX (@Crex_live) September 29, 2026

அவர் தென்னாப்பிரிக்க பந்துவீச்சை நாலாபுறமும் சிதறவிட்டு பவுண்டரியும், சிக்ஸரும் விளாச தென்னாப்பிரிக்க வீரர்கள் கதிகலங்கினர். ஆட்டத்தின் முக்கியமான தருணத்தில் 48வது ஓவரில் லிசார்ட் வில்லியம்ஸ் வீசிய ஓவரின் 4வது பந்தில் யார்க்கர் பந்தை பார்ட்லெட் தடுக்க முயன்றபோது அது பேடில் பட்டது. அப்போது, அதற்கு எல்பிடபுள்யூ தர அம்பயர் மறுத்துவிட்டார்.

கத்தாதே:

உடனே விக்கெட் கீப்பர் டி காக் அப்பீல் செய்யுமாறு கேப்டன் தெம்பா பவுமாவிடம் கேட்டுக்கொண்டே இருந்தார். இதனால், கடுப்பாகிய கேப்டன் தெம்பா பவுமா கத்தாதே என்று டி காக்கிடம் கூறியதுடன் தகாத வார்த்தைகளாலும் அவரைத் திட்டினார். பின்னர், அப்பீலும் செய்தார்.

3வது நடுவர் தெம்பா பவுமாவின் அப்பீலை சரி பார்த்தபோது ஷேவியர் பார்ட்லெட் அவுட் என்று தெரியவந்தது. இதையடுத்து, மைதானத்தில் இருந்த நடுவர் அவுட் என்று தனது முடிவை மாற்றினார். பவுமா - டி காக்கிடம் காட்டமாக பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தென்னாப்பிரிக்க அபார வெற்றி:

அபாரமாக ஆடிய ஷேவியர் பார்ட்லெட் 28 பந்துகளில் 2 பவுண்டரி 5 சிக்ஸருடன் 50 ரன்கள் எடுத்து அவுட்டாக, தென்னாப்பிரிக்க 32 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முன்னதாக, முதலில் பேட் செய்த  தென்னாப்பிரிக்க அணிக்காக கேப்டன் தெம்பா பவுமா 103 ரன்களும், டேவிட் மில்லர் 142 ரன்களும் விளாசி அசத்தினார்.

மொத்தம் உள்ள 3 போட்டிகளில் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று தென்னாப்பிரிக்கா தொடரை வென்ற நிலையில், இரு அணிகளும் மோதும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடக்கிறது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks